- The page for icecream romance -

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
Posted by Veliyoorkaran - - 27 comments and to comment


வடிவேலுவோட காமெடிய கூட சீரியசா மூஞ்ச வெச்சுகிட்டு கோவமா பார்க்கற என் அப்பா,நீ பேசுன பேச்சுல விழுந்து விழுந்து சிரிச்சப்பதாண்ட உன்ன  நான் நிமிர்ந்து பார்த்தேன்.ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு என்ன பொண்ணு பார்க்க வந்துருந்த..ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்த...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...அப்ப நான் சத்தியமா நெனைக்கல,நமக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு உனக்கு நான் இப்டி ஒரு லவ் லெட்டர் எழுதுவேன்னு...


உலகத்துலேயே எனக்கு ரொம்ப புடிச்சது எங்க அப்பாவ...ஆனா,கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல எங்கப்பா  பொறந்த நாள் கூட மறக்க வெச்சுடியேடா பாவி...நான் அடுத்த நாள்  எங்கப்பாவுக்கு  போன் பண்ணி  எவ்ளோ அழுதேன் தெரியுமா..என்ன என்னமோ பண்ணிட்ட நீ... !


என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாரையும் வெச்சுகிட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்ப எனக்கு வந்த கோவத்துக்கு உன் கழுத்த புடிச்சு உள்ள ரூமுக்குள்ள இழுத்துகிட்டு போய் கதவ சாதிக்கணும் போல இருந்துச்சு...எதுகுன்லாம் கேக்காத...


நம்ம ஹனி மூன் போனது,அங்க நீ எனக்கு தம் அடிக்க கத்து குடுத்தது..என்ன போட்டு பாடா படுத்தினது...என் பர்த்டே பிரசன்ட்னு நீ குடுத்த அந்த கிப்ட்..(அசிங்கம் புடிச்சவன்டா  நீ..எப்டி அதெல்லாம் யோசிச்ச....!) உனக்கு மட்டும் எப்டி தோணுது .இப்டியெல்லாம் குறும்பு பண்ண... வாலு பயலே .இந்த ஏழு வருசத்துல என்னவெல்லாம் பண்ணிருக்க....


எங்கம்மா என்ன தொட்டு பேசுனா கூட எனக்கு புடிக்காது...பாவி பயலே..கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல என்ன என்னேனல்லாம் பண்ண...அப்போல்லாம்,என்ன கண்ணாடில பார்க்க எனக்கே எவ்ளோ கூச்சமா இருந்துச்சு தெரியுமா...


எங்கப்பா என்ன பார்க்க ப்ளைட்ல  வந்தப்போ,"ஒப்பன் வந்துட்டான் போல..இவ்ளோ நேரம் அழகா இருந்த ஏர்போர்ட் திடீர்னு சூனியம் புடிச்ச மாதிரி இருக்குனு சொல்லி என்ன நீ சிரிச்சுகிட்டே அழ வெச்சது..."உன்னால மட்டும் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் ஜோக் அடிக்க எப்டிடா முடியுது.. யார்கிட்டடா கத்துகிட்ட..இப்டி காமெடி பண்ணியே என்ன கவுக்கற வித்தைய....


எவ்ளோ தண்ணியடிச்சிட்டு மட்டையானாலும் என் அப்பாவ கிண்டல் பண்றப்ப மட்டும் உடனே தெளிவா பேசுறியே எப்டிடா அது...இனிமேவாச்சும், எங்கப்பாவ அவன் இவன்னு சொல்லாதடா ப்ளீஸ்..


நமக்கு குழந்த பொறந்தப்போ நீ உங்கம்மா கைய புடிச்சிகிட்டு தேம்பி தேம்பி அழுதியாமே...எங்க அத்த சொன்னங்க...அத கேட்டோன்ன, எனக்கும் அழுக வந்துடுச்சு தெரியுமா..என்ன உனக்கு அவ்ளோ புடிக்குமாடா...?


ம்..சொல்ல மறந்துட்டனே...நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ எங்க வீட்டுக்கு வந்தப்போ,ஒரு கிஸ் குடுக்கறதுக்கு வேர்த்து விட்டு  ,உளறி கொட்டி ,பயந்து நடுங்குன நீ,இப்ப எப்டியெல்லாம் மாறிட்ட..ராட்சஷா..(நீ அன்னிக்கு கிஸ் கொடுப்பேன்னு நான் எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா...நீ பாட்டுக்கும் பெரிய மயிர் மாதிரி நல்லவனாட்டம் போய்ட்ட...ச்சே,உன்னோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் கேட்ட வார்த்தையெல்லாம்  வருது...)


