- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 36 comments and to comment


பொண்ணுங்களே அழகுதாங்க..அதுவும் கனகாம்பர பூ வெச்சுகிட்டு செகப்பு தாவணி போட்டுக்கிட்டு ஓரகண்ணால பார்த்துட்டு போற புள்ளைக இன்னும் அழகு...ச்சே ச்சே..நான் என் கொழுந்தியாவ பத்தி சொல்லல..பொதுவா சொல்றேன்...! அப்டிபட்ட அழகான பொண்ணுங்க சொல்ற பொய் மட்டும் எப்டிங்க அழகா இல்லாம இருக்கும்...! அதான் அழகு பொண்ணுங்களும் கியூட்டான பொண்ணுங்களும் செகேன்ட் பார்ட்ட வெளியூர்க்காரன் அப்பாவி ஆம்பளைங்களுக்காக இதோ அர்ப்பணிக்கறான்..ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட முதல் பகுதியை படிக்காத பக்கிக அத படிச்சிட்டு (அழகு பொண்ணுங்களும், கியுட்டான பொய்களும்) அதுக்கப்றம் இத படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்...ஏன்னா அப்டி படிச்சாதான் எழுதுன எனக்கே இது புரியும்...!

இந்த பதிவ படிக்கறதுக்கு முன்னாடி , இது எந்த மாதிரி ஆண்களுக்காக எழுதுனதுங்கரத முன்னாடியே சொல்லிடறேன்...பதிவ படிச்சிட்டு..."டேய் வெளியூரு,என்னா மச்சான் பேத்தர..கூரை மேல சோற வீசுனா நூறு காக்காடா நண்பா"ன்னு கெத்து பறக்க விடற பசங்களுக்கு என்னோட பதில்...மச்சி..இது உனக்கு எழுதுனது இல்ல..நீ வா நாம தண்ணியடிக்கலாம்...!   அதே மாதிரி "என்னது பொண்ணுங்களுக்கும் நம்மள மாதிரியே உணர்சிகள்ளாம் இருக்கா..? அவங்களும் ஆம்பளைங்கள மாதிரி சைட்டல்லாம் அடிப்பாங்களா..?"ன்னு ஆச்சர்யம் காட்ற அன்பர்கள் ஆபிஸ் பிரிண்டர்ல இந்த பதிவ பிரிண்ட் அவுட் எடுத்து, வீட்டு செவுத்துல அழகா மாட்டி மனப்பாடம் செய்யுமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்...!

பார்ட் IIவின், டாப் த்ரீ  கியூட் பொய்கள்..!

எங்கடா தேடிகிட்ருக்க மரமண்ட..அது இங்க இருக்குன்னு சொல்லி குடுக்கற மாதிரியே இருக்கும்...பசங்கள க்ராஸ் பண்ற பொண்ணுங்க சுடி ஷால சரி பண்ணும்போது...அவுக அத சரி பண்றத பார்த்தோன்னதான் இந்த கூமாங்குக்கு ஒரு அபிப்ராயமே வரும்...அட இத நம்ம பார்க்கனும்ல அப்டீன்னு...அப்டி ஒரு அந்தர் பெர்பார்மன்சா இருக்கும் பொண்ணுக சைட்லேர்ந்து...ஆனா அவுகள நீங்க பார்த்துடீங்க...நீங்க காலி...கூட நின்னுகிட்டு ஷால சரிபண்ணியும் பசங்களோட அபிப்ராயத்த பெற முடியாத அட்டு டிக்கட்டுகிட்ட கொந்தளிப்பாங்க..பொருக்கி பய..எப்டி பார்க்கறான் பாரு..எல்டர் சிஸ்டர், எங்கர் சிஸ்டரோட  பொறந்ததுள்ள  போலருக்குன்னு...! ஆனா மனசுக்குள்ள இப்டி ஓடிகிட்ருக்கும்..எப்டி பார்க்காம இருப்பான்..கெளம்பும்போது ஒரு மணி நேரம்ல மேக் அப்பொட சேர்த்து தேவையான அரெஞ்மண்ட்ஸ்லாம்  பண்ணோம்னு...! அதுக்கு பக்கத்துல உள்ள அட்டும் கொதிச்சு பொய் கருத்து சொல்லும்..அதுவும் கட்டம் போட்ட சட்ட போட்டுக்கிட்டு, தூக்கி சீவிருக்கற பையன் ரொம்ப மோசம்.உன்னையே வெறிச்சு பார்க்கறான்டி ..சரியான பொம்பள பொறுக்கியா இருப்பான் போலன்னு... ஆனா அதோட பிஞ்சு மனசுல இப்டி ஓடிற்றுக்கும்...எனக்குதான் இருக்கு...ஹ்ம்ம்...என்னமோ போ...!  

