- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 48 comments and to comment


இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
 
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
 கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
கண்ணாமூச்சி - பம்பரம் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம் ...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"
கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!

"
இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...
இப்படிக்கு துக்கங்களை தொலைக்க முயற்சிக்கும் ..!

அயல்நாட்டு அடிமை 
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
இது சத்தியமா என்னோடது கெடயாதுங்க...இத எழுதுனவர் யாருன்னு கூட எனக்கு தெரியாது..ஆனா இத எழுதறவர பார்த்தா ஒன்னே ஒன்னு சொல்லணும்...!

பின்னிட்ட வாத்யாரே ......!சூப்பர்...!

வெளியூர்க்காரன்..

48 Responses so far.

  1. Jey says:

    மச்சி, டைப் அடிக்க விரல் தந்தியடிக்குதுயா..., எல்லாமே யதார்த்தமான உணர்ச்சி குவியலா இருக்கு. எழுதுனது நீ இல்லைனு வேற டிஸ்கில சொல்லிருக்கே. அது யார இருந்தாலும் அந்த ஆளுக்கு ஒரு “இது” யா....

    இதுல சொன்ன பல விசயங்கள் நானும் அனுபவிச்சிருக்கேன்.

  2. எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
    நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

    //

    நானும் ஏழையாய் அயல் நாட்டில்..

  3. கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்! //

    நிஜமான வலி..
    அனுபவித்தவனுக்கு தான் தெரியும்..

  4. Jey says:

    //மாட்டுவண்டிப் பயணம்
    கண்ணாமூச்சி - பம்பரம் - கோலி - பட்டம் என
    சீசன் விளையாட்டுக்கள்!////

    ம்ஹூம், இப்ப என் புள்ளைக்கு இதே விளையாட்ட, கம்பூடர்ல காட்டி, வெளக்குரதுகு பெரும்பாடா இருக்கு...

  5. ஒவ்வொரு வரியும் நம்மை போன்று அயல் நாட்டில் இருக்கிறவனின் நாடி பிடித்து சொல்லப் பட்டிருக்கிறது..

    இதை யார் எழுதியிருந்தாலும் அவர்களுக்கு.நன்றிகள்

  6. Jey says:

    ///ஒவ்வொரு
    ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
    விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
    உலககோப்பை கிரிக்கெட்!///

    கோப்பைக்கு பதிலா ஒரு வண்டி சந்தோசம் பரிசாக...

  7. Jey said...
    மச்சி, டைப் அடிக்க விரல் தந்தியடிக்குதுயா..., ////

    என்னது டைப் அடிக்கும்போது வெரல் நடுக்குதா...? உடனே போய் டாக்டர பாரு மச்சி..! ஆரம்பத்துலையே காமிச்சா சரி பண்ணிரலாம்...! :)- இப்படிக்கு நல்ல படைப்புகளை ஓவராய் எமோசன் ஆகி செயற்கையாய் பாராட்டுபவர்களை கூச்சம் இல்லாமல் கலாய்ப்போர் சங்கம்.

  8. Jey says:

    ///சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
    மீண்டும் அயல்தேசத்திற்கு!///

    கல்யாணம் குழந்தைகள்னு திரும்பி போக மனசில்லாம, இங்கனயே இருந்துட்டேன், இப்ப இவங்களுக்கு ஆகுர கல்வி மர்றும் எதிகால கல்வி செலவு கணக்குள எடுத்தா, திரும்பி போக வேண்டியிருக்கும் போல...

    என்னமா எழுதியிருக்கான்யா மனுஷன்...

  9. @@@ வெறும்பய said...
    நிஜமான வலி..
    அனுபவித்தவனுக்கு தான் தெரியும்..//

    எப்பா யாருப்பா இத எழுதுனது...வந்து வெறும்பயகிட்டேர்ந்து இத வாங்கிக்கப்பா...! - இப்படிக்கு மனசுலேர்ந்து வரும் பாராட்டுகளை உரியவரிடம் சேர்க்க அரும்பாடு படுவோர் சங்கம்...! :)

  10. Jey says:

    // Veliyoorkaran said...///

    கொய்யாலே, கயில மாட்னா சட்னிதாண்டி...
    இப்படிக்கு..
    எலாத்துக்கும் சங்க வைத்து கலாய்ப்போரை பிடரியில் அடிக்கும் சங்கம்.

