- The page for icecream romance -

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
Posted by Veliyoorkaran - - 62 comments and to comment


நாளைலேர்ந்து மூணாவது வருசத்துல அடி எடுத்து வெய்க்கிறான் வெளியூர்க்காரன்..இந்த ரெண்டு வருசத்துல சமுதாயத்துக்கு பயனுள்ள மாதிரி எதாச்சும் எழுதி மக்களை திருத்திருக்கமான்னு யோசிச்சு பார்த்தா ஒரு குந்தானியும் எழுதலங்கறது தெளிவா தெரியுது...!

இந்த லெட்சனத்துல நான் என்னத்த எழுதி கிழிச்சேன்னு தெரியல...எனக்கு முன்னூறு பாலோவர்ஸ் வேற..அவெங்கே எதுக்கு எனக்கு பாலோவர்சா சேர்ந்தாங்கேன்னு  எனக்கும் தெரியல,சேர்ந்த அவெங்கேலுக்கும்  தெரியாது...ஆனா சேர்ந்துருக்காங்கே..அந்த அன்பு நண்பர்கள்ட்ட ஒன்னே ஒன்னு மனச தொறந்து கேக்கணும்.. யோவ் எதுக்குயா என் ப்ளாகுக்கு பாலோவர்சா சேர்ந்தீங்க...தயவு செஞ்சு சொல்லுங்கையா...ஒரே மண்டை கொழப்பமா இருக்கு...நானே எனக்கு பாலோவரா சேர மாட்டேன்...! நீங்க ஏன்யா சேர்ந்தீங்க ..?

இவங்கெல மாதிரியே இன்னொரு க்ரூப் இருக்காங்கே...வெளியூர்க்காரன்ல ஒரு பதிவு படிச்சேன்...அப்டியே பின்னாடியே படிச்சிட்டு போய் உங்க எல்லா பதிவுகளையும் படிசிட்டேன்னு கமெண்ட்ல வந்து போடுவாங்கே...அவெங்கல்ட்டையும் ஒரு கேள்வி...யோவ் என் பதிவ நானே படிக்க மாட்டேன்...நீங்க ஏன்யா விழுந்து விழுந்து படிக்கிறீங்க...? என்ன பிரச்சன உங்களுகெல்லாம்...?


மத்தபடி வெளியூர்க்காரனோட சாதனை என்னன்னு யோசிச்சு பார்த்தா இந்த பய எழுதுன 90 சதவிகித பதிவுகளுக்கு ஆறு வோட்டுக்கு மேல விழுந்ததே இல்ல...அதுல ஒரு வோட்டு இவனோடது..ஒரு பதிவுக்கு அஞ்சு வோட்டுக்கு மேல இவன் வாங்குனதே இல்ல..அந்த ஒரே சந்தோசம்தான் இவனுக்கு...பார்மாலிட்டி கும்பல்ல மாட்டி சீரழியாம, வோட்டு பிச்சை வாங்காம, அடுத்தவனுக்கு ஜிஞ்சா அடிக்காம தமிழ் பதிவுலகத்துல எவானாச்சும் ஒருத்தென் இருக்கான்னான்னு எவனாச்சும் கேட்டா., அவென் தலைல தட்டி கெத்தா சொல்லுங்க..இருக்கான்டா என் மாப்ள வெளியூர்க்காரன்னு...! (அப்பாடா பஞ்ச டயலாக் பேசிட்டேன்...)


இது நான் எழுதுன பதிவுடான்னு பெருமையா சொல்லி காலர தூக்கி விட்டுக்கர மாதிரியான பதிவ நான் இன்னும் எழுதலைன்னு நெனைக்கறேன்...இந்த வருஷம் எழுத முயற்ச்சி பண்றேன்...


மத்தபடி ஒன்னும் இல்ல... இந்த வருசமும் நான் வழக்கம் போல எதையாச்சும் எழுதறேன்...நீங்க கெக்கே புக்கேன்னு சிரிச்சிட்டு போய் வேலைய பாருங்க..சந்தோசமா வாழ்க்கைய ஓட்டுவோம்...


அப்பறம் வணக்கம் சொல்றதுக்கு முன்னாடி, வெளியூர்க்காரனை அறிமுகபடுத்திய திரு தமிழ்குமார் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..


இந்த ரெண்டு வருசத்துல என்னை நெறைய சிரிக்க வெச்ச , ரசிக்க வெச்ச, உருக வெச்ச முகம்தெரியா அன்பு நண்பர்கள் அனைவருக்கும்.,


என் அன்பும் வாழ்த்தும்..


வெளியூர்க்காரன்