கொஞ்ச நாள் பேசி பழகுன பொண்ணுகிட்ட அழகா இருக்கீங்கன்னு சொல்லி பாருங்க...ரொம்ப கேசுவலா ஓ..அப்டியா அப்டீன்னு சொல்லிட்டு அடுத்த விசயத்த பத்தி பேச ஆரம்பிச்சுருவாங்க...ஆனா அதே பீசு வீட்டுக்கு போயிட்டு அழகா இருந்தேன்னு சொன்னானே அவன் எத சொன்னான் ன்னு விடிய விடிய கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு சுத்தி சுத்தி பார்த்து தனக்குதானே தன்ன ரசிச்சு கொழம்பிகிட்ருப்பாங்க ...கருத்து என்னன்னா..பொண்ணுங்களுக்கு டீட்டைல்ஸ் ரொம்ப முக்கியம் தலைவரே...அழகா இருக்கீங்கன்னு பொதுவா சொல்லாதீங்க...உங்க மனசுல அந்த புள்ளைகிட்ட எந்த கருமம் அழகா தோணுச்சோ அத அழகா ஒரு பிட்டாக்கி அப்டியே பேசும்போது அங்கன்ங்க அங்கன்ங்க தூவி விடுங்க...! லைக்..

எல்லாரும் சிரிச்சு பார்த்துருக்கேன்...ஆனா நீங்க சிரிக்கும்போது மட்டும் சிரிப்பும் சேர்ந்து சிரிக்குது...! கியூட் டு ஸீ...!..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லேட்டா வந்ததுக்கு உதட்ட சுளிச்சு என்னமோ செஞ்சீங்கள்ள..ப்ச்..அப்போ உங்க லிப்ஸ் அப்டித்தாங்க இருந்துச்சு..நீங்க ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கும்போது உங்க பேச பார்த்தா, ஸ்ட்ராபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கற மாதிரி இருக்கு... இப்டி மனச கல்லாக்கிட்டு பிட்டு பிட்டா போட்டு பாருங்க...! அந்த ஒரு வரில அவுக மனசு சந்தோசத்துல குதிச்சு கொந்தளிச்சு , செத்துப்போன அவுக தாத்தாவோட சாத்மா ஆந்தி அடைஞ்சிரும்னா பார்த்துக்கங்க...! ஆனா அவுககிட்டேர்ந்து, அய்யனார் சத்தியமா இப்டி ஒரு ரியாக்சன்தான் வெளில வரும்.அழகா சிரிச்சுகிட்டே, லேசா தலைய சாய்ச்சுகிட்டே கியூட்டா சொல்லுவாங்க...

போடா ஜொள்ளு..ஓவரா வழியாத...!

