கொஞ்ச நேரம் சும்மா இருடா டேய்..ஐயோ எழுத விடுறா எருமைமாடு...இவன் எப்பவுமே இப்டிதாங்க...சரியான அறுந்த வாலு.. சும்மாவே இருக்க மாட்டான் பன்டி ...! சரி நான் விசயத்துக்கு வர்றேன்..என் பேரு சைந்தவி..சிபியோட வொயிப் ..இல்லை இல்லை...சிபியோட செல்ல காதலி..ஆமாம்..நாங்க ரெண்டு பெரும் இப்பவும் லவ் பண்ணிகிட்ருக்கோம்..எனக்கு இந்த உலகத்துல ரொம்ப புடிச்ச விஷயம் நாலுங்க...மொதோ ரெண்டு விஷயம் என் சிபிய உயிருக்குயிரா காதலிக்கறது, மூணாவது விஷயம் இவன பத்தியே நெனைச்சிகிட்ருக்கறது ...நாலாவது இவன பத்தி எதாச்சும் என் டைரில எழுதி வெக்கறது... லைப்ல இருக்கற ரொம்ப அழகான விசயங்கள்ல ஒன்னு மனசுக்கு புடிச்சவங்கள பத்தி டைரில எழுதி வெச்சு, கொஞ்ச நாள் கழிச்சு தனியா உக்காந்து ரசிச்சு படிக்கறது.! நல்ல அடைமழை நேரத்துல நைட்ல வீட்டு ஜன்னல் ஓரமா நின்னு மழைய வேடிக்க பார்த்துகிட்ருக்கற லவ்வர பின்னாடிலேர்ந்து கட்டிபுடிச்சு சூடா ஐ லவ் யு சொல்றமாடி ஒரு ஜில் பீலிங் அது.. !
என் டைரிய இதுவரைக்கும் என் சிபியே படிச்சது கெடயாது..நீங்க படிக்க போறீங்க...நான் அவன்கிட்ட படிக்க சொல்லி குடுக்கவும் மாட்டேன்...குடுத்தா அதையும் கன்னாபின்னான்னு கிண்டல் பண்ணி சிரிப்பான் பொருக்கி..என் டைரில நான் என்னென்னமோ கிறுக்கி வெச்சிருப்பேன்..ஆனா, எல்லா கிறுக்கல்லையும் என் சிபி இருப்பான்..என் செல்ல புருஷன்.. இவன ஸ்வீட் ராஸ்கல்னு சொன்னா பத்தாதுங்க..இவன் அதுக்கும் மேல..அதுக்காக இவன சினிமால வர்ற ரொமண்டிக் ஹீரோ மாதிரின்னு நெனைச்சிடாதீங்க..நான் ஐ லவ் யூ சொன்னா திரும்ப ஐ லவ் யூ சொல்லனும்னு கூட தெரியாம ஓகே ஓகே தேங்க்ஸ்ன்னு சொல்ற மடையன் இவன்..யாரையாச்சும் கிண்டல் பண்ணனும்னா மட்டும் இவனுக்கு வாய் வங்காளம் முட்டும் விரியும்...ஆனா ஒழுங்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு ஐ லவ் யூ சொல்ல வராது...ஏண்டா ஒரு தடவ கூட ஐ லவ் யூ சொல்ல மாட்டேங்கறேன்னு கேட்டா வெக்கமா இருக்குடின்னு சொல்லி வழிவான்..!
ஆனா நல்லவன்...சரியான வாலு..இப்போ ரூம்ல உள்ள தூங்கிகிட்ருக்கான் ..திடீர்னு ஒருநாள் என் வாழ்க்கைக்குள்ள வந்து அதே வேகத்துல என் வாழ்க்கையாகி போனவன். எனக்கு கலைஞர் அடுத்த எலெக்சன்ல ஜெயிக்கிறாரா, எந்திரன் படம் ஓடுமா,சச்சின் எப்போ அடுத்த செஞ்சுரி அடிப்பாரு இது எத பத்தியும் கவலை இல்ல..எனக்கு என் சிபி ஆபிஸ் முடிஞ்சு சீக்கிரம் வீட்டுக்கு வந்துரனும், என் கூடவே இருக்கணும், அது போதும்..அவனோட விளையாண்டுகிட்டே அவன் அடிக்கற ஜோக்குக்கு சிரிச்சுகிட்டே அடுத்த நாள் அவன ஆபிஸ்க்கு அனுப்பனும்.அனுப்பிட்டு எப்படா அஞ்சு மணி வரும் என் சிபி வருவான்னு வெயிட் பண்ணனும்..இதுதான் என் சந்தோசம், என் ஆசை, என் வாழ்க்கை, எல்லாமே... !
