Chocolate pages from Sainthavi

- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 40 comments and to comment


ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு  என்னோட லைக்குகள் என தீயா வேலை செஞ்சு மக்களுக்காக போராடிகிட்ருந்தாலும் எனக்கு ஓய்வு தேவைப்படுமா இல்லையா...? அதான் பேஸ்புக்க லாக் அவுட் பண்ணிட்டு கெளம்பிட்டேன்...!

"ரெசிடென்ட் ஈவில்"னு என்னோட பால்ய கால தோழர் பால் ஆண்டர்சன் ( பக்கி லீக்ஸ் எழுதற சாம் ஆண்டர்சன் இல்லப்பா...) இயக்கிய இலக்கிய படம்...! நீ பார்த்துட்டு எப்புடி இருக்குன்னு சொன்னாதான் நான் காலைல கக்காவே போவேன்னு அவரு அடக்கிட்டே நின்னதால ,தமிழ், ஒரிய மற்றும் ஜப்பானிய  மொழி இலக்கியங்கள கலக்குன மாதிரியே, உலக இலக்கிய வட்டத்தையும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு கலக்கு கலக்கிபுடனும்னு வைரகியதொட சேகப்பு களர் கட்டாம் போட்டா சாட்டாய போட்டுக்குட்டு என் பைக்கோ ஸ்டார்ட் பண்ணி கொழம்பிட்டேன்...!! ( ச்சே...இனிமே ஜாக்கி சேகர் அண்ணன் ப்ளாகு பக்கமே போக கூடாது..அதே மாதிரி வருது...)  

இதுக்கு முன்னாடி வந்த ரெசிடென்ட் ஈவில் படங்கள்ல என்னத்த எடுத்தாங்கேலோ அதையேதான் இதுலயும் எடுத்துருக்காங்கே...!! அதே ரெத்தம், அதே துப்பாக்கி, அதே மனுசன கடிக்கிற வைரசால பாதிக்கப்பட்ட மனுசங்கே...!! என்ன...இதுல கொஞ்சம் அம்மா சென்டிமென்ட்ட கலந்துருக்காங்கே...!! மத்தபடி ஒன்னும் புதுசு இல்லைன்னேன்...!!

அதுலயும் இந்த படத்துல அந்த ஹீரோயின் ரொம்ப மோசமான பொம்பளையா இருக்குங்க...! துப்பாக்கிய எடுத்துச்சுன்னா நல்லவன் கெட்டவன் வித்தியாசம் தெரியாம எல்லாரையும் சுட்டு கொன்னுருது...!! இதுக்கு நம்ம முதலமைச்சர் தேவலாம் போலருக்கு...!! மக்களுக்காக போராடரவங்கள மட்டும்தான் குறி வெச்சு சுட்டு கொல்லுவாங்க...!! 

இதே மாதிரி வைரஸ் நம்ம தமிழ்நாட்டுல பரவிருந்தா வைகோ கம்பளி போர்வைய எடுத்து போர்த்திகிட்டு ரோட்ல படுத்து போராடிருப்பாறு...! ஆனா, கதை நடக்கறது வேற எங்குட்டோங்கறதால அண்ணனால போக முடியாது...!! மதிமுக அன்பர்கள் உடனே டென்சன் ஆகி கேக்கலாம்..!! ஈழ தமிழர்களுக்காக எதோ ஒரு மொழி தெரியாத ஊர்ல போய் ரோட்ல நின்னு போராட்னவண்டா என் தலைவன்... நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனைனா அவந்தாண்டா மொதொள்ள வந்து நிப்பான்னு...!! வாஸ்தவந்தாம்..!! யாரு இல்லைனா...!! நம்ப தமிழ்நாட்டு மக்களுக்கு சூடு சொரன இருந்து நல்லது கெட்டது தெரிஞ்சிருந்தா என்னிக்கோ வைகோவ ஜெய்க்க வெய்ச்சு ஆட்சில உக்கார வெச்சிருக்க மாட்டாங்களா...? அரசியல்ல மக்களுக்காக போராடறது முக்கியம் இல்ல ப்ரதர்...பெர்பார்மன்ஸ் தான் முக்கியம்...!! இப்ப நாங்க உண்ணாவிரதம் இருக்கல...நாக்குக்கும் பங்கம் இல்லாம, குடலுக்கும் பங்கம் இல்லாம...!! மொதொள்ள அரசியல் எப்டி பண்றதுன்னு  கத்துக்கங்கடே...அப்பறம் ஆட்சிக்கு வரலாம்..!! 

