- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 16 comments and to comment

ஓவரா சிகரெட் அடிக்காதீங்க தம்பி...மெடிடேசன் யோகால்லாம் பண்ணுங்க..இந்த பழக்கத்த அடியோட விட்டர்லாம்னு போன வாரம் அட்வைஸ் பண்ண பக்கத்துக்கு வீட்டு கேசவன் சார நேத்து புல் டைட்ல சிகெரெட்டோட  லிப்டுகிட்ட பார்த்துட்டு, என்ன சார் ஆபிஸ் பார்ட்டியான்னு கேட்டதுக்கு அவர் சிரிச்சுகிட்டே சொன்ன பதில்....இல்ல தம்பி என் பொண்டாட்டி ஊருக்கு போயிருக்கா...! 

எல்லா ஆம்பளைங்களுக்குமே பொண்ணுங்கங்கற ஒரு விசயத்த தாண்டி ரசிச்சு அனுபவிக்கரதுக்கு குட்டி குட்டியான விஷயங்கள் நெறைய இருக்குங்க...யாருக்கும் தெரியாம திருட்டு தம்மு, பிட்டு படம், பைக்ல திருகிகிட்டு பறக்கறது , நைட் ஷோ சினிமா , பசங்களோட விடிய விடிய தண்ணியடிச்சுட்டு புல் டைட்ல கதைபேசிகிட்டே வாந்தி எடுத்துட்டு அதுலயே குப்புற படுத்து மட்டையாகறது...இப்டி நெறைய..நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாமே அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி அனுபவிச்சதா இருக்கும்...! கல்யாணத்துக்கு அப்பறம் எதுக்குன்னே தெரியாம பல விசயங்கள காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு மத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சுடறான்...!

அந்த ஐஸ்க்ரீம் வினாடிகள் கல்யாணத்துக்கு அப்பறம் எங்க போச்சு...? அது திரும்ப கெடைக்குமா.. ஏன்  கெடைக்காது பாஸ்..கண்டிப்பா கெடைக்கும்..தங்கச்சி கல்யாணம், தம்பிக்கு நிச்சயதார்த்தம், அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல, அப்பாவுக்கு ஹார்ட் சர்ஜரி இப்டி எதாச்சும் ஒரு ரீசன்க்காக டிக்கெட்லாம் போட்டுட்டு ,ஊர்ல காலைல பஸ் ஸ்டாண்டுக்கு அவங்க தம்பிய கார் எடுத்துட்டு வர சொல்லிட்டு , அப்பாவுக்கு சென்ட்டு பாட்டில்லேர்ந்து உளுத்தம் பருப்பு வரைக்கும் அவங்க குடும்பத்துக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி அழகா பேக்கிங்க்லாம் முடிச்சிட்டு உங்ககிட்ட வந்து பவ்யமா கேப்பாங்க..."என்னங்க..ஊருக்கு போயிட்டு ஒரு பத்து நாள் இருந்துட்டு வரட்டுங்கலான்னு...!" அப்போ தேவை இல்லாம ஓவர் ஆக்ட் பண்ணி அடி வாங்காம அவங்கள அன்போட பஸ் ஏத்திவிட்டு வாங்க...!

பஸ் ஏத்திவிட்டுட்டு அப்டியே கண்ணை மூடி யோசிச்சு பாருங்க..கிராபிக்ஸ்ல உங்க கைல போட்ருந்த விலங்க உடைச்சு , அவங்க போற பஸ்ஸ ஓட்டிகிட்டு போற டிரைவர் உங்கள  ஜெயில்லேர்ந்து ரிலீஸ் பண்ற மாதிரியே இருக்கும்..அடுத்த பத்து நாளைக்கு நீங்க ஒரு சுதந்திர பறவை..இந்த மாதிரி வாய்ப்பு அடிக்கடி கெடைக்காதும் ஓய்..! ஒரு செகேன்ட் கூட மிஸ் பண்ணாம நீ அனுபவிக்கரதுலதான்காணும் இருக்கு உம்ம சமர்த்து...!


வாழ்க்கைய உங்களுக்கு புடிச்ச மாதிரி கொஞ்ச நாள் வாழுங்க...மனசுக்கு புடிச்சத செய்றவந்தான் ஓய் மனுஷன்...பிரெண்ட்ஸ வீட்டுக்கு கூப்ட்டு புல்லா தண்ணியடிச்சிட்டு. சிகரெட்ட ஊதி தள்ளிகிட்டு விடிய விடிய கதை பேசிட்டு விடியகாலைல நல்லா திக்கா ஒரு நாத்த வாந்தி எடுத்துட்டு அதுலயே குப்புற விழுந்து தூங்குவிங்க தெரியுமா....அதுல சாந்தி அடையும்யா ஒரு ஆம்பளையோட ஆத்மா... அதான் ஓய் ஜாலி..உனக்கு தண்ணியடிக்கற  பழக்கம் இல்லையா..அடிக்க கத்துகிட்டு வாந்தி எடு...வயறு வலிக்க வாந்திய எடுத்து அனுபவிச்சாதான்யா தெரியும் அந்த சொகம்..! இதத்தான்  திருவள்ளுவர் அப்பவே சொன்னாரு..


