ஆயிரம்தான் நான்
ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான
கருத்துக்களுக்கு என்னோட லைக்குகள் என தீயா வேலை செஞ்சு மக்களுக்காக போராடிகிட்ருந்தாலும்
எனக்கு ஓய்வு தேவைப்படுமா இல்லையா...? அதான் பேஸ்புக்க லாக் அவுட் பண்ணிட்டு கெளம்பிட்டேன்...!
"ரெசிடென்ட் ஈவில்"னு என்னோட பால்ய கால தோழர் பால் ஆண்டர்சன் ( பக்கி
லீக்ஸ் எழுதற சாம் ஆண்டர்சன் இல்லப்பா...) இயக்கிய இலக்கிய படம்...! நீ
பார்த்துட்டு எப்புடி இருக்குன்னு சொன்னாதான் நான் காலைல கக்காவே போவேன்னு அவரு
அடக்கிட்டே நின்னதால ,தமிழ், ஒரிய மற்றும் ஜப்பானிய மொழி இலக்கியங்கள கலக்குன மாதிரியே, உலக இலக்கிய வட்டத்தையும்
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஒரு கலக்கு கலக்கிபுடனும்னு வைரகியதொட சேகப்பு களர்
கட்டாம் போட்டா சாட்டாய போட்டுக்குட்டு என் பைக்கோ ஸ்டார்ட் பண்ணி
கொழம்பிட்டேன்...!! ( ச்சே...இனிமே ஜாக்கி சேகர் அண்ணன் ப்ளாகு பக்கமே போக
கூடாது..அதே மாதிரி வருது...)
இதுக்கு
முன்னாடி வந்த ரெசிடென்ட் ஈவில் படங்கள்ல என்னத்த எடுத்தாங்கேலோ அதையேதான்
இதுலயும் எடுத்துருக்காங்கே...!! அதே ரெத்தம், அதே துப்பாக்கி, அதே மனுசன
கடிக்கிற வைரசால பாதிக்கப்பட்ட மனுசங்கே...!! என்ன...இதுல கொஞ்சம் அம்மா
சென்டிமென்ட்ட கலந்துருக்காங்கே...!! மத்தபடி ஒன்னும் புதுசு இல்லைன்னேன்...!!
அதுலயும் இந்த
படத்துல அந்த ஹீரோயின் ரொம்ப மோசமான பொம்பளையா இருக்குங்க...! துப்பாக்கிய
எடுத்துச்சுன்னா நல்லவன் கெட்டவன் வித்தியாசம் தெரியாம எல்லாரையும் சுட்டு
கொன்னுருது...!! இதுக்கு நம்ம முதலமைச்சர் தேவலாம் போலருக்கு...!! மக்களுக்காக
போராடரவங்கள மட்டும்தான் குறி வெச்சு சுட்டு கொல்லுவாங்க...!!
இதே மாதிரி
வைரஸ் நம்ம தமிழ்நாட்டுல பரவிருந்தா வைகோ கம்பளி போர்வைய எடுத்து போர்த்திகிட்டு
ரோட்ல படுத்து போராடிருப்பாறு...! ஆனா, கதை
நடக்கறது வேற எங்குட்டோங்கறதால அண்ணனால போக முடியாது...!! மதிமுக அன்பர்கள் உடனே
டென்சன் ஆகி கேக்கலாம்..!! ஈழ தமிழர்களுக்காக எதோ ஒரு மொழி தெரியாத ஊர்ல போய்
ரோட்ல நின்னு போராட்னவண்டா என் தலைவன்... நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனைனா
அவந்தாண்டா மொதொள்ள வந்து நிப்பான்னு...!! வாஸ்தவந்தாம்..!! யாரு இல்லைனா...!!
நம்ப தமிழ்நாட்டு மக்களுக்கு சூடு சொரன இருந்து நல்லது கெட்டது தெரிஞ்சிருந்தா
என்னிக்கோ வைகோவ ஜெய்க்க வெய்ச்சு ஆட்சில உக்கார வெச்சிருக்க மாட்டாங்களா...? அரசியல்ல மக்களுக்காக
போராடறது முக்கியம் இல்ல ப்ரதர்...பெர்பார்மன்ஸ் தான் முக்கியம்...!! இப்ப நாங்க
உண்ணாவிரதம் இருக்கல...நாக்குக்கும் பங்கம் இல்லாம, குடலுக்கும் பங்கம்
இல்லாம...!! மொதொள்ள அரசியல் எப்டி பண்றதுன்னு கத்துக்கங்கடே...அப்பறம்
ஆட்சிக்கு வரலாம்..!!
