- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 112 comments and to comment

வெளியூர்காரனோட சைந்தவி கெடைச்சிட்டா... லவ் யு சைந்தவியும், மீ டூ சைந்தவியும் எழுத காரணமா இருந்த பொண்ணு...வெளியூர்க்காரன் சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்லேர்ந்து நீதானா குட்டி அந்த பொண்ணுன்னு  உருகி உருகி காதலிச்ச ட்ரீம் கேர்ள்..இன்னும் ரெண்டு மாசத்துல பொண்ணு பார்க்கலைனா உங்க எல்லார் மேலயும் எனக்கு கல்யாணம் பண்ணி வெக்க மாட்ரானுகன்னு போலீஸ்ல கேஸ் குடுதுருவண்டான்னு என் சொந்தக்காரனுகள மிரட்னதுல  பயந்து போய் தேடி கண்டுபுடிச்ச பொண்ணு..நேத்துதான் போட்டோ பார்த்தேன்...ரொம்ப ஹோம்லியா அழகா இருக்காங்க...வெளியூர்க்காரனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு..!

அதனால வெளியூர்க்காரன பாலோவரா வந்து படிச்சு சிரிச்ச பிகருங்க...,லவ்வர்ஸ் டே அன்னிக்கு வாழ்த்து மெயில் அனுப்பி வெளியூர்க்காரன உஷார் பண்ண ட்ரை பண்ண பிகருங்க..,யாருக்குமே தெரியாம நைசா வந்து படிச்சு சிரிச்சிட்டு வெளில வெளியூர்க்காரன புடிக்காத மாதிரி நடிச்ச பிகருங்க...,மனசுக்குள்ளயே வெளியூர்க்காரன நெனைச்சு ஒரு காதல் கோட்டைய கட்டி ஏங்கி தவிச்ச பிகருங்க..,இப்டி எல்லா டிக்கேட்டுங்களும் கண்ண துடைச்சுக்கிட்டு உடனே வெளியூர்க்காரன விட்டு ப்ளீஸ் கெட் அவுட்...இனிமே வெளியூர்க்காரன்ல பொண்ணுங்க வாசனையே அடிக்க கூடாது..ஏன்னா என்கிட்டே இன்னொரு பொண்ணு என்கிட்டே பேசறது எனக்கு வர போற பொண்ணுக்கு கொஞ்சம் கூட புடிக்காது.. !

பொண்ணு பார்த்து குடுத்துட்டாங்க..இன்னும் ரெண்டு நாள்ல நம்பர் வந்துடும்..அவங்ககிட போன் பண்ணி பேசணும்...அவங்கள ரசிக்க வெக்கணும்..உயிருக்குயிராகாதலிக்கணும்...காதலிக்கவெக்கணும்...கல்யாணம் கட்டிக்கணும்..எனக்கு ரொம்ப பயம் பயமா வருது சார்...ஏன்னா,

எனக்கு பொண்ணுங்ககிட்ட பழகறதுன்னா அவ்ளோ பயம்..பேச்சே வராது...!

கூசி போயிருவேன்...

வெளியூர்க்காரன்...

112 Responses so far.

 1. பரபரப்பு செய்தி...:
  வெளியூர்க்காரனுக்கு பெண் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த த்ரிஷாவும் அசினும் ஒரு பாட்டில் விஷம் வாங்கி ஆளுக்கொரு கட்டிங்கை ஷேர் பண்ணி ராவா அடிச்சிட்டு தற்கொலை முயற்சி..வெளியூர்க்காரன் இல்லாத வாழ்க்கையை தங்களால் நினைத்து கூட பார்க்க முடியாதென தங்கள் பெற்றோர்களிடம் கதறல்..!
  வெளியூர்க்காரன் மீதான ஒருதலைகாதலால் சென்னை மற்றும் புறநகரங்களில் தொடரும் தற்கொலை முயற்சிகள்...!

 2. இனிமே வக்காளி மயிறு தக்காளி பாடு போன்ற கெட்ட வார்த்தைகளை பதிவுகளில் பயன்படுத்த மாட்டேன் என வெளியூர்க்காரன் அறிவிப்பு..!
  வாழ்கையில் முதன்முறையாக காதலிக்க போவதால் மென்மையானவனாகவும் மலர் போன்றவனாகவும் மாறிகாட்டுவதாக சூளுரை..இதை தடுக்க யாராவது முயற்ச்சித்தால் வக்காளி மயிரா போச்சுன்னு அந்த நாதாரியை இழுத்து போட்டு வெட்டவேண்டியிருக்கும் எனவும் அறிவிப்பு...!!

 3. யோவ்.. முதல் கமென்ஸ் போட ஓடோடி வந்த என்ன.. ஏமாற்றிவிட்டாயே...

 4. எனக்கு பொண்ணுங்ககிட்ட பழகறதுன்னா அவ்ளோ பயம்..பேச்சே வராது...!

  கூசி போயிருவேன்...
  //

  ச்சோ..ச்சோ.. ரொம்ப நல்ல பையனா..இருக்கையேப்பா..

  வாழ்த்துக்கள்.. இனியாவது ..யாராவது கமென்ஸ் போட்டா.. ஒழுக்கமா பதில் சொல்லு..

  நக்கல் பண்ணினே.. உன்னைய திட்ட நாந்தான் வருவேன்.. அருவாளோட...

 5. ஏம்பா.. இத கொண்டாட.. பீரு.. ஹாட்னு பசங்க சொல்லுவாங்களே.. அத ஏதாவது வாங்கித்தருவே?..

  இல்ல சும்மா கேட்டேன்...

 6. dheva says:

  பட்டா பட்டி அண்ணாச்சி இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்கள அறிமுகப்படுத்தி வச்சாக.... அதுக்குள்ள் அளப்பறாயா ஒரு பதிவா.....

  //த்ரிஷா வும் அசினும் மட்டுமா விசம் குடிக்க போறாக.....தாங்க முடியலையே......//

  //எனக்கு பொண்ணுங்ககிட்ட பழகறதுன்னா அவ்ளோ பயம்..பேச்சே வராது...!


  கூசி போயிருவேன்...//


  கூசிப்போனா ஆளுமாதிரி தெரியலயே...!


  ஹா ஹா ஹா - வாழ்த்துக்கள்!

 7. வெளியூரு..

  காணவில்லை.. நக்கல் மன்னர்.. நைய்யாண்டி பதிவர்.. அரைமணி துளிகளாக காணவில்லை..

  வெளியூரு.. இப்ப எதுக்கு வெட்கம்.. சும்மா.. முக்காட எடுத்து வீசிட்டு வெளிய வா..

  வந்துரு..வந்துரு..தானா வந்துரு..
  இல்லேனா...( அப்புறம் சொல்றேன்..)

 8. போங்க பட்டு..எனக்கு வெக்கம் வெக்கத்துல வெக்கிகிட்டு வருது..!

