தியேட்டர்ல சீட் நுனில உக்காந்து உங்க பிகர் நெறைய சீன்ல, பாப்கார்ன கீழ கொட்டிகிட்டே உங்க கைய இருக்கமா கட்டிபுடிச்சுகிட்டு படம் பார்க்கற பரமசுகத்த எப்டியாவது அனுபவிக்கனும்னு ஆசைபடற அன்பர்கள் தாராளமா இந்த படத்துக்கு அந்த டிக்கட்ட தூக்கிகினு போலாம்... ஆனா, என்ன ஒன்னு..நீங்க எந்த சைட் உக்கான்துருக்கீங்கரத கிளியரா சொல்லிருங்க.. பாவம் என் பக்கத்துல உக்காந்துருந்த பொண்ணு படம் பார்க்கற டென்சன்ல அவ பாய் பிரெண்டுன்னு நெனைச்சு ,சரி அத விடுங்க நம்ம படத்துக்கு போவோம்... !
நடு தண்டவாளத்துல நின்னு நம்ம விஜயகாந்த் குறுகுறுன்னு முறைச்சு பார்த்து செய்ற வேலைய நம்ம டென்சல் வாஷிங்க்டன் ரொம்ப கஷ்டப்பட்டு உடம்ப வருத்தி செஞ்சிருக்காரு...எது என்னா வேலையா...அதாங்க மணிக்கு எழுவது கிலோமீட்டர் வேகத்துல போற டிரைவர் இல்லாத ட்ரைன நிப்பாட்றது..தலைவர் பட்டாசு பண்ணிருக்காரு..டென்சல் ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்...அதும் கேப்ல கலாய்க்கற சீன்லாம் ங்கொய்யான்னு இருக்கு..!
ரொம்ப நல்ல த்ரில்லர் படம்..டென்சல்க்காக கண்டிப்பா ஒருதடவ பார்க்கலாம்..இந்த படம் எப்புடி இருக்குன்னு இலுமினாட்டி இன்னும் நாலு வருஷம் கழிச்சு பரபரப்பா ஒரு விமர்சனம் போடுவான்..படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கங்க...
மொத்தத்துல இந்த படம் ஒரு ரியல் எண்ட்டர்டெய்னர்.. !
மிஸ் பண்ணிடாதீங்க...!
வெளியூர்க்காரன்







