- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


நான்தான் சார் சிபி,

பியர் பிரியாணி பீடான்னு வாழ்ந்துக்கிட்டு இருந்த ஒரு பையன்...கோக், பிஸ்ஸா, பபிள்கம்னு மாறின கதைதான் என்னோடது!
எனக்கு இந்த உலகத்துல மொத்தம் மூனு விஷயம்
பிடிக்கும்ங்க. .
1.சைந்தவி...2.லவ்...3.சைந்தவியோட லவ்.
சில பேருக்கு லவ் அட் பர்ஸ்ட் சைட்ல  நம்பிக்கை இருக்கும்.சில பேர் அப்பா அம்மா பார்க்கிற பொண்ணுங்ககிட்ட கூட காலம் பூரா கவித்துவமா வாழ்வாங்க.உண்மை என்னன்னா நாங்க இதுல எந்த ரகம்னு எனக்கே சொல்லத் தெரியலை. Why Because, am a Blessed child of Destiny..!

சத்யம், மாயாஜால் , ஐனாக்ஸ்னு சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்த போது தான் அந்த ஃபோன் கால் வந்தது..!

"சிபி..! அம்மா பேசறேன்டா.சனிக்கிழமை புறப்பட்டு ஊருக்கு வந்துடு.பக்கத்து ஊர்ல உனக்கு பொன்னு பார்த்து வச்சிருக்கோம்.நீயும் ஒரு எட்டு பார்த்துட்டேன்னா பேசி முடிச்சுடலாம்!"

"அம்மா நோ..நோ..எனக்கு இப்போ கல்யாணம் வே...."

"ந்தா அப்பா பேசறாராம்...!"

"என்னடா...!! ஒழுங்கா வந்து சேரு!".

அப்பா முகம் ஒரு நிமிஷம்  வலது மூளைக்குள் வந்து போனது.இனி பேசி டைம் வேஸ்ட். ஊருக்கு போகும் போது பஸ்ஸில் தூக்கமே வரலை.

"ஹாய்! ஜெஃப்ரி ஆர்ச்சர் படிப்பீங்களா?

"கடைசியா என்ன படம் பார்த்தீங்க?

"ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா? "

இதுக்கெல்லாம் என்ன பதில் கிடைக்கும்?ம்ஹூம்!

"ரமணி சந்திரன் ,அவள் விகடன், ஸ்நேகிதி  படிப்பேன்.நீங்க சொல்ற ரைட்டரெல்லாம்தெரியாது.!"
"கடைசியா பார்த்த படம் கண்டேன் காதலை!"

"ஸ்போர்ட்ஸெல்லாம் அவ்வளவா தெரியாது.கிரிக்கெட் சுத்தமா பிடிக்காது.எல்லாம் ஒரே ஃபிக்ஸிங்".

இப்படித்தானே இருக்கப் போகிறது. அப்பனை நினைத்தால் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.மீசை தடித்த செங்கிஸ்கான்.இன்னும் என்னென்னவோ திட்டலாம் அந்தாளை.விண்ணைதாண்டி வருவாயா கார்த்திக்குக்கு கிழக்குச் சீமையிலே விஜயகுமார் மாதிரி ஒரு அப்பா இருந்தா எப்படி இருக்கும்? அப்படிதாங்க எனக்கும்! என்ன கொடுமை இதுன்னு பார்க்கறீங்களா? 

அப்பேற்பட்ட ஒரு மகாத்மா எனக்கு பொன்னு பார்த்தா எப்படி இருக்கும்? எப்படியும் ஏதோ ஒரு கைநாட்டை என் தலைல கட்டி வைக்க போறானுங்கன்னு எரிச்சலா வந்தது. வேணாமுன்னு சொல்லலாம்னு பார்த்தா எங்கப்பன் மீசை குளோசப் ஷாட்டில வந்து எகிறுவான். தக்காளி எதுக்கு பிரச்சினையை வாரிக்கொட்டிக்கிட்டு...கழுதை போவோம்..பார்த்த உடனே நடையைக்கட்டிட்டு வந்துடுவோம்னு போனேன்.

பேரென்னப்பா?

சைந்தவி!

நம்ம ஊர்ல இப்படி பேரெல்லாம் வைக்கிறானுங்களா?

டிபிகல் மல்லிகைபூ பட்டுபுடவை வாசனைக்கு நடுவுல திடுதிப்புனு

"மாப்பிள்ளைய பார்த்து வணக்கம் சொல்லுமான்னு ஒரு சவுண்ட்.(நம்ம பூர்ணம் விஸ்வநாதன்- - மாம்ஸ்!). நிமிர்ந்து பார்த்தா...