  (எலேய் எவண்டா அவன் சிரிக்கறது...ராஸ்கல்...! )

 9. வாழ்த்துக்கள் வெளியூர்க்காரன்
  பெண் சைந்தவி ஆகவே இருக்க வாழ்த்துக்கள். முதலில் சைந்தவி பதிவப் படிக்க கொடுங்கையா உங்க மேல காதல் பீறிட்டு வர அது போதும்.
  வாழ்த்துக்கள்

 10. வாழ்த்துக்கள் வெளியூர்க்காரன்
  பெண் சைந்தவி ஆகவே இருக்க வாழ்த்துக்கள். முதலில் சைந்தவி பதிவப் படிக்க கொடுங்கையா உங்க மேல காதல் பீறிட்டு வர அது போதும்.
  வாழ்த்துக்கள்
  //

  அன்னைக்கு சொன்னததான் இன்னைக்கு சொல்றேன்..

  இன்னைக்கு சொல்றதைதான்..என்னைக்கும் சொல்வேன்..

  நீதான் வெளியூருனு சொல்லாதே...
  ( மகனே.. நீ விட்ட ஜொள்ளு.. உனக்கெதிரா திரும்பிடும் ..சாக்கிரதை..)

 11. Muthu says:

  வாழ்த்துக்கள் வெளி (பாவம் அந்த பொண்ணு )

 12. யோவ்.. குசும்புயா உனக்கு..
  படைப்பை.. நகைச்சுவை பிரிவுல பப்ளிஸ் பண்ணியிருக்க..

  லொள்லுதான் உனக்கு...

 13. Muthu says:

  பட்டாபட்டி.. said...

  நீதான் வெளியூருனு சொல்லாதே...
  ( மகனே.. நீ விட்ட ஜொள்ளு.. உனக்கெதிரா திரும்பிடும் ..சாக்கிரதை..):::::::::::::


  நீ தான் பட்டா வெளியின் உண்மையான நண்பன்
  ஆமாம் பெண் வீடு அட்ரெஸ் ப்ளீஸ். எதுக்கா எல்லாம் நம்ம வெளியை பற்றி நல்லவிதமாய் சொல்வதற்கு தான்

 14. Muthu says:

  எப்போ கல்யாணம் சொல்லு வெளி எல்லோரும் ஆஜர் ஆயிடுறோம்

 15. Singapore Airlines
  Ist Class...

  எல்லா டிக்கெட்டையும் இப்பவே புக் பண்ணிடு வெளியூரு..

  அட.. பணம் என்னயா பெரிய பணம்..
  பேங்ல இருந்து வெளிய எடு முதல்ல..மீதிய ப்ளைட்ல பேசிக்கலாம்..

 16. வாழ்த்துக்கு நன்றி திரு தர்ஷன் மற்றும் திரு தேவா....!
  ( இப்பவாச்சும் நம்புங்க மக்களே..வெளியூர்காரன் ரொம்ப டீசென்ட்டா மாறிட்டான்..இன்னிக்கு வாழ்த்து சொல்ற எல்லாருக்கும் இப்டிதான் நன்றி சொல்லுவான்..வெளியூர்க்காரன் மனித உருவத்துல இருக்கற மலர்ங்கறத நீங்க எல்லாம் ஒத்துக்கற வரைக்கும் இப்டிதான்..!) :)

 17. poltics says:

  Hi I saw your blog,i like your way of writing,Iam also from Tiruvarur,Nice to see some one from my town have a Blog,and popular in my office.U can reach me at Veeyam@gmail.com

 18. dei...congrats da domar alias daabur alias veliyoor!

  ha ha ha!

 19. மனித உருவத்துல இருக்கற மலர்ங்கறத நீங்க எல்லாம் ஒத்துக்கற வரைக்கும் இப்டிதான்..!) :)
  //

  அச்...சூ...ம்..
  என்னமோ சொன்னியே.. ஏன்னாது?...

 20. ...congrats da domar alias daabar alias veliyoor...

  சைந்தவி ஃபோட்டோவை விட உன் மாமனார் யாருன்னு பார்க்கனும்னு தான் ஆவலா இருக்கு

 21. ரெட்டைவால்ஸ் குஷி!

  பாரதி ராஜா படத்துல என்ட் கார்ட் போட்டதும் வர்ற மாதிரி வெளியூரு தன் சைந்தவியுடன் தூரத்தில் கையை கோர்த்துக் கொண்டே செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இனி யாரை நாங்கள் டோமர் டாபர் என்றெல்லாம் அழைப்பது என்றும் குழாயில் தண்ணி வரலைன்னாக் கூட இனி யாரைப் போட்டு அடிப்பது என்றும் மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

  ஆனாலும் வெளியூரு இதற்கு முன் ஃபிகர்களுக்காக அடி வாங்கின கதைகளே ஆயிரத்தைத் தொடும் என்பதால் பதிவுலகம் கவலைப்பட வேண்டாமென ரெட்டைவால்ஸ் தெரிவித்தார்.

  மேலும் பதிவுலக மக்களுக்காக இனி மனைவியிடம் அடி வாங்கப் போகும் கதைகளும் வெளியூர் பிளாகில் இடம் பெறும் என்பதில் ரெட்டைவால்ஸ் குஷியாக இருப்பதாக அமெரிக்க எஃப் .பி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது!

 22. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said...

  ...congrats da domar alias daabar alias veliyoor...

  சைந்தவி ஃபோட்டோவை விட உன் மாமனார் யாருன்னு பார்க்கனும்னு தான் ஆவலா இருக்கு:::::::::::  ஏன் ரெட்டை அவசர படர நம்ம வெளிக்கு பொண்ணு கொடுக்கிறார், எப்படி இருந்தாலும் கூடிய விரைவில் பேப்பரில் போட்டோ வரும்

 23. Muthu says:

  ரெட்டைவால் ' ஸ் said...

  மேலும் பதிவுலக மக்களுக்காக இனி மனைவியிடம் அடி வாங்கப் போகும் கதைகளும் வெளியூர் பிளாகில் இடம் பெறும் என்பதில் ரெட்டைவால்ஸ் குஷியாக இருப்பதாக அமெரிக்க எஃப் .பி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது!//////


  ஜாலி ஜாலி

 24. இவ்வளவு உசுப்பேத்தியும், வெளிய வரமாட்டிங்கிறானே வெளியூரு...

 25. தமிழ் கவிதையுலகம் அதிர்ச்சி...

  வெளியூரு இனிமேல் காலை மதியம் இரவு என கவிதைகளாக எழுதித்தள்ளப் போவதாக முடிவு...இதனால் மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.தபூ சங்கர் வெளிநாடு செல்லப் போவதாக முடிவு செய்துவிட்டதாக அரசாங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

  தக்காளி...மயிறு ...த்தா...என்பன போன்ற வார்த்தைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பை வெளியூர்க்காரன் ஜூலை மாதம் வெளியிடப் போவதாக அறிவிப்பு. அதை பட்டாபட்டி தலைமை ஏற்று முதல் பிரதியை பெற்றுக் கொள்வார் எனவும் வந்த தகவல்களால் கவிதை உலகம் கலக்கம் அடைந்துள்ளது.