கடைசியா சொன்னாலும் ரொம்ப முக்கியமான பாய்ண்ட் தம்பி...கவனமா கேட்டுக்கோ...உஷார் பண்ணிகிட்ட்ருக்கற பிகரோ..இல்ல லவ்விக்கிட்ருக்கற பிகரோ...இல்ல கல்யாணம் கட்டிகிட்ட பிகரோ..எல்லா பிகருங்களும் ஈகோங்கற ஒரே குட்டைல ஊருண, வேற வேற கட்டைங்கதாங்க்ரத மனசுல வெச்சுக்க.! வாழ்க்கைல எதாச்சும் பிரச்சன வர்றப்போ இந்த வரி வந்தா மட்டும், அடுத்த செகென்ட் உஷார் ஆய்று...!

ஏம்ப்பா டல்லா இருக்க..? ஏதும் பிரச்சனையா...? இது நீ.

ச்சே ச்சே...அதெல்லாம் ஒன்னும் இல்ல...! இது அவுக...

மச்சான் சத்தியமா சொல்றேன்.எழுதி வெச்சுக்கோ..பீசு மனசுக்குள்ள பெருசா எதையோ போட்டு கொழப்பிகினு செம காண்டுல இருக்குன்னு அர்த்தம்...நீ அத புரிஞ்சுக்காம அதான் அவளே ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாளேன்னு நெனைச்சுகிட்டு, முட்டிய மடக்கிகினு, குஷி மூட்ல, வெளியூர்க்கானன்னு ஒருத்தன் ப்ளாக் எழுதுராண்டி..ஐயோ சாமி... அப்டீன்னு மொக்கைய ஆரம்பிச்சிராத...! தேவை இல்லாம அந்த புள்ள மனசுக்குள்ள என்ன திட்டும்..நாசமா போறவன்..வெளியூர்கார கம்னாட்டின்னு...! 

அந்த மாதிரி சூழ்நிலையில ஆம்பள சிங்கங்களாகிய நாம, நம்ம உசுரையும் வாழ்க்கையையும் காப்பாதிக்கரதுக்கு கண்டி நடிச்சே ஆக வேண்டிய அபாக்ய கட்டாயத்துல இருக்கொம்ங்க்ரத மனசுல வெய்ச்சுக்க.. நேரா பாத்ரூமுக்கு போ..மூக்க நல்லா சிந்து...உன் பிகரோட அப்பாவ மனசுல நெனைச்சு நல்லா காரி வாஷ் பேசின்ல துப்பு..மூஞ்ச கழுவு..பிரெஷ் ஆகிக்க..வக்காளி தோக்கடிக்கரண்டா சிவாஜி கணேசனன்னு மனசுல நெனைச்சுகிட்டு நேரா போ அந்த பிகருகிட்ட...மூஞ்ச அப்பாவிய மாத்து..கீழ உள்ள டயலாக செண்டிமெண்டா அடி...!

என்னடா பிரச்சன என் கண்ணுகுட்டிக்கு...? என் டல்லா இருக்க...? சொல்லு அம்மு..என்ட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லபோற..! சொல்லு குட்டி...!

பீசு குடம் குடமா கொட்டும்..மொக்கயாதான் இருக்கும்..இருந்தாலும் கேட்டுக்க....உன் பிரச்சனை ஓவர்...நீ அன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்...!

வக்காளி அஞ்சு தடவ பொறுமையா கேட்டும் பதில் சொல்லாத ஆங்காரம் பிடித்த அடங்காபிடாரி பிகர்  வாய்க்கபெற்ற   அன்பர்கள், கீழே உள்ள வரிகளை மனப்பாடம் செய்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்...!

“திரும்ப திரும்ப கேக்றேன்ல...சொல்லி தொலைடி எருமைமாட்டு முண்டம்...சோத்த திங்க்ரியா இல்ல…இல்ல உங்கப்பன மாதிரி  ..!”

Life is all about fun..It will never ends. J

Third part ….Coming soon.

A Veliyoorkaran article.

36 Responses so far.

 1. //ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட முதல் பகுதியை படிக்காத பக்கிக அத படிச்சிட்டு//

  என்ன சார் தமாஷா எழுதுறதா நினைப்பா? படிக்க வரவங்க பக்கிங்க ளா?