உன்கிட்ட எனக்கு புடிக்காதது ஒன்னே ஒண்ணுதாண்டா..கோவம் வந்தா வெளில காமிக்காம உள்ளேயே வெச்சுக்கறது..இப்போ உன் மகளும் அப்டியேதான் பண்றா...உன்கூட ஒருதடவையாவது கண்ணா பின்னான்னு சண்ட போடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு...கொஞ்சம் கோவப்படேன்...


ஆனா உன் பொண்ணு வந்தோன்ன என்ன நீ முன்னாடி மாதிரி கவனிக்க மாட்ரடா..ஜாடமாடையா கேட்டா,இது நான் பெத்த பொண்ணு,கொஞ்சறேன்.எவன் பெத்த பொண்ணையோ நான் எதுக்கு கொஞ்சனும்னு நக்கல் வேற..அவ வர்றதுக்கு முன்னாடி தெரிலையா நான் எவன் பெத்த போன்னொன்னு... இரு என்னிக்காச்சும் கெஞ்சுவ அன்னிக்கு வெச்சுகறேன்..


ஆனா இதுவரைக்கும் யாரையும் நான் லவ் பண்ணதில்லன்னு நீ சொல்றததான் என்னால நம்பவே முடிலடா...நீ பேசுற பேச்சுக்கு கண்டிப்பா மாட்டிருபாளுகளே....


ஆமாம்,எப்போதுமே ஜோக் அடிச்சிட்டு இருக்கற நீ இப்பல்லாம் அப்டி இல்லையே ஏன்டா..ஒரு வேலை,நமக்கும் வயசாவுதோ...


உன்னோட வாழ்ந்த இந்த வாழ்க்கைய மறுபடியும் ஒரு தடவ வாழணும்னு ஆசையா இருக்குடா...முத்திக்குட்டி...ப்ளீஸ்டா...என்ன மறுபடியும் ஒரு தடவ பொண்ணு பார்க்க வர்றியா...


I love you-by Sainthavi.

எழுதுன லெட்டர மனசுக்குள்ள ஒரு தடவ படிச்சு பார்த்து சிரிச்சிட்டு ,பக்கத்துல அவன் பெத்த பொண்ண கட்டிபுடிச்சு தூங்கிட்டிருந்த சிபிய ஓரக்கண்ணால ரசிச்சிகிட்டே,எப்டி ரொமாண்டிக்கா இந்த லெட்டர இவன்ட்ட குடுக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சா சைந்தவி..மணி 3.47னு வெளில இருட்டுகிட்ட கடலை போட ஆரம்பிச்சது நிலா....சைந்தவி புருசனோட பதில் காதல் கடிதம்...


வெளியூர்காரன்  

(நாங்களும் சிறுகதை எழுதுவோமுள்ள...)

27 Responses so far.

 1. Anonymous says:

  super thampi.. appadiyee intha letter enakku vantha mathiri oru nimisam shock aayitten...
  எவ்ளோ தண்ணியடிச்சிட்டு மட்டையானாலும் என் அப்பாவ கிண்டல் பண்றப்ப மட்டும் உடனே தெளிவா பேசுறியே எப்டிடா அது...இனிமேவாச்சும், எங்கப்பாவ அவன் இவன்னு சொல்லாதடா ப்ளீஸ்..
  உன்கிட்ட எனக்கு புடிக்காதது ஒன்னே ஒண்ணுதாண்டா..கோவம் வந்தா வெளில காமிக்காம உள்ளேயே வெச்சுக்கறது..இப்போ உன் மகளும் அப்டியேதான் பண்றா.
  --- enna onne motha paaravula 7 varushamnum and kadaisila sainthavi appadinu sila change irunthathaala ...
  rompa rasicheen... good...

 2. சூப்பர். ரொம்ப நல்லாயிருந்துச்சு..

  ஆமா ! பேச்சுலரின் கடைசி பக்கம் ஒரு பதிவு போட்டுட்டு உடனே எடுத்துட்டீங்களே ? ஏன் ?

 3. 7 வருஷம் ஆன பிறகு இப்படி ஒரு லெட்டர் ??? யாருங்க அங்க. இந்த வெளியூர்காரனுக்கு சில வாழ்க்கை உண்மைகளை சொல்லிக்கொடுங்க :)

 4. Pinnokki...Pinnokki paarunga...Bachelorin kadaisi pakkangal irukku....!/////

  7 varusam kalichuthanga pondatikitta romancea pannanum....(enna appo namakku vera figure kedaikkathu....)///

 5. ரசனையான கதை நண்பா..!ச்சும்மா ஐஸ்க்ரீம்ல ஊறவச்ச குலோப் ஜாமூன் மாதிரி இருக்குது கதை...
  Good one Dude!

