மல்லிகை பூவுலேர்ந்து ரெத்தம் எடுத்து பார்த்துருகீங்களா...நேத்து நான் பார்த்தேங்க...ப்ளூ கலர்ல கோடு போட்ட ஷர்ட் போட்டுக்கிட்டு ஜீன்ஸ்ல வந்துருந்துச்சு...நேத்து இல்ல முந்தாநேத்து பூத்துருக்கும்...அவ்ளோதான்...எப்பா...கொலை அழகுங்க...எப்புடித்தான் மனசு வந்திச்சோ தெரில அந்த நர்ஸ் டிரஸ் போட்ருந்த ஜாதிமல்லி பூவுக்கு...ஒரு ரோஜா பூ மேல ஊசிய குத்தறதுக்கு...அத பார்த்துகிட்டே திரும்புனா,பக்கத்துக்கு பெட்ல ஒரு நார்த் இந்தியன் செவந்தி பூவுக்கு ப்ளட் எடுத்துகிட்டுருந்தாங்க...(தமிழ்நாட்ல இருக்கும்போதுதான் நார்த் இந்தியா நமக்கு வெளிநாடு...வெளிநாடு வந்துடீங்கன்னா அதுவும் இந்தியாதான்...கலைஞர் நம்மள ஏமாத்திகிட்ருகாருன்னு உண்மைய சொன்னா நீங்க நம்பவும் மாட்டீங்க...சரி அத விடுங்க...அப்பறம் பேசுவோம்...) மேட்டர்க்கு வருவோம்...இது நாங்கல்லாம் பதிமூணு தடவைக்கு மேல ரெத்ததானம் பண்ணிருக்கொம்னு வாய்ச்சவடால் பேசிட்டு உள்ள போய் ஒரு ரோஜா கூட்டத்துக்கு இடைல பேசன்ட் ஆன ஒரு வீரனோட கதை...
நேத்து இங்க சிங்கப்பூர்ல ரெத்ததான முகாம் நடத்துனாங்க.சிங்கப்பூர் மக்களுக்கு இருக்கற சமூக அக்கறைய பார்க்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு...கொஞ்சம் பொறாமையாவும்...!வயசு வித்தியாசம்,ஆண்,பெண் பேதம் இல்லாம எல்லாரும் வந்து ஆர்வமா இத தன்னோட கடமைய நெனைச்சு பொறுப்போட குடுத்துட்டு போறத பார்க்கும்போது அழகாவும் இருந்துச்சு...பண்பட்ட பரிணாம வளர்ச்சி அடைந்த, நாகரீகமான சமூகத்தின் முகம்...சிங்கப்பூர்.
சென்னைல பேர் கேட்டுட்டு வெயிட் பார்த்துட்டு படுத்த வேகத்துல நீங்க எந்திருச்சு போகலாம்னு சொல்லிடுவாங்க...அவ்ளோ ஸ்பீட்...ஆனா, இங்க எக்கச்சக்க டியுப்,வலி மறக்க ஊசி,பெரிய பெரிய சைஸ்ல சின்ன வயசு நர்சுங்கன்னு,விஜய் படம் மாதிரி கொஞ்சம் ஓவராத்தான் பில்ட் அப் குடுக்கறாங்க. ஊசி குத்துன உடனே மனசு சென்னைக்கு பிளைட் புடிச்சிது...யாரோ ஒரு பிரண்டோட மாமாவுக்கும்,பக்கத்துக்கு வீட்டு வாத்தியார்கிட்ட படிக்கற பையனோட அப்பாவுக்கும் ப்ளட் குடுத்துட்டு ,மறுபடியும் யாராச்சும் கிடைப்பாங்கலான்னு சென்னை ரோட்ல வெயில்ல சுத்துனது கண்ணு முன்னாடி ஓட ஆரம்பிச்சது...அழகான தருணங்கள்...நீங்க ரெத்த தானம் பண்ணும்போது யாரோ ஒரு முகம் தெரியாத குடும்பத்துக்கே வாழ்க்கை குடுக்கறீங்க...எப்பேர்பட்ட உதவி பாருங்க அது...விஜயா,அப்போல்லோ,மலர், SRMC,KS, ரயில்வே ஹாஸ்பிடல் இப்டி சென்னைல இருக்கற பெரும்பாலான மருத்துவமனைகள்ல ரெத்ததானம் செஞ்சிருக்கேன்...அப்பல்லாம் நான் குடுத்த ப்ளட் யாரோ ஒரு ராஜத்திக்கோ இல்ல வெள்ளைசாமிக்கோ போயிருக்கும்...சந்தோசம்...ஆனா, இங்க கொடுக்கறப்போ இந்தியா எங்க இருக்குன்னே தெரியாத, ஹங் டான் கும்,ஹும் லீ, இந்த மாதிரி வேற தேசத்த சேர்ந்த சகோதரர்களின் உயிருக்குள்ள போக போறத நெனைச்சு பார்த்தப்போ ரெட்ட புள்ள பெத்த மாதிரி ஒரு பீலிங்...அத அனுபவிச்சு பார்த்ததாங்க தெரியும்...
