பொண்ணு பார்த்த கதை .
எனக்கு மூச்சு பேச்சே வரல, எல்லார்கிட்டயும் இவ்ளோ நல்லா பேசறவன் என்கிட்டே என்ன பேச போறானோன்னு ஒரே நடுக்கம்.
ஆனா, இன்னும் கொஞ்ச நாள்ல இவன தூங்க விடாம விடிய விடிய பேசபோறோம்னு மட்டும் உள்மனசு அடிச்சு சொன்னுச்சு..!
தோட்டத்துக்கு வந்தோம்,
அப்போதாங்க அவன முழுசா பார்த்தேன்,
கொஞ்சம் க்ளோஸ் அப்ள அவன பார்த்ததும், மனசுக்குள்ள ஏதேதோ ஜப்பானீஸ் எழுத்தெல்லாம் குறுக்க நெடுக்க ஓடுனுச்சு... அத தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி பார்த்தப்போ வெக்கம்னு வந்துச்சு..!
"என்ன ரொம்ப வெட்கப்பட வைக்கரிங்கன்னு" அவன் காதுக்குள்ள சொல்லனும்போல இருந்துச்சு..
ஆனா சொல்லல...!
அன்னிக்கு சிபி என்கிட்டே என்ன பேசுனான்னு நான் ஆயிரம் க்ளு குடுத்தா அதுல நீங்க அஞ்சத்தான் கரெக்டா கண்டுபுடிப்பீங்க...!
பேச ஆரம்பிச்சான்..,
சிபி : என்ன நிக் நேம் வைக்க போறீங்க?
நான்: நான் எதுக்கு நிக் நேம் வெக்கணும்..?
சிபி: இல்ல கல்யாணத்துக்கு அப்பறம் ஒரிஜினல் பேர் வெச்சு கூப்ட்டா ஒரு கிக் இருக்காது..அதான் கேட்டேன்..!
எனக்கு லேசா கிர்ருன்னு ஆய்டுச்சு.. அட பாவி ...நான் இன்னும் உன்ன புடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையேடா என் செல்ல போருக்கின்னு சொல்ல உதடு துடிச்சுது..என் கண்ண பார்த்து என் மனச படிக்க ஆரம்பிச்சிருந்தான் என் மக்கு குட்டி..!
ம்ம்ம்..இன்னும் 5 நாள்ல சொல்றேன்னு சொன்னேன்..!
அழகா சிரிச்சான்...!
அஞ்சு நிமிஷம் எதுவுமே பேசாம இருந்தோம்..எதுவுமே பேசாம என் கண் வழியா நைசா எறங்கி என் மனச திருடிகிட்ருந்தான்..என் கண்ணு முன்னாடியே...!
என்னால எதுவுமே பண்ண முடியல..பண்ணவும் தோணல..
அது அவனோடதுதான...!
அடுத்து என்ன கேட்ருப்பான்னு நெனைக்கறீங்க..
ஒரு ரோஜாவ பூவ என் முன்னாடி மண்டி போட்டு இங்கிலீஷ் பட ஹீரோ மாதிரி ரொமாண்டிக்கா ஐ லவ் யு சொல்லி குடுத்துருபான்னுதான நெனைக்கறீங்க...அதான் இல்ல..!
Phone நம்பருக்கு பதில் Pan நம்பர் குடுங்கன்னு கேட்டான்...
அப்போதான் புரிஞ்சுது பார்ட்டி உள்ள பயத்தை மறைச்சு வச்சுகிட்டு இவ்ளோ நேரம் க்ரிப்பா பேசிக்கிட்டு இருக்குதுன்னு.. அப்போதான் கொஞ்சம் எனக்கும் தைரியம் வந்துச்சு..
போன் நம்பர் குடுத்தேன்..
நான் வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல என் நாக்கு அவனுக்கு தேங்க்ஸ் சொல்லி தொலைச்சிடுச்சு...
எனக்கு தேங்க்ஸ்-எல்லாம் வேணாம் வேற வேனும்ம்னு அவன் சொன்னதும்..
மறுபடியும் பயம், எங்க வீட்டு வெள்ளை கலர் உச்சிமாங்காளி (பூனைக்குட்டி ) மாதிரி வந்து கால சுத்திக்கிச்சு..
ஒரு வழியா தைரியத்தை வரவழைச்சுகிட்டு என்ன வேணும்ன்னு கேட்டேன்..