அதுவும் இல்லாம
அந்த புள்ள இம்புட்டு போராடி அந்த வைரஸ் பிரச்சனைய தீர்க்கனும்னு தேவையே
இல்லைங்கறேன்...!! நேத்து செங்கல்பட்டு பொதுக்கூட்டத்துல பேசும்போது சீமான் அண்ணன்
சொன்னாப்டி...!! பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி நாம் தமிழர் இயக்கத்தோட போதுகூட்டதுல
கலந்துக்கறதுக்காக தான்சானியா நாட்டுக்கு அண்ணன் போயிருந்தப்ப அந்த நாட்டு பிரதமர்
அண்ணன் தனியா கூப்புட்டு சொல்லிருக்காப்ள...!! இந்த மாதிரி இந்த மாதிரி
தம்பி...இதான் நெலமை...எனக்கப்ரம் நீதான் தம்பி இந்த நாட்டை காப்பாத்தி நல்லபடியா
வழிநடத்தனும்னு...! ஆனா அண்ணன் உடனே பாசத்தோட மருதலிசிடாப்லாயாம்...! ஏற்கனவே
ரெண்டு மூணு நாட்டை நாந்தான்னேன் காப்பாத்திகிட்ருக்கேன்...எனக்கு டைம்
பத்தாதுன்னு...!! (வேணும்னா அண்ணன்ட்ட தான்சானியா பிரதமர் கெஞ்சறத போட்டோ எடுத்து
வெச்சிருக்கோம்..ரிலீஸ் பண்றோம்..) அப்பேற்பட்ட எங்க அண்ணன் அந்த ரெசிடென்ட் ஈவில்
வைரஸ்கிட்ட ஒரு அரை மணி நேரம் பேச விட்டா போதும்..!! பாதிக்கப்பட்ட எல்லாருக்கும்
மருந்து வாங்கி குடுத்து பிரச்சனைய பைசல் பண்ணிவிட்டுட்டு வந்துருவாப்ள...!! ஆனா
அரை மணி நேரத்துக்கு மேல அண்ணன அந்த வைரஸ்கிட்ட பேச விட்ராதீங்க... அந்த வைரஸ் பூச்சி இவர் பேச்ச கேட்டு கடுப்பாய்ரும் ..! அண்ணனும்
கடுப்பாகி அந்த வைரஸ் பூச்சிய குத்தி கொல்ல பாய்ஞ்சிருவாப்டி...!! அப்பறம் தேவை
இல்லாம அந்த பூச்சி அண்ணன முழுங்கி கக்காவோட கழிஞ்சிவிட்ற வரைக்கும் வெயிட் பண்ணி
அப்பறம் துடைச்சு கூட்டிட்டு வர்ற மாதிரி இருக்கும்....!!
பைட்லாம் நல்லா
எடுதுருக்காங்கே இந்த படத்துல..அதுலயும் ஒரு தாடிக்காரன் க்ளைமாக்ஸ் பைட்ல யாருமே
இல்லாத எடத்த பார்த்து முகத்த டெர்ரரா வெச்சுக்கிட்டு பார்க்கறவெங்களுக்கு
களுக்குன்னு சிரிப்பு வர்ற மாதிரி கத்திகிட்டு சுட்டுகிட்ருந்தான்...! பாமக காரனா
இருப்பான் போல....!! ( கடைசீல அந்த வைரஸ் பூச்சி அவன மூஞ்சிலையே நக்கி
கொன்ருச்சு...)
அப்பறம் ஒரு
விஷயம் சொல்ல மறந்துட்டேன்...அது ஏன்னு தெரியல..அந்த வைரஸ் பூச்சிய க்ளோஸ் அப்ள
காமிக்கும்போதெல்லாம் எனக்கு என் கேப்டன் விஜயகாந்த் ரொமாண்டிக்கா நடிக்கற தமிழ்
பட சீன்லாம் ஞாபகம் வந்துச்சுன்னு தெரியல..!! நல்ல கண் டாக்டரா பார்த்து காத
காட்டனும்...!!
மொத்ததுல
இதுவரைக்கும் வந்த ரெசிடென்ட் ஈவில் படத்துலையே இதான் செம மொக்க படம்...!! (
வினுச்சக்கரவர்த்தி தீர்ப்பு சொல்லிடாப்ள...பஞ்சாயத்து கலையட்டும்...)
சனிகிளமைல
ரெண்டு ஹெனிக்கேன் அடிச்சும் தூக்கம் வரலைனா இந்த படத்த போய் பாருங்க..!!