  11. @@@Jey said...
    என்னமா எழுதியிருக்கான்யா மனுஷன்...////

    மச்சி விடு விடு...பீல் பண்ணாத... !--எமொசனாகி பாராட்டியவர்கள் இயல்பாய் பாராட்டும்போது அவர்களை அரவணைத்து சமாதானபடுத்தி கை தட்டுவோர் சங்கம்...! :)

  12. Jey says:

    //கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!///

    இப்ப இதெல்லாம் வேணாம்யா, வெப் கேமரால பத்துக்கலாம், கிள்ள வேணாம், வலிக்கும்... குழந்தைக்கு..

  13. @@Jey said...
    // Veliyoorkaran said...///
    கொய்யாலே, கயில மாட்னா சட்னிதாண்டி...
    இப்படிக்கு..
    எலாத்துக்கும் சங்க வைத்து கலாய்ப்போரை பிடரியில் அடிக்கும் சங்கம்.////

    பிடரியில் அடிக்கும் சங்க உறுப்பினர்களை ஓவர் டைமில் கலாய்த்து, வறுத்தெடுத்து நொங்கு விவசாயம் செய்து நொங்கி எடுப்போர் சங்கம் இன்று முதல் துவக்கபடுகிறது...விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன..! :)

  14. @@@@Jey said...
    //கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!///
    இப்ப இதெல்லாம் வேணாம்யா, வெப் கேமரால பத்துக்கலாம், கிள்ள வேணாம், வலிக்கும்... குழந்தைக்கு..///

    குழந்தை சென்டிமெண்டில் ரொம்ப பீலிங்காய் மாறி, எமோசன் ஆகி தயிர் வடை சேரன் மாதிரி டயலாக் பேசும் டுபாக்கூர் வென்னைங்களை பார்த்து விழுந்து விழுந்து சிரித்து குஜாலாய் அசிங்கபடுத்தி கும்மியடிப்போர் சங்கம்...! :)

  15. @@ஜெய் மச்சி...எவனாச்சும் வந்தது இப்போ சொல்லட்டும்..மிக்க அருமை...அழகான கவிதை...மிக நல்ல பகிர்வுன்னு...ங்கொய்யா..இங்கயே வெச்சு கொல்றோம் அவனுகள...! - பார்மாலிட்டி பண்ணும் நொன்னை பதிவர்களை போட்டி போட்டு வெட்டி கொல்லும் ரவுடி பதிவர்கள் சங்கம்...பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம். :)

  16. எப்பயும் எனக்கு பிடிச்ச சிலதை மட்டும் பிரதானமா காட்டி கமெண்ட் போட்டுட்டு போவேன்.ஆனா,இந்தக் கவிதை முழுசுமே பிரதானமா தெரியுது.ரொம்பப் பிடித்த வரிகள் கீழே...

    //தூக்கம் விற்ற காசில்தான்...
    துக்கம் அழிக்கின்றோம்!

    வாரவிடுமுறையில்தான்..
    பார்க்க முடிகிறது
    இயந்திரமில்லாத மனிதர்களை!

    அம்மாவின் ஸ்பரிசம்
    தொட்டு எழுந்த நாட்கள்
    கடந்து விட்டன!
    இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
    எழும் நாட்கள் கசந்து விட்டன!

    கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!

    கிள்ளாமலையே
    நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
    யாருக்குக் கேட்குமோ?//

    உண்மையான ஏக்கமும்,தன்னுடைய கையாலாகாத தன்மையை நினைத்துக் கோபமும்,மறுகலும் கொண்ட ஒருவனின் வரிகள்!
    உண்மையை முகத்தில் அறைந்து சொல்கின்றன.

