- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 23 comments and to comment



வேட்டைக்காரன் பார்த்து மனம் நொந்து போய் பஞ்சர் ஆன,  இளைய தளபதியின் அதிதீவிர ரசிகரான வெளியூர்காரன் அவர்கள்..தனது மானசீக தலைவரின் தொடர் மொக்கை படங்களால் வாழ்க்கையே வெறுத்து தனது கூடாரத்தை மாற்றிகொள்ளலாம் என உத்தேசித்துள்ளார்...இளைய தளபதியின் எதிர் கூடாரமான தலையின் ரசிகர்கள் தனது கடந்த கால சலம்பல்களையும் தலை எதிர்ப்பு பிரச்சாரங்களையும் நக்கல்களையும் மனதில் வைத்து கொண்டு தன்னை சேர்த்து கொள்ளாமல் செருப்பாலேயே  அடிப்பார்கள் என உறுதியாக நம்பும் வெளியூர்காரன் ,அடுத்து யார் கூடாரத்தில் சலம்பலாம் என அதிதீவிரமாக சிந்தித்து தின்க் பண்ணி வருகிறார்..


இளம் நடிகர்களுக்கு தீவிரமான ரசிகனாய் தன்னை காட்டிகொள்வதே தன்னை யூத் ஆகவும் ஸ்கூல் ஸ்டுடென்ட் ஆகவும் காட்டிகொள்ளும் ஒரு ராஜ தந்திரம் என தீவிரமாக நம்பும் சீனியர் சிட்டிசன்  திரு வெளியூர்காரன் அவர்கள் ,விஜயகாந்த் ,ரஜினிகாந்த் ,கிருஷ்ணகாந்த் மற்றும் கமலகாசன் ,சாருகாசன் ,ஆகியோர்களின் தீவிர ரசிகனாக தன்னை அறிவித்து தனது ஒரிஜினல் வயதை உலகுக்கு அறிவிக்க ப்ரியபடாததால் மற்ற எந்த இளம் நடிகரின் கொட்டகையில் டென்ட் அடிக்கலாம் என முட்டு கொடுத்து யோசித்து வருகிறார்...  


அது பின்வருமாறு...ஆர்யாவிர்க்கும்  ஜீவாவிற்கும் ரசிகன் என்று சொல்வதில் ஒரு கிரிப் இல்லாத காரணத்தால் அவர்களது கொட்டகையை வெளியூர்காரன் நிராகரித்துவிட்டார்...பருத்திவீரன் கார்த்திக் இன்னும் பந்தய ஓட்டத்திற்கு வராத காரணத்தினாலும்,திரு.சொம்பு அவர்கள் டி.ராஜேந்தரின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரையும்,பரத்தை தலைவனாக ஏற்றுகொண்டால் பரத்திற்கே மனம் குறுகுறுக்கும் என்ற காரணத்தால் அவரையும் அப்பாஸ் வினீத் போன்றவர்கள் அட்டு டாமன்கோலி பீஸ் என்ற காரணத்தால் அவர்களையும்,தனுஷ் தனது பழைய காதலியான  ஐஸ்வர்யாவை உஷார் பண்ண காரணத்தால் அவரையும்,சூர்யாவை ஏற்றுக்கொண்டு டீசெண்டாக சலம்ப விருப்பமில்லாததால்  அவரையும்    தொடர்ச்சியாக நிராகரித்து விட்டார்...


கேர்ள் ப்ரண்ட்ஸ்கிட்ட பிலிம் காட்டுவதற்கும்,நண்பர்கள்கிட்ட உதார் காட்டுவதற்கும் விஜய்யை விட்டால் தனக்கு வேறு நாதி இல்லை என்ற காரணத்தால் வேறு வழியே இல்லாமல் மனம் திருந்தி மீண்டும் விஜய் கூடாரத்திலேயே டென்ட் அடிப்பதுதான்  தனது யூத் தனத்திற்கு சேப்டி என்று உறுதியாக நம்பும் வெளியூர்க்காரன் அவர்கள் தனது பழைய தளபதியான விஜய்யை மீண்டும் இளைய தளபதியாக மனதார ஏற்றுக்கொள்ளலாம் என சுயநினைவுடன் சூடு சொரணை இல்லாமல் மானம் கெட்டுபோய் முடிவெடுத்துள்ளார்...தளபதியின் புகழ் பாடும் தொண்டனாய் கடைசி வரை இயங்க போவதாகவும் சுராவை வெற்றி படமாக்க முடிந்த வரை ஒப்பேத்தி வக்காலத்து வாங்குவேன்  என்றும் சூளுரைத்துள்ளார்...


இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு வடபழனி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுக்கலாம் என்று சிலரும்,நாண்டுகிட்டு வேஷம் குடிச்சு தூக்குல தொங்கி சாகலாம் என சிலரும் காரி துப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்...வெளியூர்காரனின் நண்பர்கள் சிலர் தயவு செஞ்சு ரூமை காலி பண்ணிட்டு வெளில போயிரு என்றும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்... 
இது ஒரு பி டி ஐ யின் செய்தி குறிப்பு....
வெளியூர்க்காரன்...

23 Responses so far.

  1. ஸுப்பர் அப்பு...

  2. pattapatti said...////ஸுப்பர் அப்பு.../////

    பட்டாபட்டி சார்..இந்த தடவ மிஸ் ஆய்டுச்சு...நீங்க வேணா பாருங்க...சுறா வரட்டும்...அதுக்கப்றம் டோட்டல் தமிழ்நாடே என் தளபதியோட கைல....!...(எங்களுக்கெல்லாம் சூடு சொரனையே இல்ல பிரதர்...நாங்கல்லாம் விஜய் ரசிகர்கள்....)

  3. வெளியூர்காரன் இப்படி டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்களே! நீங்க கடைசியா இது தான் சொல்வீங்கன்னு நினைத்தேன்! :-))

    உங்களோட கடந்த இரண்டு இடுகையையும் (இதுவும் தான்) பின்னூட்டங்களையும் படித்து சிரித்து ஒருவழி ஆகிட்டேன் :-))) (அநியாயத்திற்கு திட்டி இருக்கீங்க!)

    நீங்க சிங்கப்பூர் ல தான் இருக்கீங்களா! பதிவர் சந்திப்பு அப்படி இப்படின்னு எதுலயாவது பார்த்து இருக்கோமா! நான் வேற இப்பெல்லாம் அதிகம் வருவதும் இல்லை.

  4. மச்சான்...சத்தியமா முடியலை டா...சிரிச்சு சிரிச்சு...ஆமா அதென்னடா டாமன்கோலி பீஸு.?

  5. ஒரே சிரிப்புத்தான் போங்க...

  6. @சரவணகுமரன் said...///
    சரவணகுமரன்...! நக்கலு...சிரிச்சு கிண்டல் பண்றீங்க என் தளபதிய...இருக்குடி...எல்லாத்துக்கும் இருக்கு...சுறா வரட்டும்...அப்பறம் பேசிக்கறேன்...!

  7. @கிரி said...///
    என்னது சிங்கப்பூர்ல பதிவர்கள் சந்திப்பு நடக்குதா...?..(இந்திரா காந்திய சுட்டதே கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சாமி எனக்கு தெரியும்..அடுத்த முறை தகவல் சொல்லுங்க கண்டிப்பா வர்றேன்...பதிவுலக நண்பர்களோட சேர்ந்து டைகர் டீ சாப்டுவோம்...சிங்கப்பூர்ல இதுதானுங்களே டீ...!)

  8. @ரெட்டைவால் ' ஸ் said...///
    டேய் நம்ம வினோத் இல்ல....அவந்தாண்டா அட்டு டாமன்கோலி பீசுக்கு நல்ல உதாரணம்...!

  9. @அண்ணாமலையான் said...///
    உங்களுகெல்லாம் சிரிப்பா இருக்கு...இளைய தளபதி சார்...பார்த்தீங்களா உங்க தளபதிக்கு வந்த அவமானத்த...அதுவும் ரசிச்சு சிரிக்கறாங்கே...தயவு செஞ்சு சுறா படத்துலயாவது மெட்ராஸ் ரௌடிகள அழிக்கற வேலைய பார்க்காம வேற எதாச்சும் புதுசா பண்ணுங்க...பாவம் இந்த ரௌடி பயலுகள ரௌடித்தனம் பண்ண விடுங்க...பொழைச்சு போறாங்கே...!

  10. TRP Rate vanthuduchu sir ungalukku.............thodarchya vijaya thakikite irunga nengathan adutha CM (ungalukku ithukku artham therium sir en ulagathukku thriyapaduthikkitu)

  11. பதிவு ரொம்ப அமர்க்களமா இருக்குங்க.. உங்க வரலாறு வரிக்கு வரி சிரிப்பு தான்.. அட்டகாசம்.. (நாங்க எதிர் கூடாரம்!!)

    ***

    Followers Widget சேருங்க..