"வாந்தி எடுத்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்,"

" வயறு வீங்கி சாவார்" ன்னு...! 


எல்லா ஆம்பளைங்களும் இப்புடிதானா...ஒருத்தன் கூட நல்ல புருஷன் இல்லையான்னு தாய்குலங்கள் பதர்றது எனக்கு புரியுது....ஒபாமாலேர்ந்து நம்ம எதிர்க்கட்சி தலைவர் வரைக்கும் இந்த உலகத்துல இருக்கற ஆம்பளைங்களும் எல்லாருமே இப்புடித்தான்..ஒரே ஒருத்தன தவிர..!


“எவன் ஒருத்தன் பொண்டாட்டிய ட்ரைன் ஏத்திவிட்டுட்டு, அந்த பிரிவு தாங்க முடியாம அந்த ட்ரைன் போன தண்டவாளத்த கட்டி புடிச்சு அழுவறானோ “,”எவன் ஒருத்தன் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பிட்டு டெய்லி நைட் எட்டு மணிக்கு கால் பண்ணி சாப்ட்டியாடா தங்கம்னு கன் மாதிரி கேட்டு பாசத்த கொட்ரானோ”,(எட்ரைக்கு கால் பண்ண வாய் கொளரும்..) “எவன் ஒருத்தன் பொண்டாட்டி பக்கத்துல இல்லாத ஒவ்வொரு நொடியும் வேதனைலையும் பிரிவுலயும் துடி துடிச்சு போய் எப்பவுமே பொண்டாட்டி நெனைப்பாவே இருக்கானோ...! அவன் மட்டும்தாங்க நல்ல புருஷன்..!” அப்டிபட்டவன் இந்த பூமிலேயே ஒரே ஒருத்தன்தான் இருக்கான்..!


அவன் வேற யாரும் இல்லைங்க...!


உங்கள் அன்பு தம்பி வெளியூர்க்காரன்தான் ...!


(டேய் டேய் டேய்...ராஸ்கல்ஸ்.இதுகெல்லாம் கைதட்டகூடாது ஆமாம்..)


மொத்தத்துல இந்த உலகத்துல வெளியூர்க்காரன் மட்டும்தாங்க கட்டுப்பாடான , கட்டுசிட்டான பாசமுள்ள புருஷன்..அவன தவிர எல்லா ஆம்பளைங்களும் பொண்டாட்டி எப்படா ஊருக்கு போவா... பாட்டில எப்ப ஒப்பன் பண்ணுவோம்னு வெயிட் பண்ற நாதாரிங்கதான் .!


@ஆல் ஆம்பளைங்க ...


அண்ணன் அப்டி ஓரமா பாட்ஷா ரஜினிகாந்த் சார் மாதிரி ஸ்டூல் போட்டு உக்காந்துக்கறேன்...இப்டி ஒரு விசயத்த எழுதுன புண்ணியத்துக்கு நீ ஜானிவாக்கரும் கிங்ஸுமா நல்லா இருப்படா தம்பின்னு கண்ணீர் விட்டு பாராட்ட விரும்பற அன்பர்கள் அப்டியே கைல முத்தம் குடுத்துட்டு அப்பீட் ஆய்ட்டு அப்பாலிக்கா வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்...பாராட்டும் நோக்கில் உணர்ச்சிவசப்பட்டு கம்மெண்ட் போடும் ஆர்வகோளாறு அன்பர்கள் ஏதும் உளறாமல் இருக்கவும் தங்கள் காலை பிடித்து அன்போடு கதறி கேட்டுகொள்ளபடுகிறீர்கள்...!


இவ்ளோ நேரம் நல்லா க்ரிப்பாதான பேசுனான் ..திடீர்னு ஏன்  இப்டி கவுந்தடிக்ரான்னு தோணுதா....?

யோவ்.,இத ஊருக்கு போயிருக்கர ஏன் பொண்டாட்டி படிச்சாலும் படிப்பாயா..! 


தயவு செஞ்சு போயிருயா..! 


வெளியூர்க்காரன்    

16 Responses so far.

 1. மச்சி..இன்னைக்கு சனிக்கிழமை..

  ஊறுகாய் பாட்டலோடு நான் வரேன்.. சரக்கை மட்டும் ரெடி பண்ணிவை...