  17. @All Mokkai Pathivar's///மொக்கையாய் பாராட்டும் எல்லா அன்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...அண்ணேன்..எனக்கு தெரிஞ்சு இது ரொம்ப நல்ல கவிதை..உனக்கு புடிச்சிருந்தா சந்தோசமா பாராட்டுன்னேன்..இத கண்டிப்பா இத எழுதுனவர் படிப்பாரு...அதனால என்ன புடிச்சிருக்குன்னு எடுத்து சொல்லி பாராட்டு...சும்மா சிந்திக்கவைக்க பதிவுன்னு போட்டுட்டு போனா மொதோ டெட் பாடி நீதான் அண்ணேன்...இப்பவே சொல்லிட்டேன்...அப்பறம் கோச்சுக்காத..! :)

  18. @@@@@ILLUMINATI said...
    உண்மையான ஏக்கமும்,தன்னுடைய கையாலாகாத தன்மையை நினைத்துக் கோபமும்,மறுகலும் கொண்ட ஒருவனின் வரிகள்!உண்மையை முகத்தில் அறைந்து சொல்கின்றன..///

    மிக்க நன்றி திரு இலுமினாட்டி அவர்களே...! - வில்லங்கம் புடித்தவர்களிடம் கொஞ்சம் கூட பயப்படாமல் அடக்கி வாசிப்போர் சங்கம்...! :)

  19. //பிடரியில் அடிக்கும் சங்க உறுப்பினர்களை ஓவர் டைமில் கலாய்த்து, வறுத்தெடுத்து நொங்கு விவசாயம் செய்து நொங்கி எடுப்போர் சங்கம் இன்று முதல் துவக்கபடுகிறது...விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன..! :)//

    ரைட்.சனியன் சட போட ஆரம்பிச்சுருச்சு. :)

  20. இந்த கவிதை எழுதியவரின் பெயர்..

    'ரசிகவ் ஞானியார்'

  21. Jey says:

    //ILLUMINATI said...

    ரைட்.சனியன் சட போட ஆரம்பிச்சுருச்சு. :)///

    அந்த சையை வச்சி அப்படியே கஃழுத்துல சுத்தி வெளியூர துங்க விடி ராசா...

  22. Jey says:

    Veliyoorkaran said...

    பார்மாலிட்டி பண்ணும் நொன்னை பதிவர்களை போட்டி போட்டு வெட்டி கொல்லும் ரவுடி பதிவர்கள் சங்கம்...பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம். :)//

    மச்சி, போன தடைவை, பதிவ பத்தியே பேசாம மொக்கை போடுரப்ப, ரொம்ப ஃபீல் பண்ணியே அழுதையே... அதான்யா இந்த பார்மாலிட்டி...

  23. Jey says:

    Veliyoorkaran said...

    சும்மா சிந்திக்கவைக்க பதிவுன்னு போட்டுட்டு போனா மொதோ டெட் பாடி நீதான் அண்ணேன்...இப்பவே சொல்லிட்டேன்...அப்பறம் கோச்சுக்காத..! :)///

    அய்யோ ராசா, வுட்ருபா, பயமாருக்கு...
    இப்படிக்கு...
    காமெடி பீசுகள் மிரட்டும் போது, பயந்தா மாதிரி உல்லுலாய் காட்டும் சங்கம்.

  24. ஏய்..... ஏய்.. யாருயா அது அருவாளோட வறது..

    கொஞ்சம இருயா வெளியூரோட கடைசி ஆசைய கேட்டுப்போம் ....

  25. எதுக்கு சண்டை..?

    இதை , பட்டாபட்டிதான் எழுதினானு , சொல்லிடு வெளியூரு...



    ( சந்தடி சாக்கில், சரக்கடிப்போர் சங்கம்..)


    என்னய்யா ஆச்சு.. கதையிலிருந்து..கவிதை.. அப்புறம்...????

    என்னமோ பண்ணுப்பா...

  26. Jey says:

    பட்டாபட்டி.. said...//

    என்னய்யா ஆச்சு.. கதையிலிருந்து..கவிதை.. அப்புறம்...???? ///

    மட்டையாகி தாடிவளர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிச்சிருவாரு....

  27. Jey says:

    வெறும்பய said...
    ஏய்..... ஏய்.. யாருயா அது அருவாளோட வறது..

    கொஞ்சம இருயா வெளியூரோட கடைசி ஆசைய கேட்டுப்போம் ....///

    மஞ்ச தன்ணிய ஊத்திட்டு தலைய உலுப்புரதுக்கு காத்திருந்த...... இந்த ஆடு சமாதனம் பேசி தப்பிச்சிரும்.., பாத்துக்குங்க..