பட், கதைல ஒரு சின்ன திருப்பம்...தேக்கு மரத்துல ஊசி நுழையுமாங்கற ஆணவத்துல படுத்தவனுக்கு ப்ளட் குடுத்து முடியப்போற நேரத்துல கண்ணு முன்னாடி ஓடிகிட்ருந்த டிவி திடீர்னு கேபிள் கட் ஆன மாதிரி திடீர்னு பொறி பொறியா தெரிய ஆரம்பிச்சது...டிவில எதோ பிரச்சன போலருக்குன்னு திரும்பி நர்ஸ பார்த்தா நர்ஸ் மூஞ்சும் அப்டிதான் தெரிஞ்சது...அய்யோயோ, நினைவு தப்புதுன்னு எங்க தாத்தா சாகபோறப்போ சொன்னாரே, அது இதுதானான்னு கைய தூக்குனது மட்டும்தான் நினைவுல இருக்கு...பீசு சுவிட்ச் ஆப்..அதுக்கப்றம் 92 ல செத்து போன எங்க தாத்தாவ பார்த்தேன்...இன்னும் அந்த பொம்பளயோடதான் சுத்திக்கிட்டு இருந்தாரு..(என் ஆத்தா.).எங்கப்பாவ ரொம்ப விசாரிச்சாரு...டீ வாங்கி குடுத்தாரு...சாப்டுகிட்டே இருந்தேன். பளிச்சின்னு கேபிள் கனெக்சன் மறுபடியும் வந்துடுச்சு..
முழிச்சு பார்த்தா சுத்தி ஜாதி மல்லி தோட்டம்...நடுவுல ஒரு சீனா ரோஜா பூ..டாக்டராம்...Can..ah...Can..ah...னு சிங்க்ளிஷ்ள கேட்டுச்சு...நமக்கு நெட்வொர்க் சரியாய் கெடைக்காததுனால தலைய மட்டும் லேசா ஆட்டி இருக்கேன்,இன்னும் போகலன்னு கன்பார்ம் பண்ணிட்டு திரும்புனப்போ தாங்க கவனிச்சேன்...அண்ணன கவுத்து வெச்ச அண்டா மாதிரி படுக்க வெச்சுருந்தாங்கே...ப்ளட் பிரஷர் கம்மியாகி மயக்க நிலைமைக்கு போயிருந்துருக்கான் வெளியூர்க்காரன்...அப்பறம்தான் நினைவுக்கு வந்துச்சு...காலைலயும் மதியமும் சாப்டாம இருந்தது...எங்க அம்மா என்கூட இல்ல பாருங்க..பார்த்து பார்த்து என்ன சாப்ட வெக்க...
சுத்தி நின்னுகிட்ருந்த நர்ஸ் புள்ளைங்க என் மேல பாசத்த சிங்க்ளிஷ்ள கொட்டோ கொட்டுன்னு கொட்டுனத பார்த்து எனக்கு கண்ணெல்லாம் கலங்கி போச்சு சாமி... சைனீஸ் மலாய் பிலிப்பைன்ஸ் இப்டி எல்லா நாட்டு பொண்ணுங்ககிட்டையும் இருக்கற அம்மாத்தனம் ஒரே மாதிரிதாங்க இருக்கு..அம்மாக்களுக்கு மொழி இல்லைதான் போலருக்கு...அவங்க காட்டுன அன்புக்கு இன்னும் ரெண்டு டம்ளர் ப்ளட் குடுத்துட்டு வரலாமான்னு தோணுச்சு...
எனக்கு புள்ள பெத்த களைப்பு.ஆமாம்க...ஒரு வளர்ந்த புள்ளைக்கு ரெத்தம் குடுத்து நான் வாழ்க்க குடுக்க போறேன்ல.. அம்மா தனக்கு பொறக்க போற தான் புள்ளைக்கு ரெத்தம் குடுத்து வாழ்க்க குடுக்கறா...ரெத்த தானம் பண்றவன் யாரோ பெத்த புள்ளைக்கு தான் ரெத்தத்துல பாதிய குடுத்து ஒரு குடும்பத்துக்கே வாழ்க்க குடுக்கறான்..எல்லாராலயும் குடுக்க முடியற தாய்பால் சார் ப்ளட் டொனேசன்.
என்னங்க பெரிய அம்மா..ரெத்த தானம் பண்றவன் அம்மாவ விட ஒசத்தி சார்..
வாழ்க்கை அழகு வாத்யாரே..அதை அர்த்தமுள்ளதா ஆக்கிகனும்னா ரெத்ததானம் பண்ணுங்க...
நெஜமாவே யாரோ ஒருத்தரோட உடம்புக்குள்ள புகுந்து அவங்க இதயத்த வருடி கொடுக்க போறீங்க... செம மேட்டர் இல்லையா இது...
"மனிதன் என்பவன் தெய்வமாகிறான்...ரெத்த தானம் பண்ணும்போது."..இது பழசு...
