-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாமானாரை தெய்வமாய் மதிப்போர் சங்கம்..வெளியூர்க்காரன் ட்ரெய்லர்
வாழ்க்கைல ரொம்ப அழகான விஷயங்கள் நெறைய இருக்கு பாஸ்..அதுல ஒன்னு மாமனார தெய்வமா நெனைச்சு வணங்கறது..அவனுகள மாமனாருன்னு சொல்றதே தப்பு சார்...அந்த வெண்ணைகள எல்லாம் மாமனார்சார்னுதான் சொல்லணும்...தக்காளி அவ்ளோ மரியாதை குடுக்கணும் அந்த வாழும் தெய்வங்களுக்கு..! நான்லாம் என் மாமனார “மாமனார் சார் ஜி” ன்னுதான் சொல்லுவேன்..பின்ன சும்மாவா...எனக்கும் பொண்ணு குடுத்த மாங்கா சாமி சார் அந்த பீசு...!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள் - வெளியூர்க்காரன் டைரி.. ட்ரெய்லர்
இது சைந்தவி சைந்தவின்னு ஒரு ட்ரீம் கேர்ள உருகி உருகி லவ் பன்னவனோட ஒரிஜினல் சைந்தவிய பத்தின கதை..ஒரிஜினல் வெர்ஷன்..போன மாசம் எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சதுலேர்ந்து இந்த பக்கங்கள் ஸ்டார்ட் ஆகுது...இனி வெளியூர்க்காரனோட டைரிய நீங்க சுடசுட ஜாலியா படிக்க போறீங்க..(உங்களுக்குத்தான் அடுத்தவன் டைரிய படிக்கறதுன்னா ரொம்ப புடிக்குமே..).அதனால சைந்தவிய பத்தின என் டைரி குறிப்புகள் இனி வெளியூர்க்காரன்ல நெறைய வரும்.. தொடர்கதை மாதிரி...இந்த தொடர் வரபோறத யாராலையும் தடுக்க முடியாது...(ஏன்னா இது என்னோட ப்லாக்டி வெண்ணைகளா...நான் என்ன வேணா எழுதுவேன்..மூடிகிட்டு படிங்க....) அதில் ஒரு பக்கத்தில் இடையில் வரும் ஒரு சில வரிகள்...இதோ...!
சைந்தவி கதைய போன்ல படிச்சு காமிச்சா போன்ல தேம்பி தேம்பி அழறா...அழாதடின்னு சொல்லகூட தோணல...எனக்கு எதிர்ல ரோட்ல ஒரு பொண்ணு ரொம்ப அழகா போராடின்னு சொன்னா அவ அங்க எச்சில முழுங்கறது எனக்கு இங்க பத்தாயிரம் வாட்ஸ்ல டிடிஎஸ் எபக்ட்ல கேக்குது...என்னோட ஸ்கூல் லவ்வ பத்தி சொன்னா அமைதியா கேக்கறா...அந்த பொண்ணு சிரிக்கறப்போ அவ கன்னத்துல விழற குழி அவ்ளோ அழகா இருக்கும்டின்னு சொன்னா ப்ளீஸ் என்கிட்டே இதெல்லாம் சொல்லாதீங்கனு கெஞ்சறா...!
என்ன சார் இது...என் வாழ்க்கை திடீர்னு இவ்ளோ அழகாவுது...நான் ரோட்ல எதிர்ல வந்தா ஊர விட்டு ஓடிபோற பட்டாம்பூச்சி எல்லாம் டெய்லி என் காதுல வந்து குட் மார்னிங் சொல்லிட்டு கண்ணடிச்சு சிரிக்குது... எப்போதுமே என்ன கிராஸ் பண்றப்ப உம்முன்னு போற குழந்தைங்க எல்லாம் இப்ப என்ன பார்த்து பாசமா சிரிக்கறாங்க...அதுவும் ஏன்னு தெரியல...பக்கத்து வீட்ல கூண்டுக்குள்ள இருக்கற லவ் பேர்ட்ஸ் ரெண்டும் நான் ஷூ போடும்போதெல்லாம் என்ன பார்த்து பலிப்பு காமிச்சு கீச்சு மூச்சுன்னு கத்தி டீஸ் பண்ணுது...நைட்ல தூங்க போறப்ப ரூம் மேட்டுக்கு குட் மார்னிங் சொல்றேன்..அவனும் சிரிச்சுகிட்டே குட்மார்னிங்...குட்மார்னிங்..நடத்துடி ராஜா நடத்துன்னு சிரிக்கறான்... !