அப்புறமா சொல்லறேன்னு சொல்லிட்டான்...அட பாவி சொல்லிதொலைடா..எதா இருந்தாலும் சத்தியமா தரேன்னு நான் எப்டி அவன்கிட்ட சொல்ல.!
ஆனா அப்போ அவன் கேக்கல..
என்ன கேட்டு இருப்பான்னு கெஸ் பண்ணி வைங்க.. அத கடைசில சொல்றேன்...
நேத்து ட்ராவல் பண்ணதுல ரொம்ப டயர்டா இருக்குமே உங்களுக்கு ...இது நான்.
ஆமாம்ங்க..ஆனா இங்க எதோ ஒன்னு என்னை ரொம்ப சந்தோசமா எனேர்ஜெடிக்கா வெச்சிருக்கு..டயர்ட்னேஸ் தெரியல..! பொருக்கி..என்னைதான் சொன்னான்... !
வெக்கப்பட்டு நிமிர்றதுக்குள்ள உங்ககிட்ட வத்திபெட்டி இருக்கான்னு கேட்டான்..
வத்திபெட்டியா...எதுக்கு கேக்குறான்..பழைய தமிழ் சினிமால வர்ற சாம்பார் ஹீரோஸ் மாதிரி எங்க வீட்டுக்கு வெளக்கேத்த இப்பவே ரெடியா இருக்கீங்களான்னு மொக்கத்தனமா கேட்டு சத்தமா சிரிப்பானோ...பார்த்தா அப்டி தெரியலையே...ஒரு வேலை தம் அடிப்பானோ..அப்டி அடிச்சாலும் பொண்ணு பார்க்க வந்த எடத்துல அடிக்கமாட்டானே...வேற என்னவா இருக்கும்...எதுக்கு இப்போ கேக்குறான்...!
எதுக்கு கேக்குறீங்க...?
அதுக்கு அவன்...,
"ஒண்ணும்ல...இன்னிக்கு என் ராசி பலன்ல தொல்லைன்னு போட்டுருந்துச்சு , அதான்..வீட்டுக்கு போனோன்னோ, எங்க வீட்டு காலன்டர கொளுத்தரதுக்கு கேட்டேன்..!”
லிப்ஸ் கிஸ் எப்டி இருக்கும்னு மனசு யோசிச்சு பார்க்க ஆரம்பிச்சுது....!
எதுக்கு ரெண்டு மோதிரம் போட்ருக்கீங்கன்னு கேட்டான்..
எப்போ பார்த்தீங்க..? இது நான்..
வந்துதுல இருந்து ஷாக் அடிக்கற உங்க கண்ணை மட்டும்தான் பார்த்துகிட்ருக்கேன்...ஆனா, உங்க கண்னை பார்க்க முடியாம என் கண்ணு தவிக்கற நேரத்துல என்னை என்ன பண்ண சொல்றீங்க..அதான் மொதிரத்த பார்த்தேன்..
இவன்கிட்ட பேசி தோத்துபோக யாருக்குதாங்க பிடிக்காது...?
டேய் மக்கு குட்டி..உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடான்னு நான் மனசுக்குள்ள சொல்றத..எங்க வீட்டு ரோஜா செடி ஒட்டு கேட்டுட்டு அவன்கிட்ட சொல்லிடாதான்னு இருந்துச்சு.
சரி நான் கெளம்பறேங்கன்னு சொன்னவ்ன்கிட்ட, தேங்க்ஸ்க்கு பதிலா எதோ வேணும்னு கேட்டீங்கலேன்னு வெட்கத்த விட்டு கேட்டேன்...
ஆமாம்.. என் புருசன்ட்ட எனக்கு என்ன வெக்கம்..
அவன் சொன்ன பதில்:
.............................................................................................
பொருக்கி எதோ பொடி வெச்சுதான் என்கிட்ட அந்த கேள்விய என்கிட்ட கேட்டான்னு எனக்கு தெரியும்..அதனால அவன் கேட்டது எனக்கு புரியாத மாதிரியே நடிச்சிட்டு , எனக்கு அந்தளவுக்கு யோசிக்க தெரியாது, நீங்களே சொல்லிடுங்கலேன்னு கேட்டேன்...!