அசப்புல கலாப காதலன் படத்துல வர்ற ரேணுகா மேனன் மாதிரி ஒரு பொண்ணு . சுத்தமா அந்த இடத்துக்கே சம்மந்தமில்லாத மாதிரி! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

எங்கப்பா கூட கொஞ்சம் தனியா பேசணும்னு சொன்னேன். பொசுக்குனு எல்லாபயலும் சிரிச்சுட்டானுங்க. உலகத்துலயே பொன்னு பார்க்க வந்து தான்  அப்பன் கூட தனியா பேசணும்னு சொன்ன ஒரே பேக்கு நானாதான் இருப்பேன்னு நினைச்சுட்டானுங்க போல .முதல்ல பொன்னு கூட ரெண்டு வார்த்தை பேசிட்டு வா"ன்னாரு  மீசை.

தோட்டத்துல கிணத்தடிக்கு அனுப்புனானுங்க.

இந்த ராட்சசிக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. மெதுவா ஆரம்பிச்சேன்

"Ah Well....என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க ? நிமிர்ந்து பார்த்தா.

"ம்ம்ம்..ருஷ்டி! ஷெல்டன் அப்புறம் ஜெஃப்ரி ஆர்ச்சர்!
The Enchantress of Florence படிச்சுட்டு இருக்கேன் இப்போ!"

எனக்கு தொடை லேசா நடுக்க ஆரம்பிச்சுது..!

"கடைசியா என்ன படம் பார்த்தீங்க ?"

"The Break up Plan.ஜென்னிஃபர் லோபஸுக்கு வயசாயிடுச்சுல்ல. உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா .ரஃபேல் நடால் மேட்ச்னா மிஸ் பண்ண மாட்டேன். ஸாக்கர்ல இந்த தடவை ஜெர்மனி தான்.."

நான் இன்னும் பஸ்ல தூங்கிட்டு தான் இருக்கேனா? இது நிஜம்தானா! வரப்பட்டிக்காட்டுக்குள்ள ரஃபேல் நடாலா?உண்மை தானா...இல்லை ஏதாவது தேவதை ..வரம் டகால்டியா.! அட நிஜந்தான்!நம்ம பூர்ணம் விஸ்வநாதன் டென்ஷனா இருக்காரே. ஆனா இந்த ராட்சஸி முகத்துல அரை இன்ச் டென்ஷன் கூட காணொமே!

இப்போ எனக்கு வாயும் வார்த்தையும்  ரொம்ப ரோலிங் ஆக ஆரம்பிச்சது.

"போதுங்க... இதெல்லாம் கனவா நனவான்னு தெரில..."

கலகலன்னு ஒரு சத்தம்... பக்கத்துல இருந்த மல்லிகை பூ செடி இவ சிரிச்ச அழகு சிரிப்புல வெக்கப்பட்டு தலைகுனிஞ்சுகிச்சு.. மாமரத்துல ஒரு பட்சி உக்காந்து இவதாண்டா இவதாண்டா விட்றாதன்னு கத்துச்சு...(தக்காளி அந்த பட்சியதான் இன்னும் தேடிகிட்ருக்கேன்...)
"வேணும்னா கிள்ளிப்பார்த்துக்கங்க".மறுபடியும் சிரிச்சா.

சட்டுனு அவளோட உள்ளங்கையை கிள்ளப் போனேன்.அப்போ சிவந்தது பாருங்க அவ முகம்...அதுக்காகவே எனக்கு  ரெண்டாவதுல பாடம் சொல்லிக்கொடுத்த கணக்கு வாத்தியார்ல இருந்து என்னோட இப்போதைய  ரீஜினல்  மானேஜர் வரைக்கும் எவனை வேணும்னாலும் போட்டுத் தள்ளலாம்.

நேரா மீசைகிட்ட போனேன் .சிரிச்சார். கிழக்குச் சீமையிலே விஜயகுமாருக்குள்ளயும் ஒரு மணிரத்னம், வஸந்த் பட அப்பா ஒளிஞ்சிருக்கார்னு அன்னிக்குதான் தெரிஞ்சது!

எப்படி என் செலெக்ஷன்ங்கிற மாதிரியான பார்வை.

"என்னடா பொண்ணு  ஓ.கே வா?"