சிரிச்சுகிட்டே இருக்கணும்போல தோணுது..திடீர்னு ஓ ன்னு அழ தோணுது..இந்த பொண்ணுகிட்ட சொல்றதுக்காக இத்தன வருசமா யோசிச்சு வெச்சிருந்த ஜோக் எதுவுமே ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது.. வாழ்க்கைல பர்ஸ்ட் டைம் ஜோக் அடிக்க தெனர்றேன்..நெறைய நேரம் ரெண்டு பெரும் போன்ல பேசாம அமைதியாவே இருக்கோம்...ஏன்னு தெரியல...அதுக்கப்றம் கொஞ்ச நேரம் சிரிக்கறோம்...அதுவும் ஏன்னு தெரியல...அவகிட்ட பேசணும்னு தோணுது...இத எழுதிகிட்டு இருக்கும்போது கூட...எதாச்சும் பேசணும்னு தோணுது...பேசிகிட்டே இருக்கணும்னு மட்டும் தோணுது..!
அய்யோ..என்னாச்சு எனக்கு...லவ் சுத்த ஹம்பக்குன்னு ஒரு வருசத்துக்கு முன்னாடி மாயாஜால்ல பீர் அடிச்சிட்டு என் பிரெண்டோட அப்பா மேல சத்தியம் பண்ணவன் சார் நான்.. !
இப்போ நானும்...!
சாவுக்கும் பக்கம் வந்தேன்..இதன் பேரே காதல் என்றேன்...ஹோசான்னா...!
-------------------------------------------------------------------------------------------------------------
இப்டி ரெண்டு பதிவ வெளியூர்க்காரன் எழுதிருக்கான் பாஸ்...அடுத்த பதிவுல எத போஸ்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க..மாமனாரை தெய்வமாய் மதிப்போர் சங்கம் படிச்சு பார்த்துட்டு என் பிரெண்ட் நேத்திலேர்ந்து தனியா உக்காந்து விழுந்து விழுந்து சிரிச்சுகிட்ருகான்..நல்லா வந்துருக்குன்னு நெனைக்கறேன்...சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள் படிச்சு பார்த்துட்டு எனக்கே என் ஆள்கிட்ட உடனே பேசணும் போல தோணுது..!
அதனால எது பர்ஸ்ட் படிகரீங்கன்னு நீங்களே சொல்லுங்க...இன்னும் நாப்பத்தி எட்டு மணி நேரத்துல பதிவ போடலைனா வெளியூர்காரன ஹாக் பண்ணிடுவேன்னு பட்டாப்பட்டி மெரட்னதால இந்த பதிவ போடல...திரு பட்டாபட்டியார் ஹாக் பண்ற அளவுக்கு வெளியூர்க்காரன் ப்ளாகுக்கு வொர்த் இல்லைங்கரதால இந்த பதிவ போடறேன்...!
(@பட்டாப்பட்டி..! எலேய் பட்டாப்பட்டி...தக்காளிமக்க உனக்கு வெயிட் ஏத்தி எழுதிருக்கேன்...உன்னோட அடுத்த பதிவுல எனக்கு வெயிட் ஏத்தி நீ ஒரு வரி எழுதிரு...இல்லாட்டி உன் மரியாதை கெட்டுபோயிரும்..உன் மானத்தை வாங்கிபுடுவேன்...இப்டியெல்லாம் தமிழ் பதிவுலகத்துல மாத்தி மாத்தி எச்ச்சதனமா விளம்பரம் பண்ணிக்கலைனா நம்மள அந்த மானம்கெட்ட பிரபல பதிவர்கள் மதிக்கமாட்டாங்கேயா ..ஏன்னா அவேங்களும் இப்புடித்தான்...)
இப்ப நீங்க சொல்லுங்க பாஸ்..மொதோள்ள எத படிக்கறீங்க..?
இப்படிக்கு...
என் மாமனாரின் அன்பு ஆசிர்வாதங்களோடு,
வெளியூர்க்காரன்..







.jpg)
.jpg)