"நானும் உங்கள பாத்ததுல இருந்து யோசிச்சுகிட்டுதான் இருக்கேன். ஒன்னும் புரியல...நீங்களும் யோசிங்க...வர்ற வெள்ளிகிழமைக்குள்ள சொல்லுங்க சொல்லுங்க, அப்படியும் முடியலன்னா, வெள்ளிகிழமை ஈவினிங் வாங்க...நம்ம காந்தி பார்க்குக்கு போய் உக்காந்து ரெண்டு பெரும் ஐஸ் க்ரீம் சாப்ட்டுகிட்டே யோசிக்கலாம்..அப்பவும் பதில் கெடைக்கலைனா பார்க்குக்கு ஆப்போசிட்ல ஒரு முருகன் கோவில் இருக்கு...சர்க்கரை பொங்கல் நல்லா இருக்கும்...அத வாங்கி சாப்ட்டுட்டு அங்கேயே உக்காந்து ரெண்டு பெரும் திருதிருன்னு முழிக்கலாம்..!”
சிரிச்சிட்டு போய்ட்டான்...
அவன என்கிட்ட விட்டுட்டு... !
----------------------------------------------------------------------------
வெளியூர்காரனுக்கு..,
முடிவில்லா நம் நட்பின் தொடக்கம் போல்,
அன்னியாயகாதலில் ஆரம்பிக்கட்டும் உங்கள் மன வாழ்வு...!
வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
சிவா.
@ Vasantha Kaala Paravai Siva.//
ரொம்ப நன்றி சிவா..நீங்க சைந்தவி கதைய எப்டி எழுதிருக்கீங்கன்னு எல்லாரும் சொன்னப்ரம் நான் சொல்றேன்..! :)
http://veliyoorkaran.blogspot.com/2010/09/blog-post.html
உச்சிமாங்காளி (பூனைக்குட்டி )// பூனைக்குட்டி பெயர் சூப்பர்!
காலைல வசந்தகால பறவை யிலேயே படிச்சேன்....[Google Readerஇல்] ... இங்க நீ கொஞ்சம் உன்னோட உட்டாலங்கடி சேர்த்து எழுதி இருக்கே போல... இரு படிச்சுட்டு வரேன்....
வழக்கம் போல கலக்கல் மாமே..
இது என்ன சிறுகதையா..யாருக்கு யார் எழுதின லெட்டெர்....பொண்ணு யாரு பார்த்தா...?வெளியூர் காரணுக்கு கல்யாணமா...
ஒண்ணுமே புரியலையே...
ஆனா மேற்க்கண்ட...பதிவில் உள்ள காதல் சூப்பர்...
அய்யோ... இப்படி கூட்டு சேர்ந்து கொல்றீங்களே... வெளியூரு நீ வழக்கம் போல ரெஸ்ட் எடு... சிவாவை தொடர்ந்து எழுத சொல்லு... நீ 2 மாசத்துக்கு 1 பதிவு போடுறதுக்கு பதில் சிவா - வாவது தொடர்ந்து எழுதட்டும்
@சிவா
//மனசுக்குள்ள ஏதேதோ ஜப்பானீஸ் எழுத்தெல்லாம் குறுக்க நெடுக்க ஓடுனுச்சு... அத தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி பார்த்தப்போ வெக்கம்னு வந்துச்சு..!//
ஹா..ஹா..ஹா.. சூப்பர் சார்!!
@வெளியூர்
//என் கண் வழியா நைசா எறங்கி என் மனச திருடிகிட்ருந்தான்..என் கண்ணு முன்னாடியே...!
என்னால எதுவுமே பண்ண முடியல..பண்ணவும் தோணல..
அது அவனோடதுதான...!
//
மச்சி!! லவ் பண்ணா இப்படி டிசைன் டிசைனா தோனுமாடா?? கலக்கலா இருக்கு. உன்னை பாராட்டல... சிவா சார்க்கு.
@வெளியூர்
//ஒரு முருகன் கோவில் இருக்கு...சர்க்கரை பொங்கல் நல்லா இருக்கும்...அத வாங்கி சாப்ட்டுட்டு அங்கேயே உக்காந்து ரெண்டு பெரும் திருதிருன்னு முழிக்கலாம்..!”//
இதை பார்த்தா சிவா எழுதின மாதிரி தெரியலையே.. நீ கை வச்சியா மச்சி... :))
யாரு எழுதினது?.. நீயா இல்ல வசந்தகால பறவைகளா?..
யாராயிருந்தாலும் சரி.........
.
.
.
சூப்பரா இருக்கு மச்சி...
.
.
உணர்வுபூர்வமா இருக்கு.. நல்லா எழுதியிருக்கீங்க..
Simply superb ,
i can understand one thing that, u guys are really love the love . just dreaming about it and those things only comes in your text . simply awesome guys , keep going . . .
i wish all the dreams come true
with best regards ,
Rockzs ....
http://rockzsrajesh.blogspot.com/
யாரு எழுதியிருந்தாலும் கதை சூப்பர், பீல் அப்படியே இருக்கு!