  12. @Saravanan said...///
    எழுதியே ஆட்சிய புடிச்ச வரலாறு உள்ள ஊர்க்காரன் சார்...இப்போதான ஆரம்பிச்சிருக்கோம்...வெயிட் பண்ணி பாருங்க...விளையாட்ட...!

  13. @லோகு said...///
    (நாங்க எதிர் கூடாரம்!!)///
    ஆகா வீடு பூந்து கலாய்க்க ஆரம்பிச்சுடாங்கே...இனிமே விடக்கூடாது....இதோ போடறேண்டி அடுத்த பதிவ...!.. :)

  14. @பேநா மூடி said...///
    ஐயோ நக்கலா சிரிச்சே அவமானபடுத்தாராங்கேலே...தளபதி இதுக்கு ஒரு விடிவு காலமே கெடயாதா....?

  15. ஓ..இது தான் விஷயமா ?? போன பதிவு புரியலை. இப்ப பிரிஞ்சுடுச்சு.

  16. @பின்னோக்கி said...///

    என்ன பின்னோக்கி..டியுப் லைட்டா இருக்கீங்க...இப்டி நல்ல வலுவா சிக்கிருகாங்கே...போட்டு கொல்றதில்லயா...எல்லா காண்டையும் அசல் ரிலீஸ்ல காடுவாணுக பாருங்க...!

  17. இந்த பொழைப்பு பொழைக்கரதுக்கு வடபழனி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுக்கலாம் என்று சிலரும்,நாண்டுகிட்டு வேஷம் குடிச்சு தூக்குல தொங்கி சாகலாம் என சிலரும் காரி துப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்...வெளியூர்காரனின் நண்பர்கள் சிலர் தயவு செஞ்சு ரூமை காலி பண்ணிட்டு வெளில போயிரு என்றும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்...
    இது ஒரு பி டி ஐ யின் செய்தி குறிப்பு....
    வெளியூர்க்காரன்...





    very very super valga thala

  18. @livingston baba said...///
    very very super valga thala.///
    லிவிங்க்ஸ்டன் உஸ்...சும்மா இருங்க...இதெல்லாம் இங்க வந்து சொல்லிக்கிட்டு..அப்பறம் நாம யாருங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சிரும்....அடக்கி வாசிங்க...! :)

  19. ajith udan vijay yai compare sai thu vijay kavalapatutha vandam.............vijay pathi pasa ali ajith fans thakuthi illai ok

  20. @Ramankg2000 said...///
    vijay pathi pasa ali ajith fans thakuthi illai ok..///
    அப்போ அஜித் பேன்ஸ் எல்லாரும் அலின்னு சொல்றீங்களா...!..இது சரியில்ல ராமன்...!...(டேய் அடிசுக்கங்கடா டேய்...இதுக்கு மேல நான் எப்டிதாண்டா ஏத்தி விடுறது....) :)

  21. //திரு.சொம்பு அவர்கள் டி.ராஜேந்தரின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரையும்,பரத்தை தலைவனாக ஏற்றுகொண்டால் பரத்திற்கே மனம் குறுகுறுக்கும் என்ற காரணத்தால் அவரையும் அப்பாஸ் வினீத் போன்றவர்கள் அட்டு டாமன்கோலி பீஸ் என்ற காரணத்தால் அவர்களையும்,தனுஷ் தனது பழைய காதலியான ஐஸ்வர்யாவை உஷார் பண்ண காரணத்தால் அவரையும்//

    ஒரு புல்ஸ்டாப் கூட இல்லாம ஒரே கல்லுல எத்தனை "மாங்க"-வ அடிப்பீங்க,
    இதுல ஐஸ்வர்யாவையும் இழுத்துவிட்டு கதவ சாத்திகிட்டிங்க(அதாங்க புல்ஸ்டாப் இல்லாம எழுதறது)..
    ம்ம்... பட்டயகிளப்புரிங்க...

  22. @விவசாயி said...//
    ஒரு புல்ஸ்டாப் கூட இல்லாம ஒரே கல்லுல எத்தனை "மாங்க"-வ அடிப்பீங்க.////
    அப்போ சிம்பு பரத் ஆர்யா ஜீவா முக்கியமா அஜித் விஜய் இவங்கல எல்லாம் மாங்கா பயலுக...சோத்து வெட்டி தடியணுக... அப்டின்னு சொல்றீங்களா சார்... :)

  23. vinu says:

    me 25th eththini naalu kalichchu vanthaalum poduvomilley!!!