 2. @@@@suryajeeva says:
  //ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட முதல் பகுதியை படிக்காத பக்கிக அத படிச்சிட்டு//
  என்ன சார் தமாஷா எழுதுறதா நினைப்பா? ////

  படிக்க வரவங்க பக்கிங்க ளா?///

  ஆமாம் சார்...! :)

  படிச்சிட்டு சிரிப்பு வந்தா மறுபடியும் வாங்க...
  கோவம் வந்தா இனிமே வராதீங்க...!
  :)

 3. ///வக்காளி அஞ்சு தடவ பொறுமையா கேட்டும் பதில் சொல்லாத ஆங்காரம் பிடித்த அடங்காபிடாரி பிகர் வாய்க்கபெற்ற அன்பர்கள், கீழே உள்ள வரிகளை மனப்பாடம் செய்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்...!

  “திரும்ப திரும்ப கேக்றேன்ல...சொல்லி தொலைடி எருமைமாட்டு முண்டம்...சோத்த திங்க்ரியா இல்ல…இல்ல உங்கப்பன மாதிரி ..!”////


  இதை அப்படியே எல்லாரும் follow பண்ணிடுங்க விளங்கிடும் ஹி ஹி ஹி ஹி

 4. யோவ் வெளியூரு நீ ரொம்ப உண்மைய எழுதுற , இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் . எல்லாமே செம மேட்டர் மச்சி இதெல்லாம் என் இப்படி பப்ளிகுட்டி பண்ணுற? , சைலேண்டா எனக்கு மட்டும் மெயில் பண்ண வேண்டியதுதானே . . என்ன வோ போ , but its really funny . keep writing . .

 5. வெளியூர்காரரே உங்க பக்கத்துக்கு இப்ப தான் முதல் தடவ வரேன் ..
  கலக்குறிங்க
  .(“திரும்ப திரும்ப கேக்றேன்ல...சொல்லி தொலைடி எருமைமாட்டு முண்டம்...சோத்த திங்க்ரியா இல்ல…இல்ல உங்கப்பன மாதிரி ..!”)
  இந்த பக்கிக்கு ஒரு சந்தேகம் அந்த டயலாக் ட்ரை பண்ணலாமா .பின் விளைவு எதுவும் வரதே.உங்க அனுபவத்துல சொல்லுங்க

 6. @@@உதவாக்கரை says:
  அந்த டயலாக் ட்ரை பண்ணலாமா .பின் விளைவு எதுவும் வரதே.////

  நீங்க தாராளமா ட்ரை பண்ணலாம்..! எனக்கு எந்த பிரச்சனையும் வராது...!:_

 7. @@@♔ℜockzs ℜajesℌ♔™ says:
  எல்லாமே செம மேட்டர் மச்சி ///

  மேட்டர் பண்றத பத்தி நான் எங்கடா எழுதிருக்கேன்...? ஏண்டா என்னை பொதுமக்கள் முன்னாடி கெட்டவனாகுறீங்க ...?
  ஐயோ ராமா...! :)

 8. உண்மைகளை சொல்றான்டா வெளியூர்காரன்...

 9. suryajeeva said...
  //ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட முதல் பகுதியை படிக்காத பக்கிக அத படிச்சிட்டு//

  என்ன சார் தமாஷா எழுதுறதா நினைப்பா? படிக்க வரவங்க பக்கிங்க ளா?
  **********************************************************************

  இந்த வெளியூர்காரன் எப்பவுமே இப்படிதாங்க...காமெடி பண்றேன்னு கும்பல் சேர்த்துட்டு கலாய்ப்பானுங்க...இவனுங்களை எல்லாம் சும்மாவே விட கூடாது...ராமதாஸ்ட்ட இல்லைன்னா தமிழ்நாடு காங்கிரஸ்ல புடிச்சு கொடுத்துரனும்...!

