- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 2 comments and to comment

இது மணிரத்னத்துக்கு போட்டியா வெளியூர்க்காரன் ஆரம்பிச்சுருக்கற சினிமா கம்பெனி....
கூடிய சீக்கிரம் டென்சல் வாஷிங்க்டனையும்,டோம் ஹன்க்சையும் கெஸ்ட் ரோல்ல போட்டு அமீர்கான் 
இயக்கத்துல சிம்பு நடிக்கற படம் சிங்கப்பூர் டாக்கீஸ் பேனர்ல வரும்...அப்ப தெரியும் இந்த உலகத்துக்கு...
இந்த வெளியூர்க்காரன் யாருன்னு.ஆனா,இப்போதைக்கு கம்பெனில காசு இல்லாததுனால,படங்கள 
விமர்சனம் மட்டும் பண்ணலாமுன்னு போர்டு ஆப் டைரக்டர்ஸ் எல்லாரும் முடிவு பண்ணிருக்காங்க.
சினிமா கம்பெனி அதிபர் திரு.வெளியூர்க்காரன் அவர்கள் வாழ்க்கையில ரசிக்கும் டாப் அஞ்சு 
விஷயங்கள்ல முதல் மூணு சினிமா.அஞ்சாவது எடத்துலயும் சினிமாதான்.நாலவதுல மட்டும் வேற என்னஇருந்துட போகுது.தலைல டெய்லி தேங்கா எண்ணைக்கு பதிலா சினிமாவ தெய்சுக்கறவன் இந்த 
வெளியூர்க்காரன்.ஜெ.கே.ரித்திஷால எப்டி நல்ல படம் குடுக்கவே முடியாதோ,அந்த மாதிரி 
வெளியூர்காரனால சினிமா பத்தி பேசாம இருக்கவே முடியாது.ஆகைனால,சிங்கப்பூர் டாக்கீஸ்ங்கற பக்கங்கள்ல உலக சினிமா பேச போறான் இந்த ஊர்நாட்டான்.
கம்பெனிய வளர்க்கற விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன.சிறந்த விமர்சனம் எழுதுவோர் 
பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டு பஸ்ல கதாநாயகிக்கு பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்,திருவிழா 
கூட்டத்தில் பலூன் விற்பவர் போன்ற கனமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கபடுவார்கள்...
இந்த வாரம் ரெண்டு படம் சாமியோவ்...ஓபனிங் அதிகமா குடுதுட்டதுனால விமர்சனம் சுருங்கிடுச்சு...


இங்க்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ்...


டைட்டில் போடும்போது அய்யோ படம் மொக்க போலன்னு நெனச்ச  வெளியூர்க்காரன்  மனசு சரியாய் இருபது நிமிசத்துல அய்யோ தனியா வந்துட்டமேன்னு நெனச்சுது...
நாங்கல்லாம் பயந்து நாங்களே பார்ததுல்லன்னு உதார் கட்ற பார்ட்டியா நீங்க...இந்த படத்த போய் பாருங்க..கால் நுனி விரல்ல ஆரம்பிக்ற பயம் ஜெட் வேகத்துல உச்சந்தலைக்கு பரவரத உணருவீங்க.சினிமா பார்கற மாதிரியே இருக்காது...நாஜி கேம்ப்ல மாட்டிகிட்ட மாதிரியே இருக்கும்...
பிரகாஷ்ராஜோட தாத்தா ஒருத்தன் இந்த படத்துல நடிச்சிருக்கான்...அய்யோ,சாமி அவன பத்தி எழுதும்போதே பயமா இருக்கு...சிரிச்சுகிட்டேதான் இருக்கான்...ஆனா எல்லாரையும் கதற விடுறான்...பயபுள்ள நடிக்கரதுக்குன்னே போறந்துருக்கான் போல...
உலகதரம்ங்கர வார்த்தைக்கு சரியான அர்த்தம் இந்த படம்...
வழக்கம் போல கதை சொல்ற மாதிரி இல்ல...ஆனா,கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்...
ஆபீஸ் லீவ் போட்டு கூட போய் பார்க்கலாம்...





ஹூண்டாய் தி டெட்லி சுனாமி...

இந்த படத்துல ரொம்ப அழகான விஷயம் கொரிய மொழி...ச்சே...அருமை ஒய்.யாரோ காதுகிட்ட வந்துகொஞ்சற மாதிரியே இருக்கு...புரியலன்னாலும் கேக்கறதுக்கு அவ்ளோ இனிமை...
பாரதியார் இருந்திருந்தா சுந்தர கொரியனில் பாட்டிசைத்துன்னு லிரிக்ஸ் மாத்திருபாறு...
தயவு செஞ்சு தமிழ் டப்பிங்ல அது வந்துகிட்ருக்கு.எல்லாரும் ஒடுங்க.இப்டி பார்த்து காச வேஸ்ட் 
பண்ணாதீங்க.ஒரிஜினாலிட்டி போய்டும்.படத்தோட அழகே மொழிதான்...
கொரிய திரைப்படங்கள் தமிழ் சினிமா மாதிரிதாங்க இருக்கு.லவ்,ரொமான்ஸ்,காமெடி எல்லாமே...சுனாமிய பிரமாண்டமா காட்ட முயற்சி பண்ணிருக்காங்க...ஆனா,வெள்ளைக்காரன்ட்ட தோத்துட்டாங்க...
படத்துல வர்ற கொரியன் பிகர்லாம் சூப்பர்...
கொரியா கண்டிப்பா ஒரு தடவ போகனும்க...இந்த புள்ளைகள நேர்ல பார்கறதுக்கு...
அப்டியே அவங்கள கொரியன் பேச சொல்லி கேக்கறதுக்கு...
வாய்ப்பிருந்தா பாருங்க...

வெளியூர்க்காரன்



2 Responses so far.

  1. Anonymous says:

    வேட்டைக்காரன் விமர்சனத்தை சிங்கப்பூர் டாக்கீஸ்ல எதிர்பார்த்து காத்திருக்கும் சக ஊர்நாட்டான்... சிங்கப்பூர் டாக்கீஸ்க்கு வாழ்த்துக்கள்...

  2. யோவ் என்னயா பொசுக்குன்னு ஊர்நாட்டான்னு சொல்லிபுட்ட..நான் பக்கா மெட்ராஸ்காரன்யா...சென்னைல ஊறுன அட்டு டோமரு...