நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்....அசிங்கபடுத்துனீங்க..கேவலபடுத்துனீங்க...அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..! ( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான் போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...)
உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...?
ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே காலகாலமா அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும் கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..!
அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. !
வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...!
அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....!
கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..!
வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..!
ஆனா ஒரு கண்டிசன்...!
"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!"
வெளியூர்க்காரன்
நீ அவன் பக்கமா..? என் பக்கமா..?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
SUPER...SUPER...SUPER....
Enna da post edum varlaye nu pathen... Sura-ku apram nee yaaru pakkam nu theriyama confuse ayitome Veliyooru... Ippo purinju pochu!!!
:-)))))))))
Suuupparu...
i would like to share this in my FB. Shall i?
:-))))
உனக்கு வஞ்சனையில்லாம வாய்க்கு வக்கனையா வஞ்சப்புகழ்ச்சி அணி வருதுடா மச்சி :)
கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..!
**********************************************************************
1600 வருஷங்களுக்கு முன்ன வாழ்ந்த பல்லவ இளவரசர் ஒருத்தர் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க சைனாவுக்குப் போய் அங்க இருந்த ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ணிருக்கார். அவரோட டி.என்.ஏ தான் உன் தலைவன் உடம்புல ஓடுதுன்னு கண்டுபுடிச்சிட்டாய்ங்க.
இனி அடுத்து என்னவெல்லாம் ஆகப்போகுதோ...?
யப்பா இது ஆகாச சொருகலா இருக்கு சாமி!
@Muthu
:-)))))))))
Suuupparu...
i would like to share this in my FB. Shall i?
//
என்னண்ணே இது கேள்வி?..
பொத்தினாப்படி எடுத்துப்போடுங்க..
பயபுள்ள ஒண்ணும் சொல்லமாட்டான்...
10ஆவாது கமெண்ட், நானே போட்டிருக்கேன்...
அதுக்கு ஏதாவது துப்பிட்டுப்போ...
:-))) Super!!!
படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) ////
அது என்ன கருமமோ... நேத்து வேலாயுதம் படம் பார்த்துட்டு தக்காளி செத்தாலும் பரவாயில்ல... தலைவர் படத்த பார்த்த திருப்தில ரெண்டு சரக்க ஒண்ணா விட்டுட்டேன்... காலைல இருந்து தலை சுத்துது... அட அந்த தல இல்லை மச்சி... என் தலைதான்.... இதுக்கு காரமட ஜோசியரு எதாச்சும் சொல்லியிருக்காரா? :))
/// மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் ///
இதை அப்படியே நாளைக்கு தின தந்தி, தின மலர் ல மொத பக்கதுல போட்டா மரமண்டை பங்காளிகளுக்கு மூளை வளருமா ???
Very nice...
சிப்பு சிப்பா வர்து
@வெளியூர்
//எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ.//
மச்சி! ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்கிட்ட இருந்து கலக்கலா ஒரு போஸ்ட்... :)
நீங்க வெளியூரு.. இப்படி சொல்ல முடியுது..
நாங்கலாம் உள்ளூர்தான்.. ஏதாவது சொன்ன ஆட்டோ வந்திடுமே..
முடியலடா சாமி
"வேணாம்..இத்தோட நிறுத்திக்கங்க...!
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது
"வேணாம்..இத்தோட நிறுத்திக்கங்க...!
என்னால முடியலைடா சாமீ. எப்படி இப்படி யோசிக்கிறீங்க?
அடடா விஜ்ய்க்கு இப்படி ஒரு ஃபேன் இருப்பது தெரியமா போச்சே.
கலக்கலான காமெடி.. சமீப காலமாக இப்படி வயிற்று வலி வரும் அளவுக்கு சிரிப்புக்கட்டுரை படிக்கலை.. செம././
கலக்கல் தலைவா...விஜய் இத எப்படியாவது படிச்சா, தமிழ்நாடு தப்பிக்கும்
மனசுவிட்டுச் சிரிச்சேன். இப்படி ஒரு வஞ்சப்புகழ்ச்சி கட்டுரைய சமீபத்துல படிச்சதில்ல... எக்ஸலண்ட்! (டாகுடரு படம் ஓடணுங்கறதுக்காக மொட்டை போட்ருக்கற ரசிகனுங்களுக்கு குடுத்தீங்களே ஒரு சாட்டையடி...
மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காக
-சூப்பர் ஐயா...)
மச்சி வெளி ,
பதிவ படிக்கல ஆனா உன் கோவம் புரியுது ,,யோஹன் ன போட்டு தள்றோம்
Semma kalakkal
தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும். உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...!" - I couldn't able to control myself in this line. blasting..
உன் வாய்ல நாய் ஓஒ.....!!!! உனக்கு வேற வேலை புபு பு ....... இல்லையா கோ....... அவனாவது னொரு நாலு பெற சம்பாதித்து வைத்து இருக்கான் !!! அனா நீ அவன் வைத்து குளிர் கைய நினைகீர உனக்கு நல்லது நடக்கும் உனக்கு என் வார்த்தை புரியும்
all suck people thinking about how to hurt this people who love him vijay,they not hurt this type comments is bellow your image ,its like a most bad things again to one actor ,because he is a one man to very calm person in industry ,rajini khanth to most idiot things in all flims ,why you are not say to rajini ,please avoid this type of blog ,your are pottai against do this
இனிமே ஓட்டலைய்யா! உட்ரு!