  மிஸ்டர் வெளியூர்! உங்களுக்கெல்லாம் மண்டைல ஆறாவது அறிவு,வேலாயுதம் எல்லாம் இல்லை...?

 10. அருமை சார்..
  எப்படி சார் இப்படி?
  சிரிச்சு சிரிச்சு.. ஹிஹி..

 11. ஆஹா,
  அருமை,
  பிரமாதம்,
  கலக்கிட்டீங்க....
  :-)

 12. நல்ல(பயனுள்ள !!!!!!!!!) அலசல்

 13. @@@"என் ராஜபாட்டை"- ராஜா says:
  இன்று என் வலையில்
  விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு.///

  உங்கள் பதிவை படித்தேன்..சிரிப்பு சிரிப்பா சிரிச்சு சிருச்சுகிட்டு வந்துவிட்டது போங்கள்...மிகவும் அருமையாகவும் நன்றாகவும் அழகாகவும் கருத்துபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் ஊக்கபூர்வமாகவும் எழுதுகிறீர்கள்...! தொடர்ந்து எழுதுங்கள்...! ஆனால், எழுதிவிட்டு இங்கே வந்து லிங்கை குடுக்காதீர்கள்...தங்களின் மரியாதை கன்னாபின்னாவென கெட்டு குட்டிச்சுவராய் போய்விடும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...!

  ( டெம்ப்ளேட் கமண்ட்ட இன்னொருத தடவ இங்க பார்த்தேன் நீ செத்தடி மச்சி...)

 14. @@@வெளங்காதவன் said...
  ஆஹா,
  அருமை,
  பிரமாதம்,
  கலக்கிட்டீங்க....
  :-)///

  தங்கள் வருகைக்கு நன்றி...!
  ( நார பயலே...வக்காளி உனக்கு இருக்குடா ஒரு நாள்...) :)

 15. @@@வெளியூரு-
  தங்கள் வருகைக்கு நன்றி...!
  ( நார பயலே...வக்காளி உனக்கு இருக்குடா ஒரு நாள்...) :)

  **********************************

  அன்னிக்கே அடிச்சீங்களே... நானும் அழுதேனே... இன்னும் பாக்கி இருக்கா?

 16. vinu says:

  ////செத்துப்போன அவுக தாத்தாவோட சாத்மா ஆந்தி அடைஞ்சிரும்னா பார்த்துக்கங்க...!/////


  Yow athu ஆத்மா சாந்தி ->


  எழுதுறப்போ ஓவரா ஜொள்ளு உட்டா இப்புடித்தான் குழம்பும்.....

 17. shankar says:

  இப்பவும் நான் பதிவ படிக்கல ஆனா .,எல்லாரையும் போட்டு தல்றோம் ஒரு நாள்

 18. shankar says:

  கொல்றே மச்சி ,,தக்காளி ஒவ்வொரு பொய்யும் நான் அனுபவிச்சி இருக்கேன் .,

 19. @@@vinu says:
  Yow athu ஆத்மா சாந்தி ->
  எழுதுறப்போ ஓவரா ஜொள்ளு உட்டா இப்புடித்தான் குழம்பும்.....///

  எப்டி மச்சி கண்டுபுடிச்ச...ச்சே சான்சே இல்லடா...!
  நீ இம்புட்டு அறிவுள்ள ஜீவனா...? :)

 20. @@@shankar said...
  இப்பவும் நான் பதிவ படிக்கல ஆனா .,எல்லாரையும் போட்டு தல்றோம் ஒரு நாள்..///

  சரி விடு...! போட்டு தள்றோம்..! இதுனால பட்டாப்பட்டி உயிர் போனாலும் சரி..!

 21. யாராவது இருக்காங்களா?

  யாரும் இல்ல....

  ரைட் ரைட்....