என்னை மாதிரி...!!
வெளியூர்க்காரன்
நல்ல அலசல், விரிவான விளக்கம். பதிவு அருமை (இண்ட்லி-0, த.ம. 0)
மிக சரியாக அனைத்து நவீனங்களும்...
கலந்து அருமையாக சமைக்கப்பட்ட...
பதிவு....தோழர்....
இதை நான் மனப்பாடம் செய்து கொள்கிறேன்...தோழர்...!!!
ஆங்....சொல்ல மறந்துட்டேன்...
இப்படிக்கு,
ஒளிவட்ட இரட்டை(!!!???) பதிவர்கள்...
இதுல அன்னா ஹஸாரேக்கு ரோல் எதுவும் இல்லையா பாஸ்?
இந்த பதிவு மிக அழகாக பெண்ணியம் பேசுகிறது!
(பட்டாபட்டி எழுதுன பதிவை காலைல படிச்சதுக்கப்புறம் எழவு ஒரே கேரா இருக்கு...கருமம் புத்தி ஒன்னு நினைச்சா கை வேற ஒண்ணு டைப் அடிக்குது!)
@ நாய் நக்ஸ்:
சம காலத்துக்கும் சமையலுக்கு என்னய்யா சம்பந்தம்? விட்டா வெளிக்கும் விளக்கு பிடிக்கிறவனுக்கும் சம்பந்தம்ன்னு சொல்லுவ நீ. ஏலேய் வெளி, இவன விட்டுறாத. :)
வெல் எள்ளலாக சொல்வதென்றால் அமெரிக்க திரைப்படம் ஒன்றைக் கொண்டு சமகால தமிழ் அரசியல் சூழலை பகடி பண்ணியிருக்கிறீர்கள் எனலாம் , துள்ளலாக சொல்வதென்றால் தமிழினத் தலைவர்களின பாங்கைக் கொண்டு ஒரு ஏகாதிபத்திய திரைப்படத்தின் குறியூடுகளை சிதறடித்திருக்கிறீர்கள் எனலாம். வாழ்த்த்துக்கள். எனக்கு இட்லி பிடிக்காது.
எங்களுக்குக் கூடதான் புதினா சட்னி புடிக்காது!! அதுக்கு இப்ப என்ன பண்ணனுங்கற?
யோவ்..அவனே குடிச்சுட்டு ஒரு மொக்கை படம் பார்த்துட்டு இருக்கறவன் உயிரை வாங்கற மாதிரி எழுதிட்டு இருக்கான்... இதைப் போய் குறியீடு , பீடா பாங்கு... வௌவால்ன்னு என்னமா ஃபீல் பண்ணிருக்க...! தெய்வம்யா நீயி!
எள்ளலா சொல்லுறது எச்சி துப்பிகிட்டே சொல்லுறது எல்லாம் எனக்கு தெரியாதுண்ணே. ஏகாதிபத்தியம்ன்னா என்னன்னே? இந்த எக்மோர் பக்கத்துல உருண்டையா விப்பானுகளே அதுவா?
@ரெட்ட...
ஏலேய், நீ விடு. அடுத்து அண்ணனுக்கு கூட்டல் பிடிக்காது. கழித்தல் தான் பிடிக்கும்ன்னு எல்கேஜில இருந்து ஆரம்பிப்பாரு பாரு. நீ ஆரம்பிண்ணே. ஆனா எதுக்கும் எட்டடி தள்ளி நின்னே ஆரம்பி. :)
@ ரெட்ட..
குடிச்சிட்டு வந்தாலும் குல தெய்வமா கும்புடுற பண்பாடுய்யா அண்ணனுக்கு. மன்னிப்பு கேளுய்யா நீ முதல்ல.
Rasigan vetri said...
வெல் எள்ளலாக சொல்வதென்றால்
////////////////////
எதை சொன்னாலும் வாயால சொல்லிப் பழகிக்குங்க பாஸ்.. ஏன் வெல் எள்ளலா எல்லாம் சொல்றீங்க...
(தக்காளி ..எந்த டிஷனரியை புரட்டுனாலும் இதுக்கு மட்டும் அர்த்தம் வெளங்கவே இல்ல!)
@ரெட்ட..
அண்ணன் வெல் எள்ளலாவும் சொல்லுவாரு, வெளக்கமாறு மாதிரியும் சொல்லுவாரு. அதுக்கு இப்ப என்ன பண்ணனும் சொல்ற? அண்ணே, நீ சொல்லுன்னே. :)
வௌவாலா சொல்றதுன்னா என்னன்னு தெரிஞ்சிக்காம தூக்கம் வராதேய்யா!