 26. Muthu says:

  பட்டாபட்டி.. said...

  இவ்வளவு உசுப்பேத்தியும், வெளிய வரமாட்டிங்கிறானே வெளியூரு...


  எப்படி வருவாரு காசு விஷயம் ஆச்சே

 27. அதை பட்டாபட்டி தலைமை ஏற்று முதல் பிரதியை பெற்றுக் கொள்வார் எனவும் வந்த தகவல்களால் கவிதை உலகம் கலக்கம் அடைந்துள்ளது.
  //

  அன்னைக்காவது.. பட்டாபட்டிய போட்டுட்டு வரலாமானு சொல்லிடு...

  மனசு பக்..பக்..னு அடிச்சுக்குது...

 28. அப்பாவி says:

  ////இனிமே வக்காளி மயிறு தக்காளி பாடு போன்ற கெட்ட வார்த்தைகளை பதிவுகளில் பயன்படுத்த மாட்டேன் என வெளியூர்க்காரன் அறிவிப்பு..!///////

  வாழ்த்துக்கள்............. ஆனா, ஒரு சந்தேகம், இந்த வார்த்தை இல்லாம " காவல் காரனுக்கு " எப்படி விமர்சனம் எழுதுவது???
  --

 29. வாழ்த்துகள் வெளியூர்..

 30. வாழ்த்துக்கு நன்றி திரு முகிலன்,திரு அப்பாவி, திரு பாலிட்டிக்ஸ்...! :)

  (உஸ்ஸ்....எப்பா...யோவ்..பட்டாப்பட்டி...என்னய்யா இது ஒரு நாள் பார்மாலிட்டி பண்றதுக்கே எனக்கு இப்டி நெஞ்ச வலிக்குது...எப்டியா பிரபல பதிவர்கல்லாம் ஒவ்வொரு பதிவுக்கும் பண்றாங்கே..!! ரொம்ப செரமம்டேய்..!!! )

 31. வாழ்த்துக்கள் வெளியூரு, ஆக்சுவலா நா உன்னோட ஐ லவ் யூ சைந்தவிய படிக்கறதுக்கு முன்னாடி நீ ஒரு மொக்க பீசுன்னுதான் நெனச்சேன்... அப்புறம்தான் தெரிஞ்சுது நீ ஒரு சிங்கை வைரமுத்துன்னு... அதுக்கு காரணமாயிருந்த நம்ம திருமதி. வெளியூர் அக்காவுக்கு வாழ்த்துக்கள்...

  நீ உருகி உருகி ஜொள்ளு விட்டத பாத்தப்போ நீ ஏது லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவேன்னு நெனச்சேன்.. ஆனா நீ கல்யாணம் பண்ணிகிட்டு லவ் பண்ணப் போறே... வாழ்த்துக்கள் again...

 32. //சைந்தவி ஃபோட்டோவை விட உன் மாமனார் யாருன்னு பார்க்கனும்னு தான் ஆவலா இருக்கு//

  ஆமா வெளியூரு அவர் மண்டையில நச்சுன்னு அடிக்கிர உன் பதிவை பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்.

 33. //மனசுக்குள்ளயே வெளியூர்க்காரன நெனைச்சு ஒரு காதல் கோட்டைய கட்டி ஏங்கி தவிச்ச பிகருங்க..,இப்டி எல்லா டிக்கேட்டுங்களும் கண்ண துடைச்சுக்கிட்டு உடனே வெளியூர்க்காரன விட்டு ப்ளீஸ் கெட் அவுட்...இனிமே வெளியூர்க்காரன்ல பொண்ணுங்க வாசனையே அடிக்க கூடாது..//

  யோவ்,யாருமே இல்லாத கடையில யாருக்குயா டீ ஆத்துற?

  யோவ்,வெளி ரொம்ப சந்தோசம்யா.....

  ஆமா,இருக்காதா பின்ன,இதுவரைக்கும் வெளியில மட்டும் செருப்படி வாங்கிட்டு இருந்த நீ இனிமே வீட்டுலயும் செருப்படி மற்றும் விளக்குமாற்று அடி வாங்கப் போறன்னு நெனச்சா ரொம்ப ஆனந்தமா இருக்குயா....சந்தோசத்துல கண்ணெல்லாம் கலங்குது....

  ஆனா என்ன,சந்தோசமான இந்நேரத்துல அந்த பேரு தெரியாத புள்ள நினைவுக்கு வருது....ஹும்....அது தல எழுத்து அவ்ளோதான்....அதுக்கு ஒரே ஒரு வார்த்தை.
  அம்மா,தாயே...ஆனாலும் உன் selection சூப்பர்மா.பார்த்து பார்த்து,இப்டி ஒரு பாழுங்கெணத்த செலக்ட் பண்ணி இருக்கியே....உன்ன நெனச்சா என் அடி வயிறு கலங்குது.....

  அப்புறம்,நம்ம பயலுக எல்லாத்துக்கும்....
  யே,ராசக்களா....வெளியூர பொலி போடணும்னு ஆளாளுக்கு அலஞ்சிங்களே,இப்ப பாருங்க ஆடு தன்னாலேயே மாலை போட்டுக்கிட்டு நிக்கிது.என்னது,உடனே வெட்டணுமா?யோவ்,அதுக்கு வேற ஆளு வருதுயா...

  //தக்காளி...மயிறு ...த்தா...என்பன போன்ற வார்த்தைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பை வெளியூர்க்காரன் ஜூலை மாதம் வெளியிடப் போவதாக அறிவிப்பு. அதை பட்டாபட்டி தலைமை ஏற்று முதல் பிரதியை பெற்றுக் கொள்வார் எனவும் வந்த தகவல்களால் கவிதை உலகம் கலக்கம் அடைந்துள்ளது.//

  யோவ்,கத்திப் பேசாதையா ரெட்டை...’பாரு’க்கு போயிருக்குற பரதேசி எனக்கு போட்டி எவன்டான்னு சண்டைக்கு வந்துடுவான்...

 34. //Muthu said...

  வாழ்த்துக்கள் வெளி (பாவம் அந்த பொண்ணு )//

  ஆமா முத்து பெண்பாவம் பொல்லாதது.

