- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Showing posts with label chocolate pages. Show all posts
Showing posts with label chocolate pages. Show all posts
Posted by Veliyoorkaran - - 31 comments and to comment



யேய் சிபி..ஒருவேளை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்காம போச்சுன்னா நீ வேற கல்யாணம் பண்ணிப்பியாடா...?

ஈவினிங் ஆறு மணி...பீச் காத்து...பக்கத்துல வேற யாரும் இல்ல..ஏண்டி இப்டி அபத்தமா பேசற....காலம் காலமா இந்த மாதிரி சிட்டுவேசன்ல லவ்வர்ஸ் என்ன பண்ணுவாங்களோ அத மட்டும் பண்ணுவோம் நாம...குட்டி.,குட்டி.. நேத்து பார்த்த இங்க்லீஷ் படத்துல ஒரு நச்ச் கிஸ் சீன் வந்துச்சுன்னு சொன்னேன்ல..அத எப்டி இருந்துச்சுன்னு நடிச்சு காட்டவா...?

அவன் கண்ணை பார்த்து மறுபடியும் கேட்டா..! நீ பர்ஸ்ட் இதுக்கு பதில் சொல்லு.. ஒரு வேலை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலைனா, நீ வேற கல்யாணம் பண்ணிபியா மாட்டியா...?

ஆங்..வெல்..ஹவ் டு சே தட் ...! குட்டி சொக்கா இருந்தா...அப்டியே உஷார் பண்ணி கல்யாணத்த பண்ணிட்டு டார்ஜிலிங், சிம்லான்னு ஒரு ரவுண்ட் சூடா  போயிட்டு போயிட்டுரலாம்தான்..விடு மச்சி...அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும்...எனக்கு அதிர்ஷ்ட்டம் இல்ல..சொல்லிட்டு சிரிச்சுகிட்டே  ஓரக்கண்ணால சைந்தவிய நக்கலா பார்த்தான் சிபி... 

நீ கல்யாணம் பண்ணிக்கடா...நீ சந்தோசமா இருக்கணும்...நான் இல்லைனா கூட நீ சந்தோசமா இருக்கணும்...என் சிபி வாழ்க்கை பூரா சந்தோசமா சிரிச்சுகிட்டே மட்டும் இருக்கணும்..நான்னு இல்லடா..என் சிபி எந்த பொண்ணு வந்தாலும் அவள சந்தோசமா வெச்சுப்பான்..எனக்கு தெரியும்..என் சிபிய பத்தி எனக்கு நல்லா தெரியும்...உன்ன மாதிரி ஒரு நல்ல புருஷன் ,எனக்கு கெடைக்கலங்கற ஒரே காரணத்துனால இன்னொரு பொண்ணு மிஸ் பண்ணிற கூடாது..நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ...!

யேய் ச்சீ..என்னடி லூசு மாதிரி என்னனமோ பேசற...நான் எதோ வெளாட்டுக்கு உன்ன வம்புக்கு இழுக்கறதுக்காக சொன்னேன்ப்பா...!

இல்ல சிபி.நேத்து ஏன் பிரெண்ட் அவ லவ் பெய்லியர்  பத்தி சொல்லிட்ட்ருந்தா.. அப்போலேர்ந்து ஏன் மைண்ட்ல இது மட்டும்தான் ஓடிட்ருக்கு....திடீர்னு எனக்கு எதாச்சும் ஆய்ட்டா நீ என்ன நெனைச்சுகிட்டே உன் லைப வேஸ்ட் பண்ணிற கூடாதுல்ல..அதான் இப்பவே சொல்றேன்..ஒரு வேலை நமக்கு கல்யாணம் ஆகலைனா   நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ...!

யேய் லூசு..என்னாச்சுடி  உனக்கு இன்னிக்கு...நமக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்...ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு..?

ஹ்ம்ம்..!

ஏன் குட்டி..,ஒரு வேலை நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை பத்தி அவகிட்ட சொல்லுவியா...?

யேய்..நான் ஏண்டி நடுராத்திரி மூணு மணிக்கு விஜய் படத்துக்கு போகபோறேன்..? ஏண்டி என்னனமோ சொல்லி என்னை இப்போ கொழப்பர ...?

இல்ல குட்டி சொல்லேன்..ஒரு வேலை உனக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம் ஆகி, அவகூட வாழ்ந்துட்ருக்கும்போது அவகிட்ட சைந்தவின்னு ஒரு லூசு பொண்ணு என்னை உயிருக்குயிரா காதலிச்சான்னு சொல்லுவியா...?

சிபி சிரிச்சான்...யேய்..என்னாச்சுடி உனக்கு இன்னிக்கு...?

இல்ல நீ சொல்லேன்..நீ அவகிட்ட என்னை பத்தி சொல்லுவியா மாட்டியா...?

சரி நீயே சொல்லு...உன்னபத்தி அவகிட்ட சொல்லவா வேணாமா...?

கடல்காற்று வேகத்தை குறைத்து சைந்தவியை கவனிக்க ஆரம்பித்தது..

“சொல்லாதடா..நான் உன்ன எவ்ளோ லவ் பண்ணேன்னு தெரிஞ்சா அந்த பொண்ணால தாங்கிக்க முடியாது...!

தேம்ப ஆரம்பித்தாள் சைந்தவி...

யேய்..என்னாச்சுரி உனக்கு..ஏன் இப்டியெல்லாம் பேசற...? சைந்தவி கம் ஆன்..வாட்ஸ் ராங் வித் யூ...?

சிபி நான் ஒன்னு சொல்லுவேன் செய்வியா..?

தேம்பல் அதிகமாகி இருந்தது சைந்தவியிடம்...

சொல்லுடி...!

நான் இல்லைனா கூட நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்காதரா..ப்லீஸ்ரா...அப்பறம் நீ என்னை மறந்துருவ...அத என்னால தாங்கிக்க முடியாது...!

உடைந்து அழ ஆரம்பித்தால் சைந்தவி...

எதுவும் சொல்ல தோணாமல் அவளை கட்டியணைத்த சிபியின் கண்ணீர் சைந்தவியை நனைத்தது...!

முத்த மழை தூத்தல் போட ஆரம்பித்தது...!
*************************************************************************
பீச் காத்துல, லவ்வர்ஸ் அழுதுகிட்டே கட்டிபுடிச்சுகிட்டு குடுக்கற கிஸ்ஸ விட டேஸ்ட்டான  கிஸ் உலகத்துலேயே இருக்க முடியாதுங்க...!
  
வேணும்னா இந்த ஜோடிகிட்ட கேட்டு பாருங்களேன்...

ஊடலும், பின் கூடலும், அதன் பின் காம தேடலுமே-- "காதல்"..!
***************************************************************************
A Veliyoorkaran Article.