  28. மிக்க அருமை...அழகான கவிதை...மிக நல்ல பகிர்வு... சிந்திக்கவைக்க பதிவு (சொல்லிட்டனே சொல்லிட்டனே...)

    ஓடி வந்து ஆள் தேடி அடி வாங்கும் சங்கம்...

  29. @@@@Jey said...
    Veliyoorkaran said...
    அய்யோ ராசா, வுட்ருபா, பயமாருக்கு...
    இப்படிக்கு...
    காமெடி பீசுகள் மிரட்டும் போது, பயந்தா மாதிரி உல்லுலாய் காட்டும் சங்கம்.//

    Ha..Ha...Good one..! :)

  30. @@@பட்டாபட்டி.. said...
    எதுக்கு சண்டை..?
    இதை , பட்டாபட்டிதான் எழுதினானு , சொல்லிடு வெளியூரு...
    ( சந்தடி சாக்கில், சரக்கடிப்போர் சங்கம்..)////

    நான் கவிதைய சொல்ல சொல்ல நீதான் அதை பேப்பர்ல எழுதுனேன்னு எவனாச்சு கண்டுபுடிகரானுகலானு பார்ப்போம் இருயா...! - சந்தடி சாக்கில் சரக்கடித்து அதே சந்தில் நின்று ஊறுகாய் நக்குவோர் சங்கம்...! :)

  31. @@@TERROR-PANDIYAN(VAS) said...
    மிக்க அருமை...அழகான கவிதை...மிக நல்ல பகிர்வு... சிந்திக்கவைக்க பதிவு (சொல்லிட்டனே சொல்லிட்டனே...)
    //ஓடி வந்து ஆள் தேடி அடி வாங்கும் சங்கம்...///

    கிச்சு கிச்சு கிச்சு கிச்சு....! - டெர்ரர் பாண்டியன் என்று பெயரில் அடிவாங்க ஓடி வருபவர்களை கிச்சு கிச்சு மாத்தி சிரிப்பு காட்டுவோர் சங்கம்..! :) (எப்பா என் மொக்கை எனக்கே தாங்கலடா சாமிகளா...) :)

  32. வெளியூரு நீ அடிச்சாலும் சரி மிதிச்சாலும் சரி.... உண்மையா சொல்றேன் கவிதை சூப்பர்..... எழுதனவனுக்கு 4 புல் இலவசமா தரலாம்...

    ஓவரா உணர்ச்சிவசப்பட்டு பர்போரிடம் எல்லாம் புலம்பும் சங்கம்..

  33. @@@TERROR-PANDIYAN(VAS) said...
    வெளியூரு நீ அடிச்சாலும் சரி மிதிச்சாலும் சரி.... உண்மையா சொல்றேன் கவிதை சூப்பர்..... எழுதனவனுக்கு 4 புல் இலவசமா தரலாம்...
    ஓவரா உணர்ச்சிவசப்பட்டு பர்போரிடம் எல்லாம் புலம்பும் சங்கம்..///

    ஹா..ஹா..அடங்குங்கடா டேய்...இங்க மொக்கை தாங்கல...! - மொக்கை சங்கங்களை கலைக்க தனியே சங்கம் அமைத்து பரிசாய் வந்த நாலு புல்லையும் ஆட்டையை போட்டு தனியாய் குடித்து கும்மியடித்து குஜாலக்கடியாய் போராடுவோர் சங்கம்..! :)

  34. ஜெய் தல வாங்க வாங்க நம்ப வெளி புல் formல வந்து இருக்கு... கட மூடரதுகுல 2 புல் ஏத்திக்கலாம்.

    சும்மா இருப்போரை சொறிஞ்சி விட்டு அடி வங்கி வைப்போர் சங்கம்...