  இந்த பதிவில் எனக்கு எழுந்த சந்தேகங்களை.. அப்போ பேசலாம்...
  :-)

 2. @@பட்டு-
  //இந்த பதிவில் எனக்கு எழுந்த சந்தேகங்களை.. அப்போ பேசலாம்...//

  ***********************************


  இதுல சந்தேகம் வேறையா?

 3. @@வெளியூரு-


  நாசமா போய்யா.... ஒண்ணுமே புரியல... நீ தமிழ்ல எழுது...

 4. Ulagam oru nadaga medai....
  Athil anaivarum......??????

 5. @NAAI-NAKKS
  Ulagam oru nadaga medai....
  Athil anaivarum......??????
  //

  பிரதர்... சொல்லவந்ததை முழுசா சொல்லாம, அது என்ன கொஸ்டின் மார்க்?..

  நாங்களா யோசனை பண்ணவா?...


  வாந்தி எடுக்கனுமுனு நினச்சா.. முழுசா எடுக்கனும்..

  இல்லை ..

  எழுமிச்சை சாறு குடிச்சு, திரும்பவும் உள்ள தள்ளிடனும்.. ரைட்டா?


  சரி விடுங்க.. இப்பவாது முழுசா சொல்லுங்க...
  :-))0

 6. இன்னிக்கி சனிக்கிழம அதுவுமா பதிவ போட்டு இருக்கே ..,இந்தா வாங்கிக்கோ ROFL ( இன்னாட இது வெளி ப்ளாக் நொண்டியடிக்குது..,பட்டு குண்டர் படை எங்கே? )

 7. //இன்னிக்கி சனிக்கிழம அதுவுமா பதிவ போட்டு இருக்கே ..,இந்தா வாங்கிக்கோ ROFL ( இன்னாட இது வெளி ப்ளாக் நொண்டியடிக்குது..,பட்டு குண்டர் படை எங்கே? )//

  யோவ் மாமு இன்னைக்கு சனிக்கிழமைல அதான் ரொம்ப பிஸி... எல்லோரும் தேக்காவுல குடை கேண்டீன்ல டைகர் டீ குடிச்சுட்டு இருக்கோம்.... தல பட்டாவும் அங்கதான் இருக்காரு... :-)

  //இந்த பதிவில் எனக்கு எழுந்த சந்தேகங்களை.. அப்போ பேசலாம்...//

  அநேகமா நைட்டு வந்து இந்த சந்தேகத்தைலாம் கேட்பாருன்னு நினைக்கிறேன்... :-)

 8. என்னாங்காணும் வெளியூர்...அந்த பட்டாபட்டியோட சேந்துட்டீரா...பாஷையெல்லாம் பின்னுறீர்!

 9. vinu says:

  மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் !!!!!

 10. @All..//
  பார்க்கவே சந்தோசமா இருக்குதுங்கானும்...!
  எத்தன கால ஆச...மொத்தமே பத்து கமெண்ட்டுதான்...! ஒழிஞ்சுது ஓய் கமெண்ட் ஏரியால சாட்டிங் மாத்ரி மொக்க போடற கலாச்சாரம்...! :)

  இப்பவும் சொல்றேன்...எவனும் மொக்க போடாதீங்க...! சிரிப்பு வர்ற மாத்ரி கமெண்ட் தோணுனா மட்டும் போடுங்க...! உன் கால்லுல விழுந்து கேட்டுக்கறேன்...! :)

 11. @வெளியூரு-

  யோவ்.... இப்போ உனக்கு என்ன வேணும்? ஒழுங்கா பிளாக்க இழுத்து மூடிட்டு போயிடு...

  இனிமே இந்தப் பேருல பிளாக்க பார்த்தேன், ரெட்டைய சும்மா சுத்தி சுத்தி அடிப்பேன்...

  #அப்புடித்தேன் மொக்க போடுவோம்... நீ இன்னா பண்ணுவியோ பண்ணிக்க....
  :)

 12. This comment has been removed by the author.
 13. http://twitter.com/#!/actorpowerstar


  இத விட பெரிய தண்டனை உன்னக்கு கிடையாது மச்சி :)

 14. //ஆர்வகோளாறு அன்பர்கள் ஏதும் உளறாமல் இருக்கவும் தங்கள் காலை பிடித்து அன்போடு கதறி கேட்டுகொள்ளபடுகிறீர்கள்...! //

  அந்த பயம் இருந்தா சரிதான் மாப்ள

 15. SATHISH says:

  வெளியூர்காரா... உங்க சேட்டை தாங்கல.. உங்களால டைவர்ஸ் கேஸ் பாக்குற வக்கீலுங்களுக்கு நல்ல வருமானம் வர போகுது...

  சதீஷ்

  sathish.chandran@blogspot.com

 16. nalla comedy ponga.... nice to share.. www.rishvan.com