"எப்பா..என்னை பெத்ததுக்கப்புறம் உன் வாழ்க்கைலயே இப்போதான் உருப்படியான காரியம் பண்ணியிருக்கே! அந்த புள்ளையை கூப்பிட்டு இப்படியே நம்ம வீட்டுக்குப் போயிடுவோம்..வாப்பா"

எத்தனை தடவை சொன்னாலும் சலிக்காத கதை. ஓ.கே  பாஸ்... கிச்சன் ல டம் டும்னு சத்தம் கேக்குதா! அவதான். அவளுக்கு இந்த ஜென்மத்துல வராத பாதாம் அல்வாவை முப்பதியேழாவது  முறையா ட்ரை பண்ணிட்டு இருக்கா. விதி....நான் இதை சாப்ப்டே ஆகனும். சரிங்க நான் இப்போ வெளில கெளம்பறேன்...சீக்கிரம் திரும்ப சந்திப்போம்...!
அதுவரைக்கும் ஜாலியா  லவ் பண்ணிட்டு இருங்க!

.......................................................(Chocolate பக்கங்கள் தொடரும்)


                                                    - By Rettaival's 
                                      

27 Responses so far.

  1. vinu says:

    my best wishes to puthu maaaaapilai

    ippadiyea neenga love stories aaha elluthittu irrukkaanumnu aasaipadurean


    matha marriage aana blogrs maathiri neengalum "no marriage" warning story elluthidakkoodathu


    ungalukkum ungal thunaiviyaarukkum enathu vazthukkal

  2. @@@vinu said...
    my best wishes to puthu maaaaapilai

    அண்ணா எனக்கு ஜனவரி மாசம்தான்னா கல்யாணம்...நான் ஒரு சுமாரான பிரபல பதிவர்ங்கறதால யாரோ சும்மா வெளையாடிருக்காங்க ...எனக்கு இன்னும் கல்யாணம் ஆகளிங்னோவ்...! ஜனவரி மாசம் விஷ் பண்ணுங்க வாங்கிக்கறேன்...அது வரைக்கும் நாங்க யூத்துதான்...! :)

  3. வெளியூரு,
    காதல் வந்தாவுடனே எல்லாம் மாறிடுதுய்யா...

    மல்லிக்கை பூச்ச்செடின்ற, மாமர கிளின்ற - எங்கயோ போய்ட போ! நல்லா இருந்தா சரி

  4. @@@@அருண் பிரசாத் said...
    வெளியூரு,
    மல்லிக்கை பூச்ச்செடின்ற, மாமர கிளின்ற - எங்கயோ போய்ட போ! நல்லா இருந்தா சரி.///

    யோவ் இந்த பதிவ நான் எழுதலையா...ரெட்டைவால்ஸ் எழுதுனான்...! :)

  5. Unknown says:

    //// @@@@அருண் பிரசாத் said...
    வெளியூரு,
    மல்லிக்கை பூச்ச்செடின்ற, மாமர கிளின்ற - எங்கயோ போய்ட போ! நல்லா இருந்தா சரி.///

    யோவ் இந்த பதிவ நான் எழுதலையா...ரெட்டைவால்ஸ் ////

    அது தானே... பயந்துட்டேன். எங்க நக்கல் திலகம் வாலு நிமிந்துருச்சோன்னு.

    But Guys,its really nice. keep going..

  6. //
    சட்டுனு அவளோட உள்ளங்கையை கிள்ளப் போனேன்.அப்போ சிவந்தது பாருங்க அவ முகம்...அதுக்காகவே எனக்கு ரெண்டாவதுல பாடம் சொல்லிக்கொடுத்த கணக்கு வாத்தியார்ல இருந்து என்னோட இப்போதைய ரீஜினல் மானேஜர் வரைக்கும் எவனை வேணும்னாலும் போட்டுத் தள்ளலாம்.

    //
    அவளுக்கு இந்த ஜென்மத்துல வராத பாதாம் அல்வாவை முப்பதியேழாவது முறையா ட்ரை பண்ணிட்டு இருக்கா. விதி....நான் இதை சாப்ப்டே ஆகனும்
    //

    இது டாப்பு. கலக்கறிங்க ரெட்டை... :))

    (தலைஎழுத்து...) வாழ்த்துகள் வெளி...

  7. This comment has been removed by the author.
  8. நீ கலக்கு வாத்தியாரே...

    செம ஸ்வீட் உங்க "சாக்லேட் பக்கங்கள்...

  9. என்னய்யா வெளியூரு...

    எழுத்தெல்லாம் கவிதையாட்டம் வருது...

    இப்படி எழுதுறதுக்காகவே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கே...

  10. vinu says:

    meeeeeeeeeeee the firstttaaaaaaaaaaaa sollavea illea

  11. KANA VARO says:

    யாருப்பா அது? நம்ம அண்ணன் ரொம்ப பீல் பண்ணி ஒரு மேட்டர் எழுதியிருக்கார். வெட்டி தனமா உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கீங்க. வந்து உங்க பீலிங்க்ஸ் ஸையும்கொட்டிட்டு போங்க

  12. நவீன நடை யில் சங்க காலத்து கதைகளின் அழுத்தம் அருமை நண்பரே....