 35. //யோவ்,யாருமே இல்லாத கடையில யாருக்குயா டீ ஆத்துற?//

  அப்ப வாவது யாராவது வருமான்னுதான்

 36. //உஸ்ஸ்....எப்பா...யோவ்..பட்டாப்பட்டி...என்னய்யா இது ஒரு நாள் பார்மாலிட்டி பண்றதுக்கே எனக்கு இப்டி நெஞ்ச வலிக்குது...எப்டியா பிரபல பதிவர்கல்லாம் ஒவ்வொரு பதிவுக்கும் பண்றாங்கே..!! ரொம்ப செரமம்டேய்..!!!//

  அதுக்கு காரணம் விடா முயற்சி மாப்ள...
  நீ எப்டி எவ்ளோ செருப்படி வாங்குனாலும் தொடச்சு போட்டுட்டு சுத்தினியோ,அதை மாதிரி தான் இதுவும்.... :)

 37. Muthu says:

  எல்லோரும் ரெடி ஆகிகோங்க ஆடு(வெளி) வெட்டு விழாவுக்கு போகணும்

 38. வெளியூர் மற்றும் பட்டா நண்பர்களுக்கு,

  உங்களை சந்திக்க முடியாத முடியாத வருத்ததில் பிரபாகர் எழுதிக்கொள்வது.

  உங்களை சந்திக்க விழைந்து பலமுறை பின்னூட்டமிட்டும் பதில் இல்லாததால் உங்களோடு கா...

  இந்த இடுகை சூப்பர் என்பதையும் இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டு முடித்துக்கொள்கிறேன்.

  கா விடும்,
  பிரபாகர்...

 39. வாழ்க்கையின் வசந்த காலத்திலிருந்து அடுத்த கட்டத்தை அடையப் போகும் வெளியூருக்கு வாழ்த்துக்கள்!

 40. என்னா தம்பி வெளியூரு ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்பா! சுறா பிளாப்புன்ன உடனே இப்பிடி ஒரு முடிவு எடுத்துட்டியேப்பா!எப்படியோ ஒரு ஓசிச் சாப்பாடு கன்பர்ம் டோய்!

 41. அட இவ்வளவு காலம் உனக்கு கல்யாணம் ஆகலையா??

  நீ கல்யாணம் ஆனா பீசுன்னு நினைச்சேன்.
  ரொம்ப சந்தோசம்யா.... உனக்கு சைந்தவி கிடைச்சதுல ரொம்ப சந்தோசம்...

  உன்னையத் தான் பாக்க முடியல... இந்த சந்தோசத்தை கொண்டாட பேசாம எதாவது ஒரு பார்-ல மொத்தமா சொல்லி வைச்சுரு... பிளாக்கர் அக்கௌன்ட் வச்சுருக்கவன்லாம் வந்து உன் பேரை சொல்லி சரக்கு வாங்கிக்கிறோம்.
  அப்புடி இல்லையினா என் வீட்டு அட்ரசுக்கு அனுப்பி வை.

 42. பக்கிக்கு எகத்தாளத்தைப் பாரு... போட்டவைப் பார்த்தே சிரிச்சுகிட்டு இருக்கு... யோவ், இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பிப் பாருயா....

 43. கடைசியா சிரிச்சுக்க-ன்னு சொல்லி யாராவது பயமுறுத்துனா பயந்துடாதே.... தைரியமா இரு மச்சி...
  ஒரு வழியா உனக்குப் பொண்ணு குடுத்துட்டானுக...
  இந்த பட்டுக்கு பொண்ணு குடுப்பாய்ங்கங்கிற?? சான்சு கம்மி தான்...

 44. ரோஸ்விக்


  கடைசியா சிரிச்சுக்க-ன்னு சொல்லி யாராவது பயமுறுத்துனா பயந்துடாதே.... தைரியமா இரு மச்சி...
  ஒரு வழியா உனக்குப் பொண்ணு குடுத்துட்டானுக...
  இந்த பட்டுக்கு பொண்ணு குடுப்பாய்ங்கங்கிற?? சான்சு கம்மி தான்...
  //

  இதுதான் உள்குத்தோ?..

  நானே , சிவனேனு..சாமியாரப்போலாமுனு இருக்கேன்..என்னைய எதுக்கு மாட்டி விடப் பார்க்கிறீங்க..

  சரி.. மீண்டும் ஒரு மொக்கை கேள்வி..

  நீங்க சிங்கையிலையா இருக்கீக?..சொல்லவேயில்லை...ஹி..ஹி

 45. @பிரபாகர் said...
  வெளியூர் மற்றும் பட்டா நண்பர்களுக்கு,
  உங்களை சந்திக்க முடியாத முடியாத வருத்ததில் பிரபாகர் எழுதிக்கொள்வது.
  உங்களை சந்திக்க விழைந்து பலமுறை பின்னூட்டமிட்டும் பதில் இல்லாததால் உங்களோடு கா...
  இந்த இடுகை சூப்பர் என்பதையும் இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டு முடித்துக்கொள்கிறேன்.
  //

  என்ன சார்.. ப்ளைட் டிக்கெட் எடுத்துகிட்டு சிங்கை வாங்க..
  பார்க்கலாம்..ஹி..ஹி..
  ( நான் ஒரிஜினல் சிங்கைய சொன்னேன்.)

  ஆனாலும்.. உங்களுக்கு தில் ஜாஸ்தி சார்..
  சனிக்கு, ராயல் சல்யூட் வெக்கப்பார்க்கிறீங்க..விதி கொடியது..
  வேற என்னாத்தை சொல்றது..

  ஆமா சார்.. இந்த ரோஸ்விக்.. ரோஸ்விக்..ஒரு பையன் இருப்பானே..
  வரும்போது அவரையும், கூட்டிகிட்டு வாங்க..ஏன்னா.. எங்களுக்கு பீர் முக்கியம்..
  குறிப்பா..அதுக்கு காசு கொடுக்கிறங்க ரொம்ப முக்கியம்..

  எங்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு சார்..
  இது மாறி சந்திப்புக்கு வரும்போது.. வீட்ல தலைகீழா, நின்னுட்டு,
  பிறகுதான் வருவோம்..

  ஏன்னா..
  ஏதாவ்து காசு..கீசு சட்டை பாக்கெட்ல மாட்டியிருந்தா, கீழ ( எங்க ஊட்ல..)
  விழுந்திடுமில்ல.. அதுக்குத்தான்..

  புத்தர்..சரிங்க பித்தர்ர்ர்ர்ர்..
  எங்க இருக்காரு?..
  எப்படியிருக்காரு?..
  முடிஞ்சா.. அவரையும் கூட்டிக்கிட்டு வாங்க..( சைட் டிஸ்க்கு..ஆள் வேணும் சார்..)

  ஆமா.. கா..கானு சொன்னீங்களே?.. அந்த பிரியாணிய நான் சாப்பிட்டதேயில்லை சார்...
  எங்க கிடைக்கும்?

