காலேஜ்ல டூர் போனப்போ பஸ்ல விடியகாலைல அஞ்சு மணிக்கு என் கூட படிச்ச டொக்கு பிகர் ஒன்னு ,யாரும் பார்கலைன்னு நெனைச்சுகிட்டு கோணவாய ஒரு மாதிரியா கோணிகிட்டு கொடூரமா ஒரு கொட்டாவி விட்டுச்சு....ங்கொய்யா பயபுள்ள...அன்னிக்கு முடிவு பண்ணேன்...கல்யாணம் பண்ணா தமிழ்நாட்டு புள்ளைய பண்ணகூடாது...கொட்டாவியே விட தெரியாத ஒரு வெள்ளகார குட்டியா பார்த்து கட்டிக்கிட்டு இங்கிலிஷ்காரன் ஆய்டனும்னு...
அப்டி ஒரு வீர லட்சியத்தோட வாழ்ந்துகிட்டு இருந்தப்போதான் மின்னலே படம் பார்த்தேன்...கல்யாணம்னு ஒன்னு பண்ணுனா ரீமா சென்ன பண்ணனும்...இல்லேன்னா காலம் புல்லா வேற ஒரு நச்சு பிகர கட்டிக்கிட்டு சொகுசா வாழணும்னு மனசுக்குள்ள வைராக்கியமே வந்துச்சு..(எது நடந்தாலும் நமக்கு லாஸ் இருக்க கூடாது ப்ரதர்..)
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...இந்த பாட்டுல ரீமா குடுக்கற எக்ஸ்ப்ரேசன்காகவே இந்த படத்த பட்டுகோட்டை அருண் தியேட்டர்ல மட்டும் அஞ்சு தடவ பார்த்தேன்...ரீமா கவிதைங்க...அதும் ஹைக்கூ கவிதை...கவிதைய பேப்பர்ல எழுதி படிக்கலாம்...இல்ல தோட்டத்துல ரோஜா செடி பக்கத்துல வெச்சு போட்டோ எடுக்கலாம்..ஆனா அதென்ன சைக்கோதனம்...சரித்திர படம்ங்கற பேர்ல யூரின் போக சொல்லி வீடியோ எடுக்கறது...செல்வா சார்...நீங்க ஆண்ட்ரியாவையே உஷார் பண்ணிட்டீங்க..உங்களுக்கு இருக்கு ஒத்துகறேன்...ஆனா உங்களுக்கு மட்டும்தான் இருக்குன்னு நெனைச்சுகிட்டு படம் எடுக்காதீங்க...(யோவ் பட்டாபட்டி...சிரிக்காதையா...நான் மூளைய சொன்னேன்...)
நான் சொல்ல வந்த மேட்டருக்கு வரேன்...
இன்னிக்கு தஞ்சோங் பகர் எம்.ஆர்.ட்டில ஒரு சைனா பிகர பார்த்தப்போ என் மனசுக்குள்ள வந்த சமுதாய அக்கறையுள்ள கேள்வி இது...எந்த ஊரு பிகருங்க ராவான அழகுன்னு...ஒரு பொண்ணு அழகா இருந்து பார்த்துருபீங்க..ஆனா அம்பது கிலோ அழகு ஒரு பொண்ணா இருந்து பார்த்துருகீங்க்லா...நான் இன்னிக்கு பார்த்த புள்ள அவ்ளோ அழகுங்க....அந்த சீனாகார குட்டியோட குட்டி லிப்ஸ பார்தொன்ன, என்னோட ஒத்தை தலைவலி சரியாய்டுசுன்னா பார்த்துக்கங்க...அயோயோ என்னோட கி போர்ட்லையே வார்த்தை இல்ல சாமி...அந்த புள்ள எவ்ளோ அழகுன்னு சொல்ல...எனக்கு அந்த பிகர பார்தோன்னதான் கடவுள் நம்பிக்கையே வந்துச்சின்னா பார்த்துகங்களேன்...(கம்பியூட்டரால இவ்ளோ அழகா டிசைன் பண்ண முடியாது வாத்யாரே...) அந்த புள்ளைய டிசைன் பண்ண ஹென் லீ சியுவ் (சீனாகார பிரம்மா..) எடுத்துக்கிட்ட டைம்ல ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு ஒதிக்கிருந்தா என்னோட அம்பதாவது படம் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு போட்டியா தமிழ்நாட்ல ரிலீஸ் ஆய்ருக்கும்... ஆனது ஆச்சு.., சரிதான் கழுதய காதல அந்த புள்ளைக்கிட்ட சொல்லிருவோம்னு முடிவு பண்ணேன்..ஆனா இந்த நாதாரி பயலுக சிங்கப்பூர் போலீசு என்ன கொத்தா அமுக்கி விசா அட்டைல ஓட்டைய போட்டு ரெண்ட நாளாக்கி ஊருக்கு அனுப்பிடுவாணுகலேங்கற ஒரே காரணத்துனால மூடிகிட்டு பார்த்துக்கிட்டு மட்டும் இருந்தேன்..