  13. என்ன தல ஜனவரிலதான் கல்யாணமா? இப்பவே பொறுப்பு வந்திடிச்சே! பேஸ்..பேஸ்! கரெக்டா பதிவு போட்டுட்டீங்க!

  14. Anonymous says:

    நல்லா இருக்கு !!!

  15. yummmi five star choclate pages

  16. yummi five star choclate pages

  17. //நான்தான் சார் சிபி,

    பியர் பிரியாணி பீடான்னு வாழ்ந்துக்கிட்டு இருந்த ஒரு பையன்...கோக், பிஸ்ஸா, பபிள்கம்னு மாறின கதைதான் என்னோடது!//

    எல்லாம் ஓசி-ல தான்னு சொல்ல மறந்துட்டான்யா இவன்...

  18. //எனக்கு இந்த உலகத்துல மொத்தம் மூனு விஷயம் பிடிக்கும்ங்க. .
    1.சைந்தவி...2.லவ்...3.சைந்தவியோட லவ்.///

    தக்காளி மனுசனாப் பொறந்த உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா??

  19. //அப்பா அம்மா பார்க்கிற பொண்ணுங்ககிட்ட கூட காலம் பூரா கவித்துவமா வாழ்வாங்க//

    என்னது கவிதா ஞாபகமாவா?

  20. //Why Because, am a Blessed child of Destiny..!//

    நீ இங்கிலீஷ் பரிட்சையில பெயிலான விஷயத்தை நான் யாருகிட்டயும் சொல்ல விரும்பலடாப்பா...

  21. //அப்பா முகம் ஒரு நிமிஷம் வலது மூளைக்குள் வந்து போனது.//

    உனக்கு இருக்குற கொஞ்சூண்டு மூளைக்குள்ள அவ்வளவு பெரிய உருவம் அதுவும் மீசையோட வந்திட்டுப்போனது ஆச்சரியம் தான்...

  22. //அசப்புல கலாப காதலன் படத்துல வர்ற ரேணுகா மேனன் மாதிரி ஒரு பொண்ணு .//

    அந்த படத்துல வர்ற அவ தங்கச்சி மாதிரி கொழுந்தியா இருந்தா அட்ரஸ் குடு நண்பா...

  23. //"Ah Well....என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க ? நிமிர்ந்து பார்த்தா.
    "ம்ம்ம்..ருஷ்டி! ஷெல்டன் அப்புறம் ஜெஃப்ரி ஆர்ச்சர்!The Enchantress of Florence படிச்சுட்டு இருக்கேன் இப்போ!"
    எனக்கு தொடை லேசா நடுக்க ஆரம்பிச்சுது..!
    "கடைசியா என்ன படம் பார்த்தீங்க ?"
    "The Break up Plan.ஜென்னிஃபர் லோபஸுக்கு வயசாயிடுச்சுல்ல. உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் பிடிக்குமா .ரஃபேல் நடால் மேட்ச்னா மிஸ் பண்ண மாட்டேன். ஸாக்கர்ல இந்த தடவை ஜெர்மனி தான்.."//

    இது எல்லாம் எனக்கு அவுட் ஆப் சிலபஸ்... அதனால புரியல மச்சி.

  24. //அப்போ சிவந்தது பாருங்க அவ முகம்...அதுக்காகவே எனக்கு ரெண்டாவதுல பாடம் சொல்லிக்கொடுத்த கணக்கு வாத்தியார்ல இருந்து என்னோட இப்போதைய ரீஜினல் மானேஜர் வரைக்கும் எவனை வேணும்னாலும் போட்டுத் தள்ளலாம்.
    //

    கணக்கு வாத்தியவருக்கு வயசு ஆயிருக்கும் அவர கணக்குல சேக்காத.... இந்த மேட்டரு உன்னோட ரீஜனல் மேனேஜருக்கு தெரியுமா?? அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாதுன்னு தைரியம்....ம்ம்ம்ம்

  25. எனது உயில்
    நான் மேல சொன்ன கமெண்டுகளை எந்த நேரத்திலும் அழிக்க ரெட்டைவாலுக்கும், வெளியூர்க்காரனுக்கும் உரிமை உண்டு

  26. அடுத்த ரவுண்ட ஆரம்பிச்சுட்டீங்களா சாமிகளா!!! பல பேரு ஆள் தேடி அலையவேண்டியது இருக்கும்னு நினைக்கிறேன்.