 46. நண்பர்கள் வருகைக்கு நன்றி..திரு.முத்து,திரு.ஜெய்லானி,திரு.இலுமினாட்டி,திரு.ரோஸ்விக்,திரு.கரிகாலன்,திரு.பன்னிகுட்டி ராமசாமி,திரு.பிரபாகர்,திரு.பனங்காட்டான்...!
  மீண்டும் நன்றி சொல்ல வருவான் வெளியூர்க்காரன்..! (உஷ்..எப்பா...இப்பவே கண்ணா கட்டுதே..! யோவ் பட்டாபி இதெல்லாம் நமக்கு செட் ஆகாதோ...? )

 47. @@@பட்டாபட்டி..
  அன்னைக்கு சொன்னததான் இன்னைக்கு சொல்றேன்..!
  இன்னைக்கு சொல்றதைதான்..என்னைக்கும் சொல்வேன்..!
  நீதான் வெளியூருனு சொல்லாதே...!//

  யோவ் பட்டாப்பட்டி..என்னை என் பொண்டாட்டி தலைகீழா கட்டி வெச்சு பெல்டாலையே அடிச்சாலும் சொல்லமாட்டன்யா..நான்தான் வெளியூர்க்காரன்னு....வக்காளி சிக்கமாட்டோம்ல...!
  (நீ வேற இதே டயலாக பல மாசமா சொல்லி பீதிய கேளப்பர....நக்கல் புடிச்சவனா இருந்தாலும் நீ அனுவஸ்தன் வேற.....எதுக்கு சாமி ரிஸ்க்கு..நான் அடக்கியே வாசிக்கறேன்..!)

 48. @@@ரெட்டைவால் ' ஸ்
  தமிழ் கவிதையுலகம் அதிர்ச்சி...
  வெளியூரு இனிமேல் காலை மதியம் இரவு என கவிதைகளாக எழுதித்தள்ளப் போவதாக முடிவு...தபூ சங்கர் வெளிநாடு செல்லப் போவதாக முடிவு செய்துவிட்டதாக அரசாங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.///

  இதோ ஆரம்பிசிட்டண்டா...:

  என் காதலும் ஆப்பில் ஐபோடும் ஒன்னு..!
  இத ஒத்துக்காத பிகருங்க வாய்ல மண்ணு..!
  வந்தா பாரு என் பொண்டாட்டி கண்ணு...!

  கவிதை விளக்கம் :என் காதலும் ஆப்பிள் ஐ போட் மாதிரிதான்..யாரு காதுல சொருகிகிட்டாலும் பாட்டு கேக்கும்...!

  ஹா..ஹா..எனக்கும் கவிதை வந்துருச்சு...இனிமே வெளியூர்காரன்ல இந்த மாதிரி அபூர்வமான காதல் கவிதைகள் மட்டும்தான் வரும்..தக்காளி பெஸ்ட் கவிதைக்கான தேசிய விருது வாங்காம விடமாட்டேன்....
  (மொதல்ல இந்த பையன் வசந்த கால பறவை சிவாவ புடிச்சு பிகருங்கள பேசியே கவுக்கறது எப்டீன்னு கத்துக்கணும்...! ):)

 49. வாயை திறந்தேன் .. காற்று வந்தது..
  காலைத் திறந்தேன்.. காற்று போனது..

  நம்ம கவிஜை எப்படியிருக்கு மச்சி..?

  நீ அவார்ட் வாங்கும்போது.. என்னையும் கவனிச்சுக்க..ஹி..ஹி

 50. @@@பட்டாபட்டி..
  வாயை திறந்தேன் .. காற்று வந்தது..!
  காலைத் திறந்தேன்.. காற்று போனது..!
  நம்ம கவிஜை எப்படியிருக்கு மச்சி..?//

  ஹா..ஹா..பட்டாப்பட்டி தட்டு தட்டுன்னு தட்ரியேடா செல்லம்..இம்புட்டு திறமையையும் எங்குட்டு ராசா ஒளிச்சு வெச்சிருந்த...? இப்ப உனக்கு ஒரு கவிதை சொல்றேன் கேட்டுக்கோ....

  கமெண்ட்டுல சிறந்தவன் பட்டாப்பட்டி...!
  ஆனா,
  பட்டாபட்டிங்கறவன் கம்மனாட்டி...!

  எப்டியா இருக்கு...! நாம இனிமே நம்ம திறமைகள இப்டியே பேசி பேசி வளர்த்துக்கனும் பட்டாபி...அப்பத்தான் சினிமாலயெல்லாம் பாட்டெழுத வாய்ப்பு கெடைக்கும்...! :)

 51. கமெண்ட்டுல சிறந்தவன் பட்டாப்பட்டி...!
  ஆனா,
  பட்டாபட்டிங்கறவன் கம்மனாட்டி...!
  //

  அடப்பாவி.. உனக்கு ஹைக்கூ எழுதவும் வருதேயா?..

  பித்தர் சென்னை போறதா கேள்விப்பட்டேன்..
  நாம முந்திக்கிடனும்.. உடனே புக் பண்ணுயா டிக்கெட்டை...

  கலக்கறோம்..”ஹோல் தமிழ்நாட்டை”.. தக்காளி.. இனி எவனும் வாயில சாப்பிடக்கூடாது...

 52. மோதாதிங்க யாரும் இந்த பட்டாபட்டி...
  ஓடிடுவீங்க அப்புறம் திட்டா திட்டி...

  பஞ்ச் டயலாக் எப்பூடி!

  பிரபாகர்.

 53. Ananth says:

  வாழ்த்துக்க‌ள். திரும‌ண‌ வாழ்க்கை சிற‌ப்பாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள். உங்க‌ள் பதிவுக‌ள் சில‌ நாட்க‌ளுக்கு முன் தான் ந‌ண்ப‌ரால் அறிமுக‌ம். ப‌டித்து ப‌டித்து சிரித்தேன்(சுறா ம‌ற்றும் மாம‌னாரை மெர்ச‌லாக்கும்). அதுவும் நீண்ட‌ வேலைப் ப‌ளுவின் இடையே சிரித்த‌ போது ச‌க‌ ஊழியை முறைத்தாள்(சீன‌ர்). பின்னே வங்கியின் ச்ர்வ‌ர் ஒன்று ப‌ளுத‌டைந்து அதை ச‌ரி செய்யும் டென்ஷ‌னுக்கிடையே சிரித்தால். நானும் சிங்க‌ப்பூரில் தான்.

  மாம‌னாரை மெர்ச‌லாக்கும் ப‌திவை ம‌னைவிக்கும் சைந்த‌வி ப‌திவை மாம‌னாருக்கும் கொடுங்க‌. வாழ்க்கை நிஜ‌மாக‌வே சிற‌ப்பாக‌ இருக்கும். உங்க‌ளின் சுறா க‌மெண்ட்டை விக‌ட‌னில்

  மீண்டும் வாழ்த்துக்க‌ள். ஆன‌ந்த் ‍‍ சிங்க‌ப்பூர்

 54. வெளியூரு.. என்னய்யா... ஏகப்பட்ட சிங்கப்பூர் இருக்கும் போல..
  நான், மலேசியாவுக்கு கீழ ஒண்ணு இருக்கே.. அதுல இருக்கேன்...