  @வெளியூரு

  //சரி விடு...! போட்டு தள்றோம்..! இதுனால பட்டாப்பட்டி உயிர் போனாலும் சரி..!///

  பட்டாபட்டியை எதிர்த்துக் கொரல் கொடுப்போரின் கொரவலையை கடித்துத் திண்போம் என்று பிரியமுடன் சொல்லிக் கொள்(ல்)கிறேன்...

  #யோவ் பட்டா, இங்க வந்தா சத்தமில்லாம அப்பீட் ஆயிடு.. கொலைவெறில திரியுதுங்க...

 22. அந்த டயலாக் ட்ரை பண்ணலாமா .பின் விளைவு எதுவும் வரதே.////

  நீங்க தாராளமா ட்ரை பண்ணலாம்..! எனக்கு எந்த பிரச்சனையும் வராது...!:_////

  எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா உங்களுக்கும் வரும் மாப்ள
  என்னால .

 23. உதவாக்கரை said...
  அந்த டயலாக் ட்ரை பண்ணலாமா .பின் விளைவு எதுவும் வரதே.////

  நீங்க தாராளமா ட்ரை பண்ணலாம்..! எனக்கு எந்த பிரச்சனையும் வராது...!:_////

  எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா உங்களுக்கும் வரும் மாப்ள
  என்னால .
  **********************************************************************
  ஒரிஜினல் பேர்ல கமெண்ட் போடறவங்களுக்கு எல்லாம் திமிர் நிறையா இருக்குமாம்...நீ உன் லவ்வர்கிட்ட செருப்படி தான் வாங்கப்போற...!

 24. நீ உன் லவ்வர்கிட்ட செருப்படி தான் வாங்கப்போற...!///

  அந்த குடுப்பன இன்னும் இல்லைங்க.அதுக்கு தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ...
  நான் லவ்வர சொன்னேன் :)))))

 25. ஒரிஜினல் பேர்ல கமெண்ட் போடறவங்களுக்கு எல்லாம் திமிர் நிறையா இருக்குமாம்///
  நீங்க யார சொல்லுறிங்க

 26. உன்னைத்தான் சொல்றேன்...

  கேக்கறான் பாரு கேள்வி...!

 27. உதவாக்கரை says:
  Nov 5, 2011 7:32:00 PM
  ஒரிஜினல் பேர்ல கமெண்ட் போடறவங்களுக்கு எல்லாம் திமிர் நிறையா இருக்குமாம்///
  நீங்க யார சொல்லுறிங்க//
  Rettaival's Blog said...
  உன்னைத்தான் சொல்றேன்...
  கேக்கறான் பாரு கேள்வி...!///

  @Rettaivals///
  ஹா.. ஹா...மச்சான் ரொம்ப அப்பாவியா இருக்கான்டா...விட்டர்லாம்டா..!

  @ உதவாக்கரை... ராஜா...நீ தயவு செஞ்சு போயிரு..இங்க இப்டியெல்லாம் அப்பாவித்தனமா இருந்தீன்னா சொத்துக்கு ஊறுகா மிஞ்சாது...! நீ அநியாத்துக்கு உதாவக்கரையா இருக்க...! :)

 28. முடியவே முடியாது ,,,,,,, எனக்கு திமில் இல்லன்னு நீங்க ஒத்துக்குற வரைக்கும் இந்த எடத்தவிட்டு நகரவே மாட்டேன்.

 29. அப்படியே குத்தவச்சிக்க மச்சி...! பட்டாபட்டி வந்து நண்டு வறுத்துத் தருவான்..! ரெண்டு பேரும் சாப்ட்டு உலகப் பொருளாதாரம் பேசுங்க...நாடு பரிசுத்தமாயிரும்!

 30. Rettaival's Blog says:
  Nov 5, 2011 10:10:00 PM

  அப்படியே குத்தவச்சிக்க மச்சி...! பட்டாபட்டி வந்து நண்டு வறுத்துத் தருவான்..! ரெண்டு பேரும் சாப்ட்டு உலகப் பொருளாதாரம் பேசுங்க...நாடு பரிசுத்தமாயிரும்!
  //

  யோவ்.. ரெட்டை..
  நண்டை சுத்தம் பண்ணி வறுக்கவா.. இல்லை அப்படியேவானு சொல்லிட்டு போ..