இவன பேச விட்டா பேசிகிட்டே இருப்பான்..ஒரு நாளைக்கு முப்பது ஜோக் சொல்லுவான்..எங்கதான் இவனுக்கு இவ்ளோ ஜோக் கெடைக்குதோ தெரியாது..என்கிட்டே உனக்கு என்னடா புடிச்சிருக்குன்னு கேட்டா நீ கோவத்துல சொல்ற மயிறுதாண்டின்னு சொல்லி சிரிப்பான்.ஒரே ஒரு சிகரெட் அடிக்கறதுக்கு என்கிட்டே பெர்மிசன் வாங்க கூச்சமே இல்லாம என் காலுல விழுந்து கெஞ்சி சிரிக்க வெச்சிருவான்......நைட் மூணு மணிக்கு எந்திருச்சு உக்காந்து என் முகத்தையே பார்த்து ரசிச்சிட்ருப்பான் ..அது தூங்கற உனக்கு எப்டி தெரியும்னு கேக்காதீங்க..எனக்கு தெரியும்..என் சிபி எப்போ என்ன பண்ணாலும் எனக்கு தெரியும்..!
அயோயோ சொல்ல மறந்துட்டனே என் குடும்பத்துல இவன் வாய்ல விழாத ஆளே கெடயாதுங்க...எல்லாரையும் நாராசமா கலாய்ப்பான்..அதுவும் எங்கப்பான்னா இவனுக்கு அவ்ளோ புடிக்கும்..ரசிச்சு ஒட்டுவான்...எங்கப்பா போட்டோவ பார்த்தாலே இவனுக்கு சிரிப்பு வந்துரும்..டேய் பாவம்டா வயசானவர் விட்ருடான்னு சொன்னாலும் கேக்கமாட்டான்..உங்கப்பன கிட்டத்துல பார்த்தா பூர்ணம் விஸ்வநாதனுக்கே உங்கப்பன கலாய்க்கனும்னு தோணும்டின்னு சொல்லி ஓட்ட ஆரம்பிச்சிருவான்.ஐயோ எவ்ளோ கெஞ்சினாலும் விடமாட்டான்...பாவி...!
ஒரு நிமிஷம் இருங்க..எரும இப்போ என்ன எழுதவிடாம அரைதூக்கத்துல ஏதேதோ பேச ஆரம்பிச்சிருச்சு..ஏய் சொல்ல மறந்துட்டனே..இவன் பேச ஆரம்பிச்சிட்டா என்ன சொன்னாலும் இவன் வாய மூட முடியாது.ஆனா ஒரு விரல வாய்ல வெச்சு பச்சபுள்ளைங்கள மெரட்ற மாதிரி ஒரு வார்த்தை சொன்னா மட்டும் அப்டியே முயல்குட்டி மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு அப்டியே தூங்கிருவான்.இருங்க சொல்லிட்டு வந்துடறேன்...!
ஏய் சிபி...
உஷ் பேசாத...! தூங்கு.!
தொடரும்....!
------------------------------------------------------------------------------------------------------------------------
சைந்தவி - சிபி காதல் ஜோடியின் அறிமுகம் இல்லாத நண்பர்கள் ரெண்டு விஷயம் பண்ணுங்க..பர்ஸ்ட் கீழ இருக்கற இந்த இந்த மூணு லிங்கயும் படிங்க..ரெண்டாவது உடனே உங்க மனசுக்கு புடிச்சவங்களுக்கு போன் பண்ணி சும்மா உன் குரலை கேக்கணும் போல இருந்துச்சு அதான் போன் பண்ணேன்னு சொல்லி அவங்க எதிர்பார்க்காதப்போ சர்ப்ரைசா ஒரு ஐ லவ் யூ சொல்லுங்க...அது நைட் மூணு மணியா இருந்தாலும் சரி.. ஏன்னா காதலுக்கு வாட்ச் கட்ட தெரியாது சார்...நம்ம இஷ்டத்துக்கு எப்போ வேணா காதலிக்கலாம்...!
------------------------------------------------------------------------------------------------------------------------
இப்டி ஒரு பொண்ணு நமக்கு கெடைக்காதான்னு எல்லா பசங்களையும் ஏங்க வெக்கற ட்ரீம் கேர்ல் நம்ம சைந்தவி...ச்சே செம பையன்ப்பா சிபி.. சைந்தவி செம லக்கினு அத்தன பிகருங்களையும் பொறாமைப்பட வெக்கற சாக்லேட் பையன் சிபி..கியூட் ரொமாண்டிக் கப்புள்ஸ்..இவங்க ரெண்டு பேரும்தான் சார் நம்ம கதைக்கு ஹீரோ ஹீரோயின்...இந்த கதைய தொடரா நானும் ரெட்டைவால்சும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி எழுதுனோம்..எல்லாரும் சேர்ந்து எங்க ரெண்டு பேரையும் வாரி அணைச்சு கண்ணுல ஒத்திகிட்டீங்க..எங்க எழுதுக்கள நீங்க இன்னும் ரசிக்கறீங்கங்கறதுக்கு ஒரு உதாரணம் ஒரு வருசத்துக்கு முன்னாடி எழுதுன பதிவுகளுக்கு முந்தாநேத்து வரைக்கும் வந்துகிட்ருக்க ரசனையான கமெண்ட்ஸ்..அதான் ஒரு சின்ன ஆசை...செகேன்ட் ரவுன்ட் ட்ரை பண்ணலாமேன்னு...அதுக்கு முன்னாடி இதையும் படிச்சு பாருங்க.. படிச்சிட்டு சொல்லுங்க...!
ஒரு சின்ன இன்ட்ரோ.,

வெளியூர்க்காரன்