  பிரபாகர் டெல்லிக்குப் பக்கத்தில இருக்கிற சிங்கப்பூர்ல இருக்கார் போல..

  ஆமா நீ எந்த சிங்கப்பூர்ல இருக்கே,,?...

 55. Ananth says:

  ப‌ட்டாப‌ட்டி, சூரிய‌ன் , சிங்க‌ப்பூர் எல்லாம் ஒண்ணு தான். அது யாரு டெல்லிக்குப் ப‌க்க‌த்தில‌ சிங்க‌ப்பூர்ல‌? ஊர்ல‌ ஒரு தொகை ப‌ய‌லுங்க‌ இப்ப‌டித் தான் சொல்லிக்கிட்டு திரியிருவானுவ‌. டெல்லிக்குப் ப‌க்க‌த்தில‌ 4வ‌து வார்டு, 3வ‌து தெருவில‌ன்னு.

 56. Ananth


  ப‌ட்டாப‌ட்டி, சூரிய‌ன் , சிங்க‌ப்பூர் எல்லாம் ஒண்ணு தான். அது யாரு டெல்லிக்குப் ப‌க்க‌த்தில‌ சிங்க‌ப்பூர்ல‌? ஊர்ல‌ ஒரு தொகை ப‌ய‌லுங்க‌ இப்ப‌டித் தான் சொல்லிக்கிட்டு திரியிருவானுவ‌. டெல்லிக்குப் ப‌க்க‌த்தில‌ 4வ‌து வார்டு, 3வ‌து தெருவில‌ன்னு.
  //

  அய்.. அப்ப நீங்க இருப்பது நம்ம சிங்கப்பூர்ல..அப்ப நடத்துங்கண்ணே..

 57. @வெளியூரு..

  நாளைக்கு சரியா 12 மணிக்கு பெருமாள் கோயிலுக்கு வந்துடு.. நான் உனக்கு உண்டகட்டி வாங்கித்தாரேன்..

  ஏய்யா.. நல்ல விசயம் சொல்லியிருக்கே..அதுக்கப்புறமும் நான் ட்ரீட் வைக்கலேனே..பதிவுலகம் கோவிச்சுக்காது?...

  மறந்துட்டாதே.. சரியா உச்சி வெயில்.. 12 மணி...

 58. @வெளியூரு

  நல்லது பண்ணனுமுனா.. நாலு விசயம் தெரிஞ்சுக்குறதுல தப்பேயில்லை

  அதனால.. நான் சொல்வதை ..மண்டையில ஒரு ஓரமா வெச்சுக்க..
  ரொம்ப ஈசி-லா இது..
  .
  .
  .
  1) சனி
  2) உச்சி வெயில்
  3) உண்டகட்டி
  4) ட்ரீட்


  அவ்வளவுதான்..

 59. வெளியூரு..
  உனக்காக, வசந்த காலப் பறவையின் பாராட்டு பதிவு இது..போய் பாரு....  http://siva-manjunathan.blogspot.com/2010/05/blog-post.html

 60. Muthu says:

  Veliyoorkaran said...

  நண்பர்கள் வருகைக்கு நன்றி..திரு.முத்து,திரு.ஜெய்லானி,திரு.இலுமினாட்டி,திரு.ரோஸ்விக்,திரு.கரிகாலன்,திரு.பன்னிகுட்டி ராமசாமி,திரு.பிரபாகர்,திரு.பனங்காட்டான்...!
  மீண்டும் நன்றி சொல்ல வருவான் வெளியூர்க்காரன்..! (உஷ்..எப்பா...இப்பவே கண்ணா கட்டுதே..! யோவ் பட்டாபி இதெல்லாம் நமக்கு செட் ஆகாதோ...? )////////////////


  தக்காளி இது மாதிரி எழுதுவதற்கு தான் ஆயிரம் பேர் இருக்காங்களே,நீயும் ஏன் எங்களை கொல்ற

 61. Muthu says:

  http://siva-manjunathan.blogspot.com/2010/05/blog-post.html//////


  இது மாதிரி நல்ல விஷயம் கூட பண்ணுவியா

 62. அப்ப , த்ரிஷாவோட வாழ்க்கை ?!?!
  வாழ்த்துக்கள் தல !

 63. Anonymous says:

  பேசுடி பேசு. இன்னும் கொஞ்ச நாள் தானே. அப்பறம் பேச்சு மூச்சு இல்லாம அனானியா ஊர்ல இருக்கற ப்ளோக்ல கமெண்ட் போட்டு சோகத்த போக்கிக போற (என்னயமாதிரி). இப்பவே பேசிக்கோ.
  சரி வந்தது வந்தேன், இந்த புடிச்சுக்கோ வாழ்த்த...

 64. //யோவ் பட்டாப்பட்டி..என்னை என் பொண்டாட்டி தலைகீழா கட்டி வெச்சு பெல்டாலையே அடிச்சாலும் சொல்லமாட்டன்யா..நான்தான் வெளியூர்க்காரன்னு....வக்காளி சிக்கமாட்டோம்ல...! //

  அது தான் நடக்காது! :-)) என்னைக்காவது டன்க் ஸ்லிப் ஆகிடும்.. ;-)

  திருமணம் ஆன பிறகு உங்களை நினைத்து பார்த்தேன்.. கெக்கே பிக்கேன்னு சிரிப்பா வருது :-)))

  Anyway வெளியூர்காரன் ரொம்ப சந்தோசம்.. நீங்க நினைத்த கற்பனை செய்த அளவு உங்க மனைவி இருக்க வாழ்த்துக்கள் இல்லைனாலும் குறைந்தபட்சம் அதில் பாதியாவது இருக்க என் அன்பான வாழ்த்துக்கள் :-)

 65. kanavugal says:

  வாழ்த்துக்கள் நண்பரே... ( அப்ப விஜய் படத்தை இனிமே ரெண்டு பேரா பாப்பீங்க )

 66. Veliyooru yemppaa risk yedukkira..? vaalkaiyai anupavikkaama karppanaiyil mattumthaan yellaam kidaikkum. yenna ithukku anupavam pesuthunu pinnoottam poduva, paravaayillai anupavamthaan pesanum. karppanaikal nija vaalkaikku oththuvaraathu thambi.

 67. ஆஹா!!! நயன் தாராவும் தற்கொலை முயற்சியாமே

 68. வாழ்த்துக்கள் வெளியூறு

 69. வாழ்த்துக்கள்....

 70. Rupesh says:

  veliyoorkaran nanbare Vazthukkal.

 71. SHANTHINI says:

  all the best veliyoor........
  antha ponnu thaan paavan!!!!!

