- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 29 comments and to comment

தேவி தியேட்டர்ல சென்னை-600028 படம் பார்த்துட்டு வெளில வந்தப்போ எனக்கு இருந்த பீலிங் இதுதான்..நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காச உங்ககிட்ட குடுத்துட்டு சந்தோசமா வெளில போறேன் வெங்கட்பிரபு..நீங்க நல்லா இருக்கணும்...நெறைய நல்ல படம் எடுக்கணும்....! என்னை பொருத்தவரைக்கும் ஒரு  நல்ல படம் ரசிகனோட காச ஜஸ்டிபை பண்ணனும்..அப்டி வாங்கற காசுக்கு நேர்மை செய்ற இயக்குனர்கள் கண்டிப்பா இன்னும்  இருக்கத்தான் செய்றாங்க..


உதாரணத்துக்கு கற்றது தமிழ் ராம்...மாஸ் ஹீரோக்களோட ஒப்பனிங் சீன்ல மயங்கி கெடந்த தமிழ் ரசிகர்களோட பொறடில அடிச்சு எழுப்பிவிட்ட படம்..பிராபகர் இன்னும் என் கண் முன்னாடி தெரியுறான்..அவன் கோவம் இன்னும் என் தூக்கத்த கலைக்குது...! என்னை கேட்டா இயக்குனர் ராம்  இனிமே சினிமாவே எடுக்க வேணாம்..! இந்த ஒரு படம் போதும் அவர் கேரியருக்கு....! 


அதே மாதிரி அமீர்...ஒரு தடவ ஆனந்த விகடன்ல எழுதிருந்தீங்க..உங்க சினிமா வாழ்க்கைல எப்போ ஜெய்ச்சிட்டதா உணர்ந்தீங்கன்னு கேட்ட கேள்விக்கு, 2008ல பிலிம் பேர் அவார்ட் வாங்கறப்போ யாரோ ஒருத்தன் தலைவான்னு கத்துனான்...எனக்கு நல்லா தெரியும்..அவன் தலைவன்னு சொன்னது என்னதான்...அந்த செகண்ட் தோணுச்சு...நான் சினிமால ஜெய்ச்சிட்டேன்னு...! அத படிச்சப்போ ரொம்ப சந்தோசமா இருந்துச்சு...ஏன்னா அன்னிக்கு நேரு ஆடிட்டோரியத்துல உங்க பேர அன்னவுன்ஸ் பண்ணப்போ, நீங்க எந்திருக்கரதுக்கு முன்னாடி தலைவான்னு கத்துனது நான்தான்...நான் மட்டும்தான்...! உனக்கு கத்தலாம் தலைவா..நீ எடுத்தது படம் இல்ல...சரி விடு...பருத்திவீரன் எப்டிப்பட்ட படம்னு எழுதரதுகேல்லாம் நான் வொர்த் இல்ல...! (ஆனா ஒன்னு , அந்த படத்துல ப்ரியாமணியும் கார்த்தியும் பண்ணது நடிப்பு இல்ல...அதுக்கும் மேல..நியாயப்படி இந்திய அரசாங்கமே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி வெச்சு, ரெண்டு பேரையுமே இந்திய ஜனாபதியாக்கி அழகு பார்த்துருக்கணும்...ஆனா, ப்ரியாமணிக்கும் மட்டும் தேசிய விருது குடுத்து ஏமாத்திட்டாணுக..! விடு..கார்த்திக்கு இன்னும் சான்சஸ் இருக்கு..!)


இப்டி பல இயக்குனர்கள் தமிழ் சினிமால இருக்காங்க...சில பேர் சந்தொசபடுத்துவாங்க, சில பேர் யோசிக்க வெய்ப்பாங்க...சில பேர் வாழ்க்கையோட புரிதல உணர்த்துவாங்க.. பிதாமகன் பாலா .மொழி ராதாமோகன் ,வாரணம் ஆயிரம் கவ்தம் மேனன் ,பொல்லாதவன் வெற்றிமாறன்,வெயில் வசந்தபாலன் ,மதராசபட்டினம் விஜய்..இப்டி பல நல்ல இயக்குனர்கள்...! குடுத்த காசுக்கு நேர்மை செஞ்சு அனுப்பற இயக்குனர்கள்...  

இவங்க எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான்..!