சிவா சாருக்கு வாழ்த்துக்கள்!
// இது என்ன சிறுகதையா..யாருக்கு யார் எழுதின லெட்டெர்....பொண்ணு யாரு பார்த்தா...?வெளியூர் காரணுக்கு கல்யாணமா...
ஒண்ணுமே புரியலையே...
ஆனா மேற்க்கண்ட...பதிவில் உள்ள காதல் சூப்பர்... //
நண்பா... இது ரொம்ப நாளா நடக்குது... ஆரம்பத்துல இருந்து படிங்க... ரசிப்பீங்க...
என்னாமா பீல் பண்ணி இருக்கீங்க.. ரொம்ப நல்லா இருக்கு...
சூப்பரா இருக்கு மச்சி...
....
romba nalla iruku.. next part eppa release?
செமையா இருக்கு! இப்படி லவ் பண்ணினா நல்லாத்தான் இருக்கும் :-) கற்பனை கதாப்பாத்திரம் என்றாலும் பொறாமையா இருக்கு
//என்னால எதுவுமே பண்ண முடியல..பண்ணவும் தோணல..
அது அவனோடதுதான...!
//
இது அருமைங்க ., அவரோட மனசு சைந்தவி கிட்ட இருக்கு அப்படின்னு சொன்னது உண்மைலேயே கலக்கல் ..!!
//
ஆனா இங்க எதோ ஒன்னு என்னை ரொம்ப சந்தோசமா எனேர்ஜெடிக்கா வெச்சிருக்கு..டயர்ட்னேஸ் தெரியல..! பொருக்கி..என்னைதான் சொன்னான்... !
//
இது செமையா இருக்குங்க .,
//எங்க வீட்டு ரோஜா செடி ஒட்டு கேட்டுட்டு அவன்கிட்ட சொல்லிடாதான்னு இருந்துச்சு///
ஹய்யோ , உண்மைலேயே உங்க கவிதைத்தனம் இதுல தெரியுதுங்க ., அப்புறம் வெளியூர்காருக்கு வாழ்த்துக்கள் ..!!
சிவா ! உங்கள் ரசனைக்கு ஒரு நமஸ்காரம். ஈகோ பார்க்காம நேயர் விருப்பத்தை நிறைவேத்திட்டீங்க.... உங்க ரசனையை காதலோட சேர்த்து மத்த விஷயங்களிலையும் வெளிப்படுத்துவீங்கன்னு நம்பறேன்
நல்லாயிருக்கு சிவா. உங்க கவிதைத்தனமும் ஆங்காங்கே கலந்து இருக்கு. அதைப் படிக்கும்போது இது வெளியூர்க்காரன் எழுதுனதில்ல-ன்னு (அவனுக்கு கவிதை எப்படி வரும்?:-) ) தெரியுது. ஆனால் அருமையா இருக்கு.
சில இடங்களில் சில எழுத்துப் பிழைகள். திருத்தினால் நல்லாயிருக்கும். (நானும் சிறு பிழைகளுடன்தான் எழுதுவேன். திருத்த ஆளில்லை)
I have become Shiva manjunathan's fan... keep writing Shiva... I thank veliyoorkaran who gave a chance to know abt Shiva manjunathan and his blog... Thank u...
DEAR SIVA...VERY NICE AND I APPRECIATE FOR MAINTAINING THE ROMANTIC TEMPO... I WISH YOU HAVE TO WRITE FEW MORE "CHOCOLATE PAGES" AND VELIYOOR HAVE TO WRITE SOME MORE "CHOCOLATE PAGES" AND THE COLLECTION HAS TO BE PUBLISHED AS BOOK IN THE NAME OF "CHOCOLATE PAGES"....I AM SURE.... THAT IS GOING TO BE ONE OF BEST SELLING ROMANTIC BOOK....
THOSE WHO ARE READING "CHOCOLATE PAGES" WILL TRY TO LIVE AS SIBI OR SAINTHAVI AT LEAST FOR FEW MOMENTS...
THE CONCEPT OF "CHOCOLATE PAGES" IS GETTING CONCENTRATED EPISODE..BY EPISODE
நலம், இன்னும் எத்தனை நாளைக்கு பொண்ணு பார்க்கப்போனதையே எழுதிட்டு இருப்பீங்க. சாக்லேட் பக்கங்களில் இன்னும் அதிகம் இனிப்பை எதிர்பார்க்கிறோம்.