 72. //எனக்கு இன்னும் பொண்ணே பார்க்கல...ஆனா,பாருங்க அதுக்குள்ளயே எனக்கு என் மாமனார புடிக்கல...ஏன்னு கேளுங்க...எல்லாத்துக்கும் ராவா ஒரு காரணம் வெச்சுருபான் இந்த வெளியூர்க்காரன்..//

 73. //பொண்டாட்டி புள்ளைகளோட ஷாப்பிங் வர்ற ஆம்பள பசங்கள பார்த்துருக்கேன்...அவங்க கூடவே ரெண்டு பழைய பீசுங்க பப்பரக்கானு வேடிக்க பார்த்துகிட்டு பேக்கு மாதிரி வரும்..விசாரிச்சு பார்தீங்கன்னா அது அந்த புள்ளயோட அம்மா அப்பாவா இருக்கும்//

 74. //அவர் பெத்த பொண்ணோட நாம வாழ போறோம்..அவ்ளோதானா...இதுக்கு என் நம்ம இந்த ஆளுக்கு காலம் புல்லா மரியாத கொடுத்துகிட்டு,பார்க்கும்போதெல்லாம் பம்மிகிட்டு...ச்சே...//

 75. //நம்பல்ல நெறைய பேர் வெளில சொல்லிக்க முடியாம இருக்காங்கே...இனிமே யாரும் வருத்தபடாதீங்க...வெளியூர்க்காரன் வந்துட்டான்...மாமனாரை சட்னியாகி மெண்டலாய் மாற்றுவோர் சங்கம்னு ஆரம்பிக்கறோம்...உலக அளவுல மாமனரால பாதிக்கப்பட்ட தமிழர்கள ஒன்னு திரட்றோம்..அவங்கே இல்லாத ஒரு புது உலகத்த படைக்கறோம்...//

 76. //நான் பரவால்லைங்க...என் பொண்டாட்டி ரெண்டு நாள் சோறு போடாம செருப்பால அடிச்சான்னா கண்ணா பின்னானு கோவம் வந்து என் மாமனாருக்கு கால் அமுக்க ஆரம்பிச்சுடுவேன்//
  சார் இந்த ஒரு காரணத்துக்கு கண்டிப்பா பொண்ணு கொடுங்க வெளியூர்க்காரன் ரொம்ப நல்ல.......வன்

 77. //ஒவ்வொரு நைட்டும் நீ ரொம்ப அழகா இருக்க புஜ்ஜுன்னு உன்கிட்ட நாந்தான் வழிய போறேன்...
  உங்கோப்பன வேற மானம் கெட்டு போய் ,மாமான்னு கூப்ட போறேன்...
  (கருமாந்தரம்..)
  ஆமாம்டி..உங்கப்பன் அந்த பனங்கா மண்டையன் இப்போ என்னதான் தேடிகிட்ட்ருக்கான்...(வீட்ல இருக்கானா இப்போ...)//

  சார் நீங்க ரொம்ப பாவம்... ஆனா உங்க பொண்ணு ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க

 78. மேற்கண்ட "பொன்னான " வாக்கியங்களை கல்வெட்டில் செதிக்கி திருமண பரிசாக (வேண்டாம்) நிச்சயதார்த்த பரிசாக வெளியூர்க்காரனுக்கு வழங்குமாறு பட்டா, ரெட்டை, மங்குனி, ஜெய்லானி நண்பர்களை பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்

 79. @@@@ கருவாச்சி said...
  சார் நீங்க ரொம்ப பாவம்... ஆனா உங்க பொண்ணு ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க.///
  Ha..Ha...Cute and Impressive comments..!

  Thanks Karuvacchi..I liked it..! :)

 80. @கருவாச்சி
  மேற்கண்ட "பொன்னான " வாக்கியங்களை கல்வெட்டில் செதிக்கி திருமண பரிசாக (வேண்டாம்) நிச்சயதார்த்த பரிசாக வெளியூர்க்காரனுக்கு வழங்குமாறு பட்டா, ரெட்டை, மங்குனி, ஜெய்லானி நண்பர்களை பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்
  //


  அன்னைக்கே சொன்னேன் இந்த வெளியூர்காரங்கிட்ட்..

  கேட்டானா?..இப்ப பாரு.. அவன் எழுதியதே, ஆப்பா திரும்பி வருது...

  கருவாச்சி சார்.. கல்வெட்டு வேண்டாம்.. போஸ்டர் அடிச்ச்சிடலாம்..என்ன சொல்றீங்க..

  ( வெளியூரு.. நீதான் வெளியூருனு , அம்மணிகிட்ட , தூக்கத்தில கூட உளறிடாதே..)

 81. //கருவாச்சி சார்.. கல்வெட்டு வேண்டாம்.. போஸ்டர் அடிச்ச்சிடலாம்..என்ன சொல்றீங்க..//
  போஸ்டர் அடிச்ச்சிடலாம் தல

 82. அசின், 3ஷா, தமன்னா, இலியானா போன்ற முன்னணி நடிகைகளை தற்கொலைக்கு துண்டியதாக வெளியூர்க்காரன் மீது சென்னை கமிசனரிடம்
  புகார். நள்ளிரவில் வெளியூர்க்காரன் திடீர் கைது ஜாமீனில் எடுக்க தனி விமானத்தில் பட்டா விரைகிறார்.

 83. உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல... :)

 84. Minmini says:

  MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
  அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
  Feel பண்ணக்கூடாது..

 85. Minmini


  MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
  அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
  Feel பண்ணக்கூடாது..
  //

  வெளியூரு .. என்னானு பாரு.. உன்னோட போட்டோவ போட US$100
  போதுமாம்.. சரின்னா சொல்லு.. போட்டுடலாம்..

  ( மறக்காம..அவிங்க, இங்க கமென்ஸ் போட்டதுக்கு, US$200 க்கு பில் அனுப்பிடு )

 86. புகார். நள்ளிரவில் வெளியூர்க்காரன் திடீர் கைது ஜாமீனில் எடுக்க தனி விமானத்தில் பட்டா விரைகிறார்.
  //

  அநாவிசய செலவுகளை, கட்டுப்படுத்த சொல்லி, சிங் சொன்னதால். பட்டாபட்டி, நடந்தே சென்னை செல்ல திட்டம்..

 87. வாழ்த்துக்கள் தலைவா!!! இனிமேல் உங்க கண்ணுல ஆனந்த கண்ணீர் மட்டும்தான் பாக்கணும்:D :D :D

 88. மாப்ள, அப்ப நீயும் எங்கள விட்டுட்டு அங்கிள் ஆக போறியா..? இனி எங்க (பேச்சிலர்) ஏரியா உன்ன ரொம்ப மிஸ் பண்ணும்யா...!

  வாழ்த்துக்கள் மச்சி..! இனிமேலாவது கண்டகண்ட தருதல பசங்க சகவாசத்த விட்டுட்டு உன் மாமனாருக்கு ஒழுங்கா சோப்பு போடு. அப்பத்தான் தங்கம், வைரம், வீடு, கார், மச்சினி'னு நெறைய கிடைக்கும் :)

  அப்டியே போகும்போது நம்ம ரெட்டைகிட்ட அந்தப்புர காண்ட்ராக்ட எனக்கு தரசொல்லி ரெக்கமன்ட் பண்ணிட்டு போய்டப்பு, உனக்கு அங்க ஒரு சிலை வெச்சிடுறேன்...! டீலா நோ டீலா..?