அதுவும் இல்லாம அந்த புள்ள இம்புட்டு போராடி அந்த வைரஸ் பிரச்சனைய தீர்க்கனும்னு தேவையே இல்லைங்கறேன்...!! நேத்து செங்கல்பட்டு பொதுக்கூட்டத்துல பேசும்போது சீமான் அண்ணன் சொன்னாப்டி...!! பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி நாம் தமிழர் இயக்கத்தோட போதுகூட்டதுல கலந்துக்கறதுக்காக தான்சானியா நாட்டுக்கு அண்ணன் போயிருந்தப்ப அந்த நாட்டு பிரதமர் அண்ணன் தனியா கூப்புட்டு சொல்லிருக்காப்ள...!! இந்த மாதிரி இந்த மாதிரி தம்பி...இதான் நெலமை...எனக்கப்ரம் நீதான் தம்பி இந்த நாட்டை காப்பாத்தி நல்லபடியா வழிநடத்தனும்னு...! ஆனா அண்ணன் உடனே பாசத்தோட மருதலிசிடாப்லாயாம்...! ஏற்கனவே ரெண்டு மூணு நாட்டை நாந்தான்னேன் காப்பாத்திகிட்ருக்கேன்...எனக்கு டைம் பத்தாதுன்னு...!! (வேணும்னா அண்ணன்ட்ட தான்சானியா பிரதமர் கெஞ்சறத போட்டோ எடுத்து வெச்சிருக்கோம்..ரிலீஸ் பண்றோம்..) அப்பேற்பட்ட எங்க அண்ணன் அந்த ரெசிடென்ட் ஈவில் வைரஸ்கிட்ட ஒரு அரை மணி நேரம் பேச விட்டா போதும்..!! பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் மருந்து வாங்கி குடுத்து பிரச்சனைய பைசல் பண்ணிவிட்டுட்டு வந்துருவாப்ள...!! ஆனா அரை மணி நேரத்துக்கு மேல அண்ணன அந்த வைரஸ்கிட்ட பேச விட்ராதீங்க... அந்த வைரஸ் பூச்சி இவர் பேச்ச கேட்டு கடுப்பாய்ரும் ..! அண்ணனும் கடுப்பாகி அந்த வைரஸ் பூச்சிய குத்தி கொல்ல பாய்ஞ்சிருவாப்டி...!! அப்பறம் தேவை இல்லாம அந்த பூச்சி அண்ணன முழுங்கி கக்காவோட கழிஞ்சிவிட்ற வரைக்கும் வெயிட் பண்ணி அப்பறம் துடைச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி இருக்கும்....!!


பைட்லாம் நல்லா எடுதுருக்காங்கே இந்த படத்துல..அதுலயும் ஒரு தாடிக்காரன் க்ளைமாக்ஸ் பைட்ல யாருமே இல்லாத எடத்த பார்த்து முகத்த டெர்ரரா வெச்சுக்கிட்டு பார்க்கறவெங்களுக்கு களுக்குன்னு சிரிப்பு வர்ற மாதிரி கத்திகிட்டு சுட்டுகிட்ருந்தான்...! பாமக காரனா இருப்பான் போல....!! ( கடைசீல அந்த வைரஸ் பூச்சி அவன மூஞ்சிலையே நக்கி கொன்ருச்சு...)   

அப்பறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்...அது ஏன்னு தெரியல..அந்த வைரஸ் பூச்சிய க்ளோஸ் அப்ள காமிக்கும்போதெல்லாம் எனக்கு என் கேப்டன் விஜயகாந்த் ரொமாண்டிக்கா நடிக்கற தமிழ் பட சீன்லாம் ஞாபகம் வந்துச்சுன்னு தெரியல..!! நல்ல கண் டாக்டரா பார்த்து காத காட்டனும்...!!


மொத்ததுல இதுவரைக்கும் வந்த ரெசிடென்ட் ஈவில் படத்துலையே இதான் செம மொக்க படம்...!! ( வினுச்சக்கரவர்த்தி தீர்ப்பு சொல்லிடாப்ள...பஞ்சாயத்து கலையட்டும்...)


சனிகிளமைல ரெண்டு ஹெனிக்கேன் அடிச்சும் தூக்கம் வரலைனா இந்த படத்த போய் பாருங்க..!!


என்னை  மாதிரி...!!

வெளியூர்க்காரன்