@@@Unknown says:
உனக்கு நல்லது நடக்கும் உனக்கு என் வார்த்தை புரியும்..///
புரியுதுன்னேன்...இப்டி நடப்ப அன்போட எடுத்து சொல்ல எனக்கு ஆள் இல்ல அண்ணேன்..! இனிமே இந்த மாதிரி நடக்காது...நீங்க போங்க..நான் பார்த்துக்கறேன்...! :)
@unknown....
நன்றி சொல்ல உனக்கு....வார்த்தை இல்லை எனக்கு...."
(என்னிக்காவது சிக்காமயா...போவ...)
தாங்ஸ் பிரதர்...!( சிரிக்காதீங்கடா ...டேய்...)
@@@drraman02 says:
please avoid this type of blog ,your are pottai against do this.///
Johny Johny Yes Papa...!
Eating Sugar..?
No Papa..!
Telling Lies..?
No,Papa..!
Open your mouth.?
O Ha..Ha..Ha..! :)
டாக்டர் ராமன்...:
அவன் ப்ளாகை அவனே அவாய்ட் பண்ணிட்டு பல்லு விளக்க எங்கய்யா போவான்...?
@@@Rettaival's Blog says:
டாக்டர் ராமன்...:
அவன் ப்ளாகை அவனே அவாய்ட் பண்ணிட்டு பல்லு விளக்க எங்கய்யா போவான்...?///
அத கூட நான் எங்கனா மேனேஜ் பண்ணிப்பேன் மச்சி...ஆனா, இந்த டோமர் எழுதிருக்கற இங்கலிஷதான் என்னால தாங்க முடில...என்னா எழுதிருக்கான்னே புரில...! தர்தி கணக்கா சுத்தி சுத்தி கொழப்பி வெச்சுகிது...! தெர்லைனா விட்டுட்டு தமிழ்ல போட வேண்டியதுதான...! செனி எழவு ..!
@@@shankar says:
பதிவ படிக்கல ஆனா உன் கோவம் புரியுது ,,யோஹன்ன போட்டு தள்றோம்..//
யோகன விடு மச்சி...அத அப்பறம் போட்டு தள்ளிக்கலாம்...ஆனா எவ்ளோ எகத்தாள மசுரு இருந்தா பதிவையே படிக்காம வந்து போட்டு தள்ளுவோம்னு ஒரு கமெண்ட்ட போட்டுட்டு போவ...! வக்காளிதக்க உன்ன போட்னும்ன்டா மொதல்ல...! :)
drraman02 says:
Nov 2, 2011 5:35:00 PM
all suck people thinking about how to hurt this people who love him vijay,they not hurt this type comments is bellow your image ,its like a most bad things again to one actor ,because he is a one man to very calm person in industry ,rajini khanth to most idiot things in all flims ,why you are not say to rajini ,please avoid this type of blog ,your are pottai against do this
**********************************************************************
இப்போ நீ என்ன பண்ற...நடு ரோட்டுக்கு வந்து சத்தம் போட்டு நீ எழுதிருக்கதை படிக்கிற...! எவனுக்காவது புரியுதுன்னு சொல்லிரட்டும்...! அவனோட சேர்ந்து நீயும் சூசைட் பண்ணிக்கிற...!
வாந்தி எடுங்கடா...ஆனா விரலை விட்டு எடுக்காதீங்கடா...!
யோவ்... என்னோட கமண்ட்ஸ் எல்லாம் ஸ்பேம்ல போட்டுட்டியேய்யா!!! சரி... இந்தக் கமன்டையும் ஸ்பேம் பண்ணிட்டு, வேலையைப் பாரு...
:-)
// TERROR-PANDIYAN(VAS) said...
@வெளியூர்
//எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ.//
மச்சி! ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்கிட்ட இருந்து கலக்கலா ஒரு போஸ்ட்... :)//
தல டெரர் சொன்னது ரீப்பீட்டு.... சிரிச்சு மாளல....
செம்ம கலாய்... :-)
அப்போ மெட்ராஸ்ல கடை எல்லாம் மூட சொன்னது அயல் நாட்டு சதி இல்லயா..!! இப்பத்தான் எல்லாம் விளக்கமா புரியுது..!!
டாக்குட்டறு விசை வாழ்க . . .
அகில உலக விசை ரசிகர் மன்ற தலைவர் வெளியூரு வாழ்க . . .
மதவனுங்க எல்லாம் எப்படியோ போய் தொலைங்க . . .
நான் முடிவு எடுத்துட்டேன் , இனிமே தளபதி படத்த முதல் நாள் பாக்குறது இல்லன்னு , டிரக்டா 50 வது நாள் பாக்குறதுன்னு ( எப்படியும் படம் அத்தன நாள் ஓடாதுகிற நம்பிக்கைதான் )
nanum aroorkaranthannu sollikka perumapaderen
ungal sindhani arivu apparam
ungal kalaippu arputham,good talent nanba