  நாதாறிக.. எதை சொன்னாலும் .. அதுல பொடிய போட்டு.....
  அரைகுறையாவா சொல்லிட்டு போயிடுவானுக..

  நாம தாலி அறுக்கவேண்டியிருக்கு.. சே...

  :-)

 31. Blogger உதவாக்கரை said...

  ஒரிஜினல் பேர்ல கமெண்ட் போடறவங்களுக்கு எல்லாம் திமிர் நிறையா இருக்குமாம்///
  நீங்க யார சொல்லுறிங்க
  //

  நீங்க சார்-ரா இல்லை மேடமானு தெர்ல..

  ஒருத்தன் தேனையும் ஊறுகாயையும் கலந்து சாந்து பூசுவான்..

  இன்னொருத்தன்.. சக்கரையில மிளகாய் கலந்து.. பேசிக்கிட்டு இருக்கும்போதே.. எரிய வெச்சுடுவான்...

  இவனுககிட்ட வாயக்கொடுத்து மாட்டிக்கிடாதீங்க.. அம்புட்டுத்தான்..

 32. என்ன பாத்து சாரா மேடமானு கேட்ட ரெண்டாவது ஆளு நீங்க தான்.இதுல நீங்க டவுட்டு படாதிங்க .நானு சார் தான்.


  ஒருத்தன் தேனையும் ஊறுகாயையும் கலந்து சாந்து பூசுவான்..

  இன்னொருத்தன்.. சக்கரையில மிளகாய் கலந்து.. பேசிக்கிட்டு இருக்கும்போதே.. எரிய வெச்சுடுவான்...////ஆமா .ரொம்ப கரெக்ட். .

 33. @உதவாக்கரை says:

  ப்ளாக் ஓனரே தண்ணிய போட்டுட்டு மட்டையாகி இருக்கான்..

  நீரு பயமேயில்லாம, இங்கன உலாத்திக்கிட்டு இருப்பதைப்பார்த்தால்......

  வேண்டாண்ணே..இந்த விபரீதம்..

  வாங்க ஓடிடுவோம்....

 34. பட்டாபட்டி.... has left a new comment on your post "அழகு பொண்ணுங்களும், கியுட்டான பொய்களும். பார்ட் -2...":

  Blogger உதவாக்கரை said...

  ஒரிஜினல் பேர்ல கமெண்ட் போடறவங்களுக்கு எல்லாம் திமிர் நிறையா இருக்குமாம்///
  நீங்க யார சொல்லுறிங்க
  //

  நீங்க சார்-ரா இல்லை மேடமானு தெர்ல..

  ஒருத்தன் தேனையும் ஊறுகாயையும் கலந்து சாந்து பூசுவான்..

  இன்னொருத்தன்.. சக்கரையில மிளகாய் கலந்து.. பேசிக்கிட்டு இருக்கும்போதே.. எரிய வெச்சுடுவான்...

  இவனுககிட்ட வாயக்கொடுத்து மாட்டிக்கிடாதீங்க.. அம்புட்டுத்தான்..
  **********************************************************************
  பட்டாபட்டிங்க்றவரு என்னமோ விக்ரமன் பட ஹீரோ மாதிரி சாஃப்ட் லுக் கொடுக்கறாரேன்னு அவரை தப்பா நினைக்காத...!

  உதவாக்கரை தம்பி....! பட்டாபட்டி திங்கிற சோத்துல ஆர்.டி.எக்ஸ் வைக்கிறவன்...பார்த்து சூதானமா பொழைச்சிக்க...! அவரோட ஆகச்சிறந்த பதிவுகள்ல....சரி வாணாம் வுடு!