நாய் நக்ஸ் said...
மிக சரியாக அனைத்து நவீனங்களும்...
கலந்து அருமையாக சமைக்கப்பட்ட...
பதிவு....தோழர்....
இதை நான் மனப்பாடம் செய்து கொள்கிறேன்...தோழர்...!!!
///////////////////////////
எக்ஸாமுக்கு படிக்காம ஊர்சுத்திட்டு அரியர் வைக்கிற மொள்ளமாரி... எங்க வந்து எதை மனப்பாடம் பண்ணுது பாரு!
"வெளி எழுதுனதை மனப்பாடம் பண்ணான் ஒரு பித்தளை மாத்தி"ன்னு சரித்திரத்துல எழுதிறப் போறாய்ங்கடே!
அதுக்கு என்ன பண்ணனும்ன்னு சொல்ற நீ? பல்லு தேய்க்காம பொங்க சோறுக்கு அலையாதீங்கடான்னு அண்ணன் எதுனா புரட்சிகரமா அடுத்து சொல்லுவாரு. தாங்குவியா நீ? :)
இந்த பக்கமும் இனிப்பாக இருந்தது.
எஸ்.கே said...
இந்த பக்கமும் இனிப்பாக இருந்தது.
////////////////////////
கொஞ்சம் உப்பை அள்ளி வாய்ல போட்டுக்கங்க பிரதர்... சரியாப் போயிரும்!
@ரெட்ட..
ஏலேய், அண்ணன் அரியர் வைப்பாரு. அன்ட்ராயர் போட மறப்பாரு. அதெல்லாம் உனக்கு எதுக்கு? முதல்ல புதினம்ன்னா என்னன்னு அவன்கிட்ட கேளு நீயு. சரியா புதினா சட்னியும் புல்லுத் தோசையும்ன்னு சொல்லுவான் அவன் கிட்ட போய் அரியர் கொரியர்ன்னுகிட்டு கன்ப்யூஸ் பண்ணிக்கிட்டு. கண்ப்யூஸ் ஆனா அண்ணன் காண்டம் ஆகிடுவாரு ஆமா. :)
எஸ்கே அண்ணே, சீக்கிரம் எஸ் ஆயிருங்கன்னே. இவனுக மோசமான பசங்க. கொஞ்ச நேரத்துல எனிமா என்ன டேஸ்ட்ல இருக்கும்ன்னு கொஞ்சம் ட்ரை பண்ணி சொல்லுங்க பிரதர்ன்னு எக்குதப்பா கேப்பாணுக. :)
வெளியூரோட அந்தப் பக்கம் என்ன டேஸ்டோ ..யாருக்குத் தெரியும்!
பிரபால பதிவார் சார் நீங்க!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல அலசல், விரிவான விளக்கம். பதிவு அருமை (இண்ட்லி-0, த.ம. 0)
//////////////////////////
நாம எல்லாரும் கும்பலாப் போயி நீ மட்டும் தனியா சூசைட் பண்ணிக்கிறியா?
ஏலே, அண்ணன பத்தி என்ன நினைச்சே? பாய்சன் கொடுத்தாலும் அண்ணன் பதறாம குடிப்பாரு. ஆனா என்ன பல்லு தேச்சுட்டு மட்டும் குடிக்க சொல்லாத ஆமா.
ஆரம்பிச்சுட்டாங்கப்பா:-))
ரெஸிடெண்ட் ஈவில் படம் சன் டீவில போட்டா வைரஸ் பேய் வர சீன் எல்லாத்தையும் கட் பண்ணிடுறாங்க. மொத்தப்படம் 1 மணி நேரம் கூட வராது (அதில் பாதி விளம்பரம்). கதையும் புரியாது. படமும் பார்த்த மாதிரியே இல்ல..
யோவ் இலுமி... இது உண்மைலயே சினிமா விமர்சனம்ன்னு நினைச்சிட்டு வந்து பேசிக்கிட்டுருக்கார்யா அண்ணன்...!
அண்ணேன் வெளியூர்காரனுக்கு இங்கிலீஷ் படம் பார்க்கத் தெரியாதுண்ணேன்! அரை போதைல வேற படம் பார்த்துட்டு போஸ்டர்ல பார்த்த ரெஸிடன்ட் ஈவில்க்கு விமர்சனம் எழுதிருக்காப்லண்ணேன்!