-ஜீயார்
@@@Rajkumar says:
"CHOCOLATE PAGES" WILL TRY TO LIVE AS SIBI OR SAINTHAVI AT LEAST FOR FEW MOMENTS...//
THE CONCEPT OF "CHOCOLATE PAGES" IS GETTING CONCENTRATED EPISODE..BY EPISODE.////
@Siva..,
Thats all I want to say to you your honour..!
Thanks for accepting my request and make me happy..!
by
Your best and number one fan..,
Veliyoorkaran.
@All the fans,@ "Chocolate Pages from Sainthavi Fans Club"// :)
Thanks buddy's..!
Thanks a lot for all your support towards us. :)
Cho.. Sweet... Very romantic.. Good one Veliyoor.. !
இப்டி எல்லாம் கூட லவ் பண்றத எழுத முடியுமா? இன்னைக்கு தான் உங்க ப்ளாக் படிச்சேன். விண்ணை தாண்டி வருவாயா படம் பாத்த எபக்ட்.... அடிக்கடி வருவேன்... நெறையா எழுதுங்க......
@ வெளியூர்க்காரன்: மிக்க நன்றிங்க... எல்லோரும் இவ்ளோ ரசிப்பங்கன்னு கொஞ்சும் கூட எதிர் பாக்கல..
விதை போட்டுட்டு செடிக்காக காத்திருக்கும் குழந்தை மாதிரி,
தினமும் இங்க வந்து ஒரு டைம் பாத்துட்டு போவேன்...
ஒரே ஒரு பதிவு போட்டுட்டு இவ்ளோ செடிகள்(comments) வராத பார்த்து,
ரொம்ப மலைச்சு போயிட்டேன்...
நன்றிய சரியான முறைல சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்ல..
அதனால அடுத்த 2 episode choclate pages எழுதி இருக்கேன்...
உங்களுக்கு வர்ற புதனுக்குல அனுப்பறேன்...
என்றும் நன்றியுடன்,
சிவா
@All the fans,@ "Chocolate Pages from Sainthavi Fans Club":
இந்த உலகம் காதலால் இயங்குகிரதுன்னு யாரோ சொன்னப்போ...
நான் நம்பவேஇல்ல...
ஆனா உங்க ரசனைக்கு பின்னாடி, உங்க கமெண்ட்ஸ் பின்னாடி ஒரு காதல் ஒளிஞ்சுகிட்டு எங்கள பார்த்து கண்ணடிக்குது,
காதல் கண்ணடிக்கும் பொது.. கண் இமைக்காமல் பார்க்கும் காதலர்கள் போல்..
நாங்க எழுதும் போது நீங்களும்,
நீங்க எழுதும்(comments/blog) போது நாங்களும்,
கண் இமைக்காமல் ரசிகிரோமே,
இந்த உறவுக்கு உலகத்தில் பெயர்இல்லன்னு யார்சொன்னாலும்,
காதல் இருக்கும் வரை வேறு பெயர் தேவை இல்லன்னு சொல்லுங்க.....
மறுபடியும் இன்னும் கொஞ்சம் choclates கொண்டுவந்து உங்கள பாக்கறேன்...:-)
என்றும் நன்றியுடன்,
சிவா
@SIVA..//
காதல காதலிக்கற எல்லாருக்குமே சைந்தவி சிபியோட காதல் புடிக்குது..ரொம்ப அழகான விஷயம் இது...நான் முன்னாடி சொன்னமாதிரி இங்க சிபிக்களுக்கு பஞ்சமே இல்ல சிவா...! சைந்தவிக்களுக்கும்தான்...!
குறும்பான காதல் புருஷன்னா எப்புடி இருக்கனும்கற ஒரு ட்ரைலர்தான் சிபி..! அழகான காதல் மனைவின்னா...இந்த கேள்விக்கு பதில்தான் சைந்தவி..! நம்மளால முடிஞ்ச வரைக்கும் எல்லா ஆண்களுக்குள்ளையும் இருக்கற சிபிதனத்த வெளில கொண்டு வருவோம்..சிபி வெளில வந்துட்டா சைந்தவி தானா வந்துருவா...! நீங்க நல்லா எழுதறீங்க சிவான்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல...! எல்லாரும் சொல்லிட்டாங்க..! உங்ககிட்ட நான் ஒன்னே ஒன்னு கேக்கனும்னு ஆசைபடறேன்....
யாரு சார் உங்க மனசுல இருக்கற அந்த பிகரு...?
Waiting for the next episode..! :)