 6. Excellent maamoi.. naan sonna maathiri unna america presidenta aakkaama vidamaatten..

 7. ஒற்றை வார்த்தை..
  பிரமாதம்.. :)

 8. அட... கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர். :P

  உண்மையில் அருமை!!!

 9. KANA VARO says:

  இவ்வளவு லேட் ஆ படிச்சிருக்கமே! அருமை ..

 10. Subankan says:

  கலக்கல் :)

 11. அண்ணா கதை அருமை பலரின் வயிற்று எரிச்சலை கிளப்பி விட்டுட்டிங்க போங்க!!!

 12. வெளியூரு... என்னா அதிசயம்... பாரு நம்ம ஏரியாவுக்கு இன்னைக்கு எவ்வளவு பேரு வந்திருக்காங்கன்னு...

  நேத்து நைட் கூட ரெப்ரெஷ் பண்ணி பார்த்தேன்... ஒன்னும் இல்ல. இப்ப பாரு எவ்வளவு பேரு வந்து படிச்சிருக்காங்க...:-)

 13. Anonymous says:

  Is there anyone who is kind enough to translate it in English please

 14. நண்பா சூப்பர் இதுதான் நல்லா இருக்குனு குறிப்பிட்டு சொல்லமுடியல  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

 15. @@@Anonymous
  Is there anyone who is kind enough to translate it in English please///

  Hi dude,please give me your e mail id.I will send you the translated copy..Veliyoorkaran.//

 16. வெளியூர்காரரே பதிவு அருமை..

  பேஸ்புக்கில மார்ச் 11 தான் இந்தப் பதிவை share பண்ணினேன்...
  அங்கையும் வந்த கொமண்ட்ஸ்ஸில சிலரின் அனுபவம் கொட்டிச்சு.. பையன்கள் என்னமா பீல் பண்ணுறாங்கப்பா..

  புல்லட் அண்ணர் கடுப்பை கிளப்பும் பெண்கள்-3 தொடரை சுமார் 1 வருடத்தின் பின் எழுதியிருக்கார் என்றா பாருங்களேன் அந்த லேட்டர் என்னமா பாதிச்சு இருக்கு என்று...

  வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் எழுத்து பணி...

 17. குட் ஒன். அருமை. ஓட் செய்து மேலும் பலர் வாசிக்க செய்யவேண்டும்.

 18. அருமை!!!அருமை!!!அருமை!!!

 19. Jabar says:

  நண்பா நீ வெளியூர்க்காரன் இல்ல.. எங்க ஊர்க்காரன்... ரொம்ப நல்ல பதிவு... லேட்டா படிச்சாலும் ரொம்ப மனச தொட்ட பதிவு... சிந்திக்க வைத்த எழுத்து.... நண்பா நீ எங்கேயோ போய்ட்ட... (நண்பனாக நினைத்ததால் மரியாதை குறைந்துவிட்டது...)

 20. rajaaswin says:

  Hi, Its a rocking one... could you please send me the translation of this one , and his letter too. Ofcourse I have read it, and its amazing, if u cud send the translated one, i would be able to ask my other frnds, who dont know to read or write tamizh, to read it for themselves :-).. Excellent write up

 21. ஹய்யோ .. இவ்ளோ நல்ல கதை எழுத முடியுமா ..? நான் எழுதுற சிரிப்பு கதையெல்லாம் இதுல பாதி கூட வராது போலேயே ..கலக்கிட்டீங்க ..!!

 22. Unknown says:

  சூப்பரா எழுதியிருக்கீங்க..

 23. வணக்கம் வெளியூர்காரரே...பதிவு அருமை..ரசனையான கதை இப்போ தான் படிக்க முடிஞ்சது...யதார்தம் மின்மினியா மின்னுதுங்க...அதுசேரி இப்டி ஒருத்தி உண்மயாவே இருக்காளா..சொல்லுங்க.உடனே கழுத்த நீட்டிப்புடுறேன்.(அதுப்பாருங்க வெளியூர்காரரே நம்ம ஊரு பொம்பளங்க இப்பலாம் தாழி போட்டுகுட்டு வெளியப்போனா கவுரதக்கொரவாம்...ம்ம்ம்ம் என்ன கலிகாலமோ...)

 24. Relay nice...i want a GF for this love....wow...supppper