ஓ அதான் அரசியல்வாதிங்க பேரா வருதேன்னு பார்த்தேன்.. ஆனா வெளியூர் சாருக்கு அரசியல் எழுத வராது, எல்லாம் பட்டா சார்தான் எழுதித் தரதாகவும், ரெட்டை சார் சுமாரா விமர்சனம் எழுதுவாரு ஆனா இலுமி சார் ரேஞ்சுக்கு அவர் ஏணி வச்சாலும் எட்டாதுன்னுலாம் சொன்னாங்க... உண்மையா இருக்குமோ?:-)
@எஸ்கே...
கப்பு கப்புன்னு கரண்ட்டு கட்டாகுற இந்தக் காலத்துலயும் கதை கட்டாவுதுன்னு கவலைப்படுறீங்க பாருங்க. இந்த டெடிகேஷன் தாண்ணே உங்ககிட்ட பிடிச்ச விசயம். எலேய் ரெட்ட, எதுக்கும் அண்ணன் விலாசத்த விலாவாரியா வாங்கி வை. பொழுது போவல்லன்னா அப்பப்ப பொலி போட்டுட்டு வரலாம். இது ஓடுற பீஸா தெரியல.கரண்டு இல்லன்னாலும் நின்னு அடிவாங்குற பீஸா தெரியுது. :)
வெளியூரு..
கலங்கிப்போய் இருக்க போல.. கவலைப்படாதே மச்சி...
எங்க கட்சில சேரு...!!!சீக்கிரமே... உறுப்பினர் அட்டைய கூரியர்ல அனுப்பி வைக்கேன்..
போதைல பதிவு எழுதுனாலே இதான்யா பிரச்சனை..!! தக்காளி பதிவு எழுதி இலக்கிய சேவை பண்ணதையே மறந்துட்டு இன்னும் தூங்கிகிட்ருக்கேன் ..! :)
Rettaival's Blog says:
எஸ்.கே said...
இந்த பக்கமும் இனிப்பாக இருந்தது.
////////////////////////
கொஞ்சம் உப்பை அள்ளி வாய்ல போட்டுக்கங்க பிரதர்... சரியாப் போயிரும்!//
அப்பவும் நாக்குல இனிப்பாவே இருந்துச்சுன்னா பால்பாயாசுத்துல பாலிடால கலந்து வாய் கொப்புழிச்சு பாருங்க.!! அப்பவும் கேக்கலைனா நடு நாக்குல க்ரூட் ஆயில பூப்போல தடவி பத்த வெச்சுருங்க...!! அதுகப்ரம் எதுவும்மே இனிப்பா இருக்காது..!!! :)
ஏன் வெளியூர் பிரதர் கமெண்ட் ஏரியால யாரையுமே காணோம்?
ஏன் வெளியூர் பிரதர் கமெண்ட் ஏரியால யாரையுமே காணோம்?//
சாரி மச்சி.. கொஞ்சம் அசந்தாப்படி தூங்கிட்டேன்..
ஏன் மச்சி.. எங்க அணுகுண்டு நாராயணசாமிக்கு வயித்துல போகுதா?ஹிஹி
@@@Rettaival's Blog says:
ஏன் வெளியூர் பிரதர் கமெண்ட் ஏரியால யாரையுமே காணோம்? //
வெயிட் பண்ணுங்க ப்ரதர்...!! எந்த லூசாச்சும் வந்து வாய குடுக்கும்...!! :)
@@@முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
ஏன் மச்சி.. எங்க அணுகுண்டு நாராயணசாமிக்கு வயித்துல போகுதா?ஹிஹி.///
யோவ் பட்டாப்பட்டி...!! கக்கூசுக்கு ஏன்யா கக்கூஸ்ன்னு பேர் வந்துச்சு...?? :)
அன்பு வெளியூரு...
இனிமே போஸ்ட்டு போட்டீனா, கொஞ்சம் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கவும்... மொய் செய்ய வசதியா இருக்கும்...
நன்னி....
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News
Hii, This is Great Post !
Thanks for sharing with us!!!!
I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
Best Digital Marketing Agency in Chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Brand makers in chennai
Expert logo designers of chennai
Best seo analytics in chennai
leading digital marketing agencies in chennai
Best SEO Services in Chennai
buy Pain Pills online
buy Roxicodone online
buy Xanax online
buy Roxicodone 30mg online
buy Adderall and Hydrocodone online
buy Medical Marijuana online
buy Weed online
BUY LSD BLOTTERS online
buy OXYCODONE online
buy Norco online