 89. இனிமேலாவது கண்டகண்ட தருதல பசங்க சகவாசத்த விட்டுட்டு உன்
  //


  ஹி..ஹி.. இது நானு..ஹி..ஹி

 90. பட்டு,அப்ப ரெட்ட?நானு? :)

 91. VARO says:

  அன்பான பதிவருக்கு,

  வலைப்பதிவுலகில் மறக்கமுடியாத உங்கள் சம்பவமொன்றை குறிப்பிடுங்கள்
  ( பதில் ஒரு வரியாகவும் இருக்கலாம் )

  நன்றி
  வரோ.

 92. @@ VARO said...
  அன்பான பதிவருக்கு,
  வலைப்பதிவுலகில் மறக்கமுடியாத உங்கள் சம்பவமொன்றை குறிப்பிடுங்கள்
  ( பதில் ஒரு வரியாகவும் இருக்கலாம் )/
  1)என் சைந்தவியை எனக்கு நானே அறிமுகம் செய்தது...!
  2)காதலர் தினத்திற்கு வந்த வாழ்த்து மின் அஞ்சல் ..!

  இவை இரண்டும்...!

  நன்றி வரோ...!

 93. VARO says:

  கருத்துக்கு நன்றி
  உங்கள் கருத்தும் இணைக்கபட்டிருக்கின்றது

  "பதிவர்கள் பதிவுலகை வெறுக்கிறார்களா?"

  http://shayan2613.blogspot.com/2010/05/blog-post_23.html

 94. வாழ்த்துக்கள் வெளியூர்....ஆமா திருவாருர்ல எங்க?

 95. வெளியூர்காரன் ப்ளாக் விற்பனைக்கு..
  அணுகவும் பட்டாபட்டி...

  ( மகனே..இன்னும் 24 மணி நேரத்தில அடுத்த பதிவு வரலே...சொன்னதை செய்வேன்...நானும் விஜய் ரசிகன்தான்..சொன்னதை செய்வோம்..செய்வதை சொல்வோம்..மூச்சு வாங்குது..அப்பால வரேன்)

 96. இன்று வியாழக்கிழமை.. முருகனுக்கு உகந்த நாள்...

  இந்த கமென்ஸ்சை, 10 பேருக்கு கொடுத்தால், பணம் கூரையை பிய்த்துகொண்டு கொட்டும்..

  ஹி..ஹி

 97. VARO says:

  உங்கள் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள்.

 98. narumugai says:

  வாழ்த்துக்கள்..

 99. Dai Veliyooru,

  May poi June vanthuruchu..
  Adutha Blog seekiram podu

 100. எனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்,
  என் அன்பும் வாழ்த்தும்...!
  வெளியூர்க்காரன்..!

 101. @@@velmurugan s said...
  Dai Veliyooru,
  May poi June vanthuruchu..
  Adutha Blog seekiram podu..///

  மே போய் ஜூன் வந்தா புது பதிவ போடணுமா...என்னய்யா இது சுத்த அயோக்யதனமா இருக்கு...எந்த ஊரு நியாயம் இது....! (அண்ணன் லவ்ல பிசி மச்சி...) :)

 102. //
  மே போய் ஜூன் வந்தா புது பதிவ போடணுமா...என்னய்யா இது சுத்த அயோக்யதனமா இருக்கு...எந்த ஊரு நியாயம் இது....! (அண்ணன் லவ்ல பிசி மச்சி...) :)
  //

  தனிமனித தாக்குதலை கண்டிக்கிறான் இந்த பட்டாபட்டி...

 103. என்னய்யா இது சுத்த அயோக்யதனமா இருக்கு..//

  ஒழுக்கமா பதிவபோடு..இல்ல ”எல்லோரும் என்னை மன்னிசுக்கோங்க”-னு ஒரு போர்ட் வை..
  லொள்லைப் பாரு...

 104. வெளியூர்காரன் சார்..ஒரு பதிவைப் போடுங்க சார்...இல்லாட்டி இந்த பட்டாபட்டிப் பய உயிரை வாங்கிட்டே இருப்பான்...
  சார் நீங்க மவுண்ட் ரோடு ஜூஸ் கடைல அடி வாங்கினீங்களே..அதைப் பத்தியாவது எழுதுங்க சார்!

 105. அன்பின் வெளியூர்க்காரன் - அதான் நம்பர் வந்துருக்கும்ல - எவ்ளோ நாளாச்சு - எங்கே அப்டேட்ஸ் - எப்போ கல்யாணம் - அழைப்பௌ அடிச்சாச்சா - ம்ம்ம்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

 106. வெளியூர்க்காரன் செத்துபோச்சு..

 107. Blogger ரெட்டைவால்'ஸ் said...

  வெளியூர்காரன் சார்..ஒரு பதிவைப் போடுங்க சார்...இல்லாட்டி இந்த பட்டாபட்டிப் பய உயிரை வாங்கிட்டே இருப்பான்...
  சார் நீங்க மவுண்ட் ரோடு ஜூஸ் கடைல அடி வாங்கினீங்களே..அதைப் பத்தியாவது எழுதுங்க சார்!
  //

  தக்காளி..கேட்டதுக்கு வழுக்கி விழுந்துட்டேனு சொன்னான்..

  இதுக்கு பின்னாடி ..ஒரு பெரும் போராட்டமேயிருக்கா...?

 108. ரைட்..
  எப்படியாவது , உங்க குழந்தைகளை, ஸ்கூல்ல சேர்த்திட்டாவது, புதுபதிவ போடப்பாருங்க சார்...

  இப்படிக்கு..
  வெறுத்துப்போய் கனென்ஸ் போடும் பட்டாபட்டி...

 109. Jey says:

  சைந்தவியை கூட்டிகிட்டு எங்கப்பா எஸ் ஆனீக, சரி சரி வேலய சீக்கிரமா முடிச்சிட்டு வந்து ஒரு பதிவ போடுங்க, இல்லனா மார்க்கெட் போன பதிவராய்டிவீக சொல்லிட்டேன்.

 110. reena says:

  Unccleee.... Congrats

 111. ஆமா பாஸ்.. இன்னிக்கு வியாழக்கிழமை..
  விடிஞ்சா வெள்ளிக்கிழமை..

  வரட்டா...

 112. Jey says:

  //ஆமா பாஸ்.. இன்னிக்கு வியாழக்கிழமை..
  விடிஞ்சா வெள்ளிக்கிழமை..

  வரட்டா...//

  பட்டா எங்க போரேன்னு தெருயுது, எனக்கும் சேர்த்து அடிச்சிரு.