எல்லாரும் விஜய் படத்துக்கும் அஜித் படத்துக்கும் வெயிட் பண்ணுவாங்க...! 
ஆனா, வெளியூர்க்காரன் இந்த டைரெக்டரோட  படத்துக்காக வெயிட் பண்ணுவான்..!


யாருன்னு கேக்றீங்களா..!


வலிய விசுவலா காமிச்ச ஒரே இயக்குனர்..ஒரு ரசிகன அழுக வெச்சிடலாம்..ஆனா,அவனுக்கு வலிக்க வெக்கறது ரொம்ப கஷ்டம்..எனக்கு வலிச்சுது. நல்லாவே வலிச்சுது ..சொன்ன நம்பமாட்டீங்க..அழுகரதுக்காகவே தனியா ஒருதடவ சங்கம் தியேட்டர்ல இந்த படத்த பார்த்தேன்..என்னை பொருத்தவரைக்கும் 7G-ரெயின்போ காலனி மாதிரி ஒரு படத்த எவனாலயும் எந்தகாலத்துளையும்  எடுக்கமுடியாது...செல்வராகவன தவிர...! அன்னிக்கு சிந்திய கண்ணீர் துளிகள் வெளியூர்க்காரன்ங்கற ஒரு கடைகோடி ரசிகன் செல்வராகவனுக்கு குடுத்த தேசிய விருது...! புதுப்பேட்டை , ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் , இப்டி எந்த படத்த எடுத்துகிட்டாலும் தன்னோட படத்த ஆர்வமா பார்க்க வர்ற நேர்மையான தமிழ் சினிமா ரசிகன கவுரவப்படுத்தி திரும்ப சந்தோசமா அனுப்பற தமிழ் திரை உலகத்தின்  ஒரே இயக்குனர்...!


“தி கிரேட் செல்வராகவன்.” 


“யு ஆர் மை எவர்க்ரீன் டைரெக்டர் செல்வா...!


“Very curious to watch “Mayakkam enna….”


Release it soon..


A Veliyoorkaran article.

29 Responses so far.

  1. பாட்டுங்க எல்லாம் பட்டைய கிளப்புது.
    படம் சீக்கிரம் வரட்டும்.

    இயக்குனர்கள் பற்றிய நல்ல நடையில் ஒரு விமர்சனம்.அருமை!

  2. செல்வ ராகவன் நல்ல டைரக்டர் தான்....
    ஆனா அவருக்குள எப்போவுமே ஒரு சைகோ தூங்கிட்டு இருப்பான்.....
    உதா: ஆயிரத்தில் ஒருவன்......என்னை ரொம்ப கடுப்பு எத்துன படம்...

  3. //வலிய விசுவலா காமிச்ச ஒரே இயக்குனர்..ஒரு ரசிகன அழுக வெச்சிடலாம்..ஆனா,அவனுக்கு வலிக்க வெக்கறது ரொம்ப கஷ்டம்..எனக்கு வலிச்சுது. நல்லாவே வலிச்சுது ..சொன்ன நம்பமாட்டீங்க..அழுகரதுக்காகவே தனியா ஒருதடவ சங்கம் தியேட்டர்ல இந்த படத்த பார்த்தேன்..என்னை பொருத்தவரைக்கும் 7G-ரெயின்போ காலனி மாதிரி ஒரு படத்த எவனாலயும் எந்தகாலத்துளையும் எடுக்கமுடியாது...செல்வராகவன தவிர...! அன்னிக்கு சிந்திய கண்ணீர் துளிகள் வெளியூர்க்காரன்ங்கற ஒரு கடைகோடி ரசிகன் செல்வராகவனுக்கு குடுத்த தேசிய விருது...! புதுப்பேட்டை , ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் , இப்டி எந்த படத்த எடுத்துகிட்டாலும் தன்னோட படத்த ஆர்வமா பார்க்க வர்ற நேர்மையான தமிழ் சினிமா ரசிகன கவுரவப்படுத்தி திரும்ப சந்தோசமா அனுப்பற தமிழ் திரை உலகத்தின் ஒரே இயக்குனர்...!


    “தி கிரேட் செல்வராகவன்.”


    “யு ஆர் மை எவர்க்ரீன் டைரெக்டர் செல்வா...!”//
    இத பாருங்க வெளியூர்காரன், இதே மேட்டரை நிறைய பேரிடம் நான் சொல்லியிருக்கேன், கட்டகடைசியில நீங்க தான் நான், நான் தான் நீங்கன்னுட போறாங்க....

  4. @வெளியூரு-

    சரி சரி! இப்போ என்ன சொல்ல வர்ற?