"மனிதன் என்பவன் அம்மா ஆகிறான்..அதுவும் ஒரு குடும்பத்துக்கே."..இது புதுசுங்க...
"Donate Blood...Save lifes...".
இந்த பதிவு மெட்ராஸ்ல நான் அழைத்தப்போல்லாம் என் கூட வந்து முகம் தெரியாத உயிர்களுக்கு ப்ளட் டொனேட் பண்ணிட்டு, அந்த குடும்பத்துக்கிட்டேர்ந்து நன்றிங்கற ஒரு வார்த்தைய கூட எதிர்பார்க்காம கெளம்பி போன..என் அன்பு நண்பர்களுக்கு சமர்ப்பணம்..பேர் போடாம இருந்த நல்லாருக்காது சார்...இவங்கதான் அந்த அம்மாங்க....
செபாஸ்டியன் ராபர்ட்,பாக்யராஜ்,அஜய்,சரவணன்,ஹனோஷ்,ராஜேஷ்குமார்,வினோத் மற்றும் பெயர் மறந்து போன என் நண்பர்களின் நண்பர்கள்...எல்லாருக்கும்....தேங்க்ஸ் வாத்யாருங்களா...நீங்கல்லாம் உங்க லைப்ல நல்லா வரலேன்னா என்கிட்டே சொல்லுங்க...அந்த ஆண்டவன்ட்ட நான் பேசறேன்...!
செபாஸ்டியன் ராபர்ட்,பாக்யராஜ்,அஜய்,சரவணன்,ஹனோஷ்,ராஜேஷ்குமார்,வினோத் மற்றும் பெயர் மறந்து போன என் நண்பர்களின் நண்பர்கள்...எல்லாருக்கும்....தேங்க்ஸ் வாத்யாருங்களா...நீங்கல்லாம் உங்க லைப்ல நல்லா வரலேன்னா என்கிட்டே சொல்லுங்க...அந்த ஆண்டவன்ட்ட நான் பேசறேன்...!
இப்படிக்கு,
14 தடவை அம்மா ஆனவன்...
வெளியூர்காரன்..
அழகான வார்த்தைகளின், ரசிப்பதற்கும் சிந்திப்பதற்குமான பதிவு. ரத்தம் கொடுப்பவர்களை அம்மாவாக்கியது நல்ல கற்பனை. இதை விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
பின்னோக்கி said...///
இத படிச்சிட்டு யாரவது ஒரு நண்பர் ரெத்த தானம் பண்ணா அதுவே எனக்கு ரொம்ப பெரிய வெற்றி பின்னோக்கி...தங்கள் வருகைக்கு நன்றி..சீக்கிரம் அம்மா ஆகுங்க...
"அம்மாத்தனம்"...arumaiyana varthai prayogam....pramaatham
ரெட்டைவால் ' ஸ் said...////
"அம்மாத்தனம்"...arumaiyana varthai prayogam....pramaatham/////////////
நல்லா சமைச்சிருகேன்னு தன் மகளை அம்மா பாராட்ற மாதிரி.!...தேங்க்ஸ் ரெட்டைவால்ஸ்...!
Hey...below one is the real humour
தேக்கு மரத்துல ஊசி நுழையுமாங்கற ஆணவத்துல படுத்தவனுக்கு ப்ளட் குடுத்து முடியப்போற நேரத்துல கண்ணு முன்னாடி ஓடிகிட்ருந்த டிவி திடீர்னு கேபிள் கட் ஆன மாதிரி திடீர்னு பொறி பொறியா தெரிய ஆரம்பிச்சது...டிவில எதோ பிரச்சன போலருக்குன்னு திரும்பி நர்ஸ பார்த்தா நர்ஸ் மூஞ்சும் அப்டிதான் தெரிஞ்சது...அய்யோயோ, நினைவு தப்புதுன்னு எங்க தாத்தா சாகபோறப்போ சொன்னாரே, அது இதுதானான்னு கைய தூக்குனது மட்டும்தான் நினைவுல இருக்கு...பீசு சுவிட்ச் ஆப்..அதுக்கப்றம் 92 ல செத்து போன எங்க தாத்தாவ பார்த்தேன்...இன்னும் அந்த பொம்பளயோடதான் சுத்திக்கிட்டு இருந்தாரு..(என் ஆத்தா.)
Humour is one which will not failure @ anytime and any trend...So you will get succeed @ anytime as humour is your main weapon
---thiagooo
All the best and proud to be frnd....
Ur's,
thiagooo...
Humour is one which will not failure @ anytime and any trend...So you will get succeed @ anytime as humour is your main weapon
---thiagooo//////
எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டதுதாண்டா.......என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க....!
நல்ல போஸ்ட்!!.
ஒரு முறை என் அக்காவிற்கு அம்மா ஆகி இருக்கிறேன். மீண்டும் பல மனிதர்களுக்கு அம்மா ஆக அசை படுகிறேன்.
- ஆனந்த்.