பார்த்துகிட்டே இருந்தப்போ திடீர்னு உதட்ட சுளிச்சு என்னவோ பண்ணுச்சு...பதறித்தான் பொய்ட்டேன்..என் தங்கத்துக்கு என்னவோ ஏதோன்னு...அப்பறம்தான் தெரிஞ்சுது...நாமெல்லாம் கைய தூக்கி கம்மகொட்ட வழியா நாராசமா வெளியேத்துற அலுப்ப,அந்த புள்ள உதட்ட சுளிச்சு வெளியாக்கிருக்குன்னு...நான் மட்டும் அந்த அலுப்பா இருந்துருந்தன்னா கண்டிப்பா அந்த பிகர விட்டுட்டு போயிருந்திருக்க மாட்டேன்...
ஆனா பாருங்க அப்பன்னு பார்த்து ஒரு ஆஸ்ட்ரேலியன் பீசு என் பக்கத்துல வந்து வாண்டடா உக்காந்துச்சு...அது மனசுலயும் என் மேல இல்தக்கசையா இருக்கும் போலருக்குன்னு பெரிய மனசு பண்ணி விட்டுட்டேன்...சும்மா சொல்ல கூடாதுங்க.பார்த்துக்கிட்டே இருக்கலாம்...சூப்பரா இருந்துச்சு...கொஞ்ச நேரம் கழிச்சு மூஞ்சிய பார்த்தேன்...உத்து பார்த்தா என் மூஞ்சி தெரியுது அந்த புள்ள முகத்துல...அம்பூட்டு கலரு...என்னையெல்லாம் கேட்டா அந்த சீனா சிறுக்கிக்கு இந்த புள்ள கால் அமுக்க கூட தகுதி இல்லைனுதான் சொல்லுவேன்...ஆனா எவ்ளோ நேரம் சார் அந்த வெல்ல உளுவைய பார்க்கறது...அலுத்து போய் நிமிர்ந்து பார்த்தேன்...எதிர் சீட்ல ஒரு நார்த் இந்தியன் சக்காளத்தி பைய மடில வெச்சுகிட்டு உக்கார்ந்திருந்தா...எனகென்னவோ அவ்ளவா புடிக்கல..என்னையெல்லாம் அந்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சா அம்பது வருசத்துக்கு மேல ஒரு நாள் கூட அவகூட வாழமாட்டேன்....
அப்போ திடீர்னு மனசு கெடந்து படபடன்னு அடிச்சுகிச்சு...ஐயோ என்னதிதுன்னு பதட்டம திரும்பி வாசல பார்த்தேன்...நம்ம ஊரு டொக்கு பிகரு ஒன்னு, டொய்யான் மாதிரி ஏறுனுச்சு...பாருங்களேன் இந்த மானம்கெட்ட பரதேசி பய ஹார்மோன் என்னோட சபதத்த மறந்துட்டு உசுர குடுத்து ஜெட் வேகத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுட்டான்... ஸ்பென்சர்ல உலக அழகிய எல்லாம் சப்ப பிகர்டா மச்சான்னு ஆணவமா கமெண்ட் அடிச்சிட்டு கிராஸ் பண்ண என் கண்ணு அந்த சப்ப பிகர வெச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டு இருந்துச்சு...( சிங்கப்பூர் வந்து ரொம்ப காஞ்சி போய் கெடக்கறேன் போல...)
எனகென்னவோ அழகா தெரியறது நம்ம ஊர்நாட்டு பீசுங்கதான்...சுமார்தான்...ஆனா ராவா இருப்பாளுக...
(வெளியூர்காரனோட இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கரவங்க மேல் கோர்ட்ல அப்பீல் பண்ணலாம்.எதனால இந்த தீர்ப்புன்னு விளக்கமா விளக்கவுரை தரப்படும்...அத தயவு செய்து பெண்கள் படிக்கச் வேணாம் எனவும் தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள்.....)
ஆதலினால் காதல் செய்வீர்...ஊர்நாட்டு பிகருங்கள....
வெளியூர்க்காரன்