  35. @@@TERROR-PANDIYAN(VAS) said...
    ///அடி வங்கி///

    அடி வங்கியா...- தம்மீஎல்லா கம்ம்மேன்ட்டு தப்பு தப்பப்பா தையிப் பணறதுக்கு நீஈயி பொய் வேஷம் குடிக்கள்ளலாம்..- தப்பு தப்பாய் டைப் பண்ணி சாவடிக்கும் நோன்னைகளை தப்பு தப்பாவே டைப் பணியி கலைக்கும் சாங்கம்...! (ஒழுங்கா டைப் பண்றா வெண்ணை..ஒரு எழவும் புரியமாட்டேங்குது...எலேய் ஜெய்யு..ங்கொய்யால உனக்கும்தான்..! ) :)

  36. மன்னிச்சிகோங்க கம்பரே, திருவள்ளுவரே, நக்கீரரே.....

    கபாலென காலில் விழுந்து மன்னிப்பு கேக்கும் களவானிகள் சங்கம்...

    (கடை தொறந்து இருக்க சமயத்துல யாரும் வர மாட்டங்க..... அப்புறம் பூட்டின வீட்டு முன்னாடி வந்து சலம்பிட்டு போறது...)

  37. Veliyoorkaran said...

    //என்ன புடிச்சிருக்குன்னு எடுத்து சொல்லி பாராட்டு...சும்மா சிந்திக்கவைக்க பதிவுன்னு போட்டுட்டு போனா மொதோ டெட் பாடி நீதான் அண்ணேன்...இப்பவே சொல்லிட்டேன்...அப்பறம் கோச்சுக்காத..! :) //

    வெளி நீ இவ்வளோ சொல்லியும் ஒரு பீஸ் " பின்னிட்ட வாத்யாரே ......!சூப்பர்...! " அப்படின்னு சுளூவ கூவி இருக்கு... அத்த இரண்டு காட்டு காட்டு....

  38. கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!//

    கவிதை மனதை நொறுக்குகிறது.

  39. கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!//

    கவிதை மனதை நொறுக்குகிறது.

  40. Unknown says:

    vantharai valthuraikkum tamilanukku,saha ezhutharayum ezhuthinayum valara vendum enra ennam kadu pooripadikiren

  41. @@@azhahu said...
    vantharai valthuraikkum tamilanukku,saha ezhutharayum ezhuthinayum valara vendum enra ennam kadu pooripadikiren.////

    வாம்மா மின்னலு...! பொசுக்குன்னு வர்றா..பொசுக்குன்னு மறைஞ்சிடிரா..!

    பக்கத்துல இருக்கவன் எழுதறது நல்லாருக்குன்னு கைதட்றதுக்கு அவன் தமிழனா இருக்கணும்னு அவசியம் இல்ல...ரெண்டு கையும் கொஞ்சூண்டு மனசும் இருந்தா போதும்...! எல்லாத்தையும் தமிழ் தமிழ்ன்னு அடையாளபடுத்தி பிரிவினைபடுதரத மொதல்ல விடுங்க...! நீங்க நல்லா இருப்பீங்க... ! :)

  42. vinu says:

    கிள்ளச்சொல்லி
    குழந்தை அழும் சப்தத்தை...
    தொலைபேசியில் கேட்கிறோம்!

    கிள்ளாமலையே
    நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
    யாருக்குக் கேட்குமோ?


    vazikkirathu

  43. இந்த கவிதை எழுதியவர் நிலவு நண்பன்

    ஒவ்வொரு வரியும் உண்மை !

    http://nilavunanban.blogspot.com/2005/04/blog-post_19.html

  44. http://www.mudukulathur.com/kavithaiview.asp?id=214
    //


    இது யாருங்கோ?....

  45. http://pirabuwin.wordpress.com/2009/03/21/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

  46. Anonymous says:

    cha... ennada comedy piece kavithai ezhuthuthe-nu nenaichiten... ggrrr... thooo

  47. //இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
    வந்தவனுக்கோ சென்று விட ஆசை
    இதோ அயல்தேசத்து ஏழைகளின்
    கண்ணீர் அழைப்பிதழ்!//

    இரு தலை கொல்லி எறும்பு வாழ்க்கை! இந்த அடிமை வாழ்க்கை ஒரு நாள் மாறும் என்றே நம்புவோம்.

    நம் அடுத்த தலைமுறையாகிலும் நம் நாட்டிலேயே சந்தோஷமாக இருக்க நம்மால் ஆன அத்தனையும் செய்வோம்!!!