  5. குழலி / Kuzhali said

    இத பாருங்க வெளியூர்காரன், இதே மேட்டரை நிறைய பேரிடம் நான் சொல்லியிருக்கேன், கட்டகடைசியில நீங்க தான் நான், நான் தான் நீங்கன்னுட போறாங்க

    **********************************************************************

    நான் தான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

  6. @@ரெட்டை-

    யோவ், நீயும் வெளியூரும் ஒண்ணுதான்னு நெறையப்பேரு நம்புராங்கய்யா... இது ஸ்பீல்பெர்க் வேறையா?

  7. @@@Rettaival's Blog says:
    நான் தான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!///


    நீ ஸ்பீல் பெர்க்னா அப்போ நான் யாரு...?

    ஜாக்கிசானா...? :)

  8. @@@வெளங்காதவன் said...
    @@ரெட்டை-
    யோவ், நீயும் வெளியூரும் ஒண்ணுதான்னு நெறையப்பேரு நம்புராங்கய்யா...///

    நானும் பட்டாபட்டியும்தான்யா ஒன்னு...! ரெட்டை வேற...!

    (அவனும் ரோஜர் பெடரரும் ஒன்னு...) :)

  9. @@@குழலி / Kuzhali said...
    இத பாருங்க வெளியூர்காரன், இதே மேட்டரை நிறைய பேரிடம் நான் சொல்லியிருக்கேன், கட்டகடைசியில நீங்க தான் நான், நான் தான் நீங்கன்னுட போறாங்க....//

    ச்சே ச்சே..நீங்க வேற நான் வேற...!
    ( யோவ் பட்டாப்பட்டி , ரெண்டு பாஸ்வேர்ட வெச்சுகிட்டு வேற வேற ஆள்மாதிரி கமென்ட் போடறது ரொம்ப கஷ்டமா இருக்குயா..குழலியும் நானும் ஒண்ணுதான்னு மக்கள் கண்டுபுடிச்சிரமாட்டாங்கள்ள..?):)

  10. @@@ராஜ் said...
    ஆனா அவருக்குள எப்போவுமே ஒரு சைகோ தூங்கிட்டு இருப்பான்..///

    விடுங்க ஜி. தூங்கிட்டு போறான்...!
    ( அந்த படத்துல ரீமா சென்ன யூரின் போக சொல்லி விடியோ எடுத்த காண்டு இன்னும் உங்களுக்கு போகலைன்னு நெனைக்கறேன்...) :)

  11. @All///

    Its really good to see lot of new faces are commenting on Veliyoorkaran..! Its really makes me feel happy..! :)

    பழைய ஆளுங்க தயவு செஞ்சு இனிமே வராதீங்கடா...!
    ( அட்லீஸ்ட் இன்னும் ஒரு மூணு வருசத்துக்கு ... ) :)

  12. @வெளியூரு-

    நானெல்லாம், கடந்த ஒண்ணரை வருஷமா வாரேன்... ஆனா, கமண்ட் போட்டா %^* அடிச்சுருவன்னு போயிட்டேன், பாத்துக்க....

  13. @@@வெளங்காதவன் says:
    ஆனா, கமண்ட் போட்டா %^* அடிச்சுருவன்னு போயிட்டேன், பாத்துக்க....///

    டேய்..உங்களதானடா சொல்றேன் வராதீங்கன்னு...ஏண்டா சாவடிக்கறீங்க...! போய் தொலைங்கடா...! அப்பதான பிகருங்கல்லாம் உங்க தொந்தரவு இல்லாம வெளியூர்க்காரனுக்கு வரும்.ஜாலியா வன்புணர்ச்சி பண்ணலாம்...! என்னையும் பிரபல பதிவர்னு தமிழ் பதிவுலகம் ஒத்துக்கும்..! தயவு செஞ்சு வெளியே போடா...!
    ( இன்னும் ஏண்டா நிக்குற...? ):)

  14. நாங்களும் காத்திருகோம்

  15. KANA VARO says:

    அண்ணே! எப்பண்ணே வந்தீங்க..

  16. @வெளியூரு-

    ஜாலியா வன்புணர்ச்சி பண்ணலாம்...! என்னையும் பிரபல பதிவர்னு தமிழ் பதிவுலகம் ஒத்துக்கும்..! தயவு செஞ்சு வெளியே போடா...!
    ( இன்னும் ஏண்டா நிக்குற...? ):)

    **************************

    பண்ணாட! ஒழிஞ்சு நின்னாலும் கண்டுபுடிச்சிருதே... (யோவ் யோவ்... வன்புணர்ச்சினா என்னையா? காட்டுயா பிளீஸ்)

    :)

  17. //என் ராஜபாட்டை"- ராஜா said...

    இன்று என் வலையில் ..

    தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்////

    பலே வெள்ளையத் தேவா!

    அண்ணே! ராஜா அண்ணே... நான் கெளம்புறேன்.. நாளைக்கு வரைக்கும் இருந்தா அடுத்த போஸ்ட்டு போடுங்க... மீட் பண்ணுவோம்...

  18. வெளங்காதவன் said...
    @வெளியூரு-

    சரி சரி! இப்போ என்ன சொல்ல வர்ற?///
    சேம் பீலிங்

  19. @@உதவாக்கரை says:
    @@வெளங்காதவன் said...
    சரி சரி! இப்போ என்ன சொல்ல வர்ற?///சேம் பீலிங்.///

    நான் எழுதிருக்க எந்த பதிவு புரிஞ்சிருக்கு..இது மட்டும் புரிய...! போங்க பாஸ்..!
    ( பாதி பதிவு எனக்கே புரிஞ்சதில்ல மச்சி...நீ என்கிட்டே கேட்டுட்ட..நான் யார்ட்டபோய் கேக்குறது...! கண்டுக்காம போய்கிட்டே இரு..! ) :)

  20. @@@வெளங்காதவன் said...
    அண்ணே! ராஜா அண்ணே..நாளைக்கு வரைக்கும் இருந்தா அடுத்த போஸ்ட்டு போடுங்க.//


    ஹா. ஹா..! அடங்குடா டேய்..! :)

  21. @@ KANA VARO said...
    அண்ணே! எப்பண்ணே வந்தீங்க..///


    நான் ரொம்ப நாளா இங்கதான்னேன் இருக்கேன்...! நீங்க எங்கன்னேன் தேட்னீங்க என்ன..? :)

  22. @@@"என் ராஜபாட்டை"- ராஜா said...
    நாங்களும் காத்திருகோம்..///


    எதுக்குன்னேன்...?

  23. @@@"என் ராஜபாட்டை"- ராஜா said...
    இன்று என் வலையில் ..

    தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்../////

    அண்ணேன்..தயவு செஞ்சு போயிருங்கன்னேன்...! நான் கொஞ்சம் லூசு...! பொசுக்குன்னு எதாச்சும் திட்டி விட்ருவேன்..! அப்பறம் உங்களுக்கு ரொம்ப சங்கட்டமா போயிரும்..! :)

  24. நான் கொஞ்சம் லூசு...
    //

    கொஞ்சமா.... சார்?

  25. ( பாதி பதிவு எனக்கே புரிஞ்சதில்ல மச்சி...நீ என்கிட்டே கேட்டுட்ட..நான் யார்ட்டபோய் கேக்குறது...! கண்டுக்காம போய்கிட்டே இரு..! ) :)
    //

    பதிவ படிச்சமா.. சிரிச்சமா.. இல்ல துப்புனமானு இல்லாம..
    இது என்ன.. புரிஞ்சதா?.. கிழிஞ்சதா?னுட்டு...

    யோவ்.. வெளியூரு.. பேசாம உருக்குப்போயி இவங்களை திருத்தலாமா?...

    :-)

  26. உருக்குப்போயி
    //

    சே..வரவர ”லோக்கலா” ... ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது..

    ஊருக்குப்போய்-னு திருத்திக்க....

  27. @@பட்டாபட்டி.... says:
    நான் கொஞ்சம் லூசு...
    //கொஞ்சமா.... சார்?..///

    லூசுத்தனம் கொஞ்சம்தான்யா..!
    மென்டல்தனம்தாம் ரொம்ப ஸாஸ்தி..!
    :)

  28. @@@பட்டாபட்டி.... said...
    உருக்குப்போயி
    //சே..வரவர ”லோக்கலா” ... ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது..
    ஊருக்குப்போய்-னு திருத்திக்க....///


    தமிலனா போரந்துட்டு தமிள எபடியா நீ ச்பேல்லின்ங் மிச்டேகக்கா எளுதல்ல்லாம்...! கேவலமுயா...! :)

  29. சே..வரவர ”லோக்கலா” ... ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது..//

    